ஃபனல் பொம்மை

தேதி: May 11, 2009

5
Average: 5 (2 votes)

 

ஃபனல்
மீடியம் ஃபர்(ஆரஞ்சு கலர்)
ஷாட் ஃபர்(கருப்பு)
ஸ்கெச்
பொம்மை
நூல்
ஊசி
க்ளு
ப்ரெளன் சாட்
கத்திரிக்கோல்
மணி, கல்
லேஸ்
குண்டு ஊசி

 

முதலில் ஃபனலில் உள்ள ஸ்ட்ரா போன்று இருக்கும் குழாய் பகுதியை மட்டும் வெட்டி எடுத்து விடவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஃபனலின் சுற்றுபுறத்திற்கு படத்தில் கொடுத்திருப்பது போல ப்ரெளன் சாட்டை வெட்டி எடுத்துக் கொண்டு அந்த சாட்டை மீடியம் ஃபர்ரின் பின்புறத்தில் வைத்து 7 பாகங்கள் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டிய 7 பாகங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து தைத்துக் கொள்ளவும். தைத்த பிறகு ஃப்ர்ரை முன்புறமாக திருப்பி வைத்துக் கொள்ளவும்.
ஃபனலில் வெளிப்புறத்தை சுற்றிலும் கம் தடவி அதில் தைத்த ஃபர்ரை ஒட்டவும். ஒட்டிய பிறகு கையால் நன்கு அழுத்தி விடவும்.
பொம்மையின் இரண்டு கால்களையும் முழங்கால் வரை வெட்டிக் கொள்ளவும். பிறகு பொம்மையின் மேல் உள்ள துணி மற்றும் தலையை எடுத்து விடவும்.
றளவிற்கு சதுரமான ஒரு கருப்பு ஷாட் ஃபர் துணியை எடுத்துக் கொள்ளவும். அதை நான்காக மடித்து வலது ஓரத்தில் உள்ள மேல் முனையை பொம்மையின் தலைப்பகுதி கொள்ளும் அளவிற்கு சிறியதாக வெட்டி விடவும். பிறகு அந்த சதுரமான துணியை பிரித்து பார்க்கும்பொழுது நடுவில் மட்டும் துளையிட்டது போல் இருக்கும்.
பொம்மையை ஃபனலின் துளையின் வழியாக உள்ளே விடவும். பிறகு வெட்டிய கருப்பு ஷாட் ஃபர் துணியின் ஒரு மடிப்பை விரித்து அதில் நடுவில் உள்ள துளையை கழுத்து பகுதியில் மாட்டவும். பொம்மையின் கையின் கீழ்பகுதியில் உள்ள இரண்டு பக்கவாட்டையும் நூலால் தைத்து விடவும்.
பொம்மையின் தலையில் தொப்பி போல வைக்க உல்லன் மேட்டை பொம்மையின் தலை அளவிற்கு சுருட்டி இரண்டு முனைகளையும் தைத்துக் கொள்ளவும். அந்த உல்லன் மேட்டில் அதே அளவிற்கு ஆரஞ்சு கலர் ஃபர் துணியை வெட்டி அதனுடன் வைத்து தைத்து விடவும்.
பொம்மையின் தலையை கழுத்து பகுதியுடன் சொருகி அதற்கு மேல் இந்த தொப்பியை வைத்து தலையுடன் சேர்த்து தைக்கவும். லேஸைக் கொண்டு பெல்ட் போல் வைத்து நடுவில் பின் பண்ணவும். ஆரஞ்சு கலர் ஃபர் துணியை சிறியதாக வெட்டி கழுத்தில் சுற்றி வைக்கவும்.
சட்டையில் மணி மற்றும் கல் வைத்து ஒட்டவும். சிறு சிறு மணிகளை நூலில் கோர்த்து இரண்டு கையிலும் கட்டி விடவும். ஜமிக்கியின் ஒட்டையில் குண்டு ஊசியை வைத்து காதில் தோடு போடவும். பிறகு கம் வைத்து நெற்றியில் பொட்டு வைக்கவும்.
அழகிய ஃபனல் பொம்மை தயார். குழந்தைகள் வைத்திருக்கும் பழைய பொம்மைகளைக் கொண்டு இதைப் போல் நாமே நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொம்மையை வடிவமைத்து கொடுத்து அசத்தலாம்.
இந்த அழகிய ஃபனல் பொம்மையை செல்வி. வைஷ்ணவி அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். இவர் கைவினை பொருட்கள் செய்வதில் இருந்த அதீத ஆர்வத்தினால் முறையாக பயிற்சி பெற்று இதுப் போல பல விதமான கைவினைப் பொருட்களை செய்துள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் வைஷ்ணவி,
உங்க‌ பொம்மை மிக‌வும் அழ‌காக‌ உள்ளது.ரொம்ப‌ பொறுமையாக‌ செய்து இருப்பீர்க‌ள் போலிருக்கிற‌து.

அன்புட‌ன்
உமா.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta