please suggest me

ஹை, என் மகள் வயது 1 1/2. அவள் தண்ணி, பால் குடிப்பதற்கு மிகவும் படுத்துகிறாள். பூஸ்ட், ஹார்லிக்ஸ் என்றால் கூட 50 மிலி தான். ஜுஸ், இளநீர் அறவே தொடவே மாட்டாள். தயவு செய்து இதற்கு தீர்வு சொல்லுங்கள்.

ஹாய் ஜெயா
எங்க வீட்டு பக்கத்தில் இப்படி ஒரு குட்டி உண்டு..என் மகளும் சின்னதில் தண்ணீர் சுத்தமாக குடிக்க மாட்டாள்..இப்ப 3 வயதில் குடிக்க பழகிவிட்டாள்.
வெளியே கூட்டிபோய் கடைகளில் காணும் நல்ல கலர் கலரான கப்பை குழந்தையின் முன்னேயே கேட்டு எடுங்கள்..அந்த டிசைனுக்காகவே குடிக்கலாம்...தண்ணீர் பாலை லேசான குளிர்ச்சியாக அல்லது சூடாக எப்படி விரும்புதோ அப்படி கொடுத்து பார்க்கலாம்..வின்டெருக்கு அல்லது வீட்டில் ஏ சி எப்பவும் போட்டு வைத்திருந்தாலும் அவங்களுக்கு தாகம் தெரியாது...பருத்தி துணி போட்டு விட்டு ஏ சி ஆஃப் பன்னிவிட்டு விளையாட விடுங்க..கொஞ்சம் வியர்த்தாலும் குடிக்க ஆரம்பிக்கும்..என் மகள் இப்படி தான் பழகினாள்.இப்ப இன்டெரெஸ்ட் இல்லாதது தான் காரணம்...தாகம் எடுத்து குடித்து பார்த்தால் அவங்களுக்கே ஒரு இன்டெரெஸ்ட் வரும்.
இன்னொரு ட்ரிக் பன்னிக் கொண்டிருந்தேன் மகளுக்கு அவளுக்கு பிடிக்காத எதாவது சாப்பாட்டை என் கைய்யில் எடுத்துட்டு அவ கைய்யில் தண்ணி கொடுத்துட்டு என் கைய்யில் உள்ளதை ஊட்டுவேன் அதை சாப்பிடாமல் இருக்கவே தண்ணியை குடிச்சுட்டே இருப்பா:-D

நன்றி thalika akka.

feed panreengala....? ena thai paal kudikum kulandhai thanneer romba thevai varadhu adhanaala kudika mattaaanga. same prob. en ponnum ava vilayaditu vandhu en madiyil paduthiduvaa. water,milk edhuvum kudikalanu nnaaan romba feel pannen. ipo oru sip bottle vaithu vitten venumna kudipa. paalai ilam soodaa vera fovour mathi kudunga..like dates, fig,apple bnana ,carrot, ipdi mix panni milk shake kudunga... try panni paarungal...aduvum mudiyalanaa orange juice,sathugudi juice,watermeon juice kudunga.

மேலும் சில பதிவுகள்