சமைத்து அசத்தலாம் - 14, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 13, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -14 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை நர்மதா(Nila 2006,145), ரசியா(rasia,65) இருவருடையதையும் சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5
(arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30)
இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (19/05) முடிவடையும். புதன்கிழமை(20/05), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

மைதிலி, சந்தனா, தனிஷா, திருமதி ஹூசைன், லதாஅக்கா, சவூதிசெல்வி, ராஜி, சுஸ்ரீ, ஜலீலாக்கா, வின்னி, மேனகா, ஜஸ்மின், ரேணுகா, அம்முலு, மாலி, கவிஎஸ், கீதாச்சல், வத்சலா, விஜி, துஷ்யந்தி, ஆசியா, இமா, மனோஅக்கா, ஜஸி அனைவருக்கும் மற்றும் ஸாதிகா அக்கா அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் வந்துட்டேன்,நர்மதாவின் பிரைட் இட்லி,ரெம்ப ஈசியா முடிந்தது,

அதிரா இத்தலைப்பு முதல் நாளே முகப்பில் இல்லை,எங்கடா கானாம் என்று தேடி வந்தேன்,எனக்கு ரெம்ப பொறுப்பு என்று பெரிய ஐஸ் எல்லாம் வைச்சுட்டீங்க,இந்த முறையேனும் இளவரசி பட்டம் ஆவாது வாங்குங்கள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அட எல்லாரும் எங்கப்பா போனீங்க,முதல் நாளே இத்தனை அமைதியா இருக்கு,இப்படி இருந்தா என்னாவது,வாங்க எல்லாரும் அதிரா வருவதற்க்குள்,எல்லாரும் அரட்டை பக்கம் இருக்கீங்களா?இல்லை டயட்ன்னு எல்லாரும் ஓடிட்டீங்களா?எப்படியாவது பிளைட்டை பிடித்தாவது எல்லோரும் சீக்கரம் வாங்க

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் அதிரா&ரேணுகா நலமாக இருக்கிறீர்களா? நர்மதாவின் சமையலை ஆர்வத்துடன் எதிர்பார்த்தேன். வந்தவுடன் செய்து பதிவு கொடுக்கிறேன். வெள்ளை அப்பம், இது இரவு செய்தது. (ஈசி&நல்ல டேஸ்ட்) இன்று காலையில் செய்துவிட்ட சமையல். அவை வெண்டைக்காய் குழம்பு,வாழைக்காய் பொரியல், பீன்ஸ்-தக்காளி கூட்டு, கரட்சம்பல், டோபு பொரியல்., கபேஜ் வறுவல்.( விருந்தினர் வருகை எனக்கு ப்ள்ஸ்).எனக்கு ஒரு சந்தேகம் நான் நேற்று நர்மதாவின் குறிப்பில் இருந்து 3 குறிப்பு செய்தேன். அதை பதிவில் போட்டால் கணக்கில் எடுப்பீர்களா? அவை வெள்ளை அப்பம், தொதல்3, வாய்ப்பன். நன்றி அன்புடன் அம்முலு.

ரேணு உங்க குரல் கேட்டு ஓடி வந்தேன் நர்மதாவின் பயற்றங்காய் கறி, ஆட்டா மா தோசை செய்தேன். இரண்டுமே சூப்பர் பின்னூட்டம் கொடுத்தாச்ச்சு.

அதிரா இந்த முறை எனக்குத்தானே டிரைவர் சீட். கண்டிப்பா தரனும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அப்பாடா நான் கூப்பிட்டு 2 பேராவது வந்தீங்களே மற்றவர்களை காணாம் எங்க போய் தேடினா கிடைப்பாங்க என்று தெரிஞ்சவங்க சொல்லுங்க

அம்மலு திங்கள் காலையில் இருந்து தான் கணக்கெடுப்போம்.ஒரு வாரம் கழித்து செவ்வாய் இரவு சமையலோடு கணகெடுப்பை நிறுத்திடுவோம்,இந்த முறை ஆரம்பமே அசத்தலா இருக்கு வாழ்த்துகள்,இன்னும் தொடர்ந்து செய்யூங்கள்

தனிஷா கூப்பிட்டவுடன் வந்திட்டீங்க,நன்றி,டிரைவர் சீட்டுக்கு நான் வந்துட்டேன்,நீங்க கேட்டதால உங்களுக்கு தரேன்,அப்பறம் அதிரா வந்து சத்தம் போடுவாங்க,பின்னாடி நின்னு எல்லாத்தையும் கூப்பிடாமல் முன்னாடி போயிஜம்முன்னு உட்காந்திட்டேன்னு திட்டுவாங்க,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு ரேணுகா. என்க்கு தெரியும். என்றாலும்கேட்டேன். அதனால்தான் அப்பமும், வாய்ப்பனும் உங்களுக்கு பின்னூட்ட்ம் கொடுத்தவுடன் செய்துவிட்டேன். எனது பதிவில் அப்பம்,வாய்ப்பன் சேர்க்கவும். (அப்பத்தை படம் எடுத்திருக்கின்றேன். அ.அ.வைக்கிறேன்.) நன்றி.அன்புடன் அம்முலு

அதிரா இன்று மதிய சமையல் நர்மதாவின் முட்டைகோஸ் வறுவல்,(கேபேஜ் வறை)ரசியாவின் முட்டைகோஸ் கடலைபருப்பு கூட்டு

அம்மலு ஆர்வத்துடன் செய்கிறிர்கள்.மிகவும் நன்றி

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் தோழிகளே நான் இந்தியா போய் இருந்த போது ஒக்கனேக்கல் என்ர இடத்தில் மீன் சாப்பிட்டேன் (அங்க சமைக்க நிறய அம்மாமார் இருக்றார்கள் அவர்களிடம் மீன் வாங்கி கொடுத்து சமைக்க சொன்னோம் )நல்ல ரேஷ்ரா இருந்தது அது போல் யாருக்கும் சமைக்க தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஷ் ( அடுத்த கிழமை குழந்தை பெற இருக்றேன்ப்பா இந்த கர்ப்பிணி பெண்னின் ஆசையை நிறைவேற்ருங்க)

அன்புடன்
துஷி

அதிரா, ரேணுகா - இன்று நான் செய்யப்போவது -ரஸியா- பச்சைபயிறு குழம்பு, மற்றும் நர்மதா - கேபேஜ் வறை

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்