ரண பீன்ஸ் கறி

தேதி: May 12, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

ரண பீன்ஸ் - 250 கிராம்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுதூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
பால் - 100 மில்லி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு நெட்டு
பூண்டு - ஒன்று
தண்ணீர் - 150 மில்லி
எலுமிச்சை - 3 தேக்கரண்டி


 

பீன்ஸ் கறி செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
பீன்ஸ், வெங்காயம், பூண்டு, கிழங்கு ஆகியவற்றை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பீன்ஸ், கிழங்கு, பூண்டு மற்றும் உப்பு போட்டு நன்கு பிரட்டி விடவும்.
தேவையானவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் அளவு தண்ணீரை இந்த காய் கலவையில் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
காய் வெந்ததும் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
அதன் பின்னர் பால், கரம் மசாலா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டவும்.
நன்கு பிரட்டலாக ஆனதும், இறக்கி வைத்து அதில் எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி விடவும்.
எளிமையான முறையில் செய்யக்கூடிய சுவையான ரண பீன்ஸ் கறி ரெடி. அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தலைப்பை பார்த்ததுமே இது நம்ம அதிராவாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். சூப்பர் வெஜ் ரெசிப்பி. சுவையும் சூப்பராக இருக்கும் என்று பார்க்கும் போதே தெரியுது. நாளைக்கே ட்ரை ப்ண்ணி விடுகிறேன். பிரட்டினாற் போல் இருப்பதால் சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அட்மின்!! அட்மின்!!!
கடைசிப் பந்தியின் கடைசிச் சொல் காணாமல் போயுள்ளது, கொஞ்சம் இணைத்துவிடுங்கோ.

தனிஷா மிக்க நன்றி. இதே முறையிலே எந்த பீன்ஸ் கறியையும் செய்யலாம். குழந்தைகளுக்காகவே மிளகாய் சேர்க்கவில்லை. பெரியவர்களுக்கென்றால், பச்சை மிளகாய் சேர்த்துச் செய்யலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிக்க நன்றி. பிடியுங்கோ பிடியுங்கோ...:)
ஐயையோ புகைக்கூட்டைவிட்டு வெளியே வந்திட்டார்... பிடியுங்கோ... பிடியுங்கோ,.... போனால் கிடைக்கமாட்டார் பொழுதுபட்டால் பிடிக்கமுடியாது... இப்பவே பிடியுங்கோ:).... யோசிக்க நேரமில்லை... ஐயோ ஒத்துழையுங்கோ எல்லோரும் :)...

அதிரா எஸ்கேப்...................:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா மேடம்
ரண பீன்ஸ் கறி சுப்பர் நன்றி.
இப்படி குழந்தயளுக்கு குடுக்கிறமாதிரி பால்கறி நேரம் கிடைக்கும் பொது நிறைய போடுங்கோ ஆவலுடன் எதிர்பர்கிறேன். நன்றி அதிரா மேடம் உங்களுடைய குறிப்புகள் எல்லாமே எனக்கு பிடித்ததாக இருக்கு என்ன கனநல உங்கட சமையல கனேள்ள எண்டு பார்த்தான் இன்று வந்துவிட்டது.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் அதிரா மேடம்
ரண பீன்ஸ் கறி சுப்பர் நன்றி.
இப்படி குழந்தயளுக்கு குடுக்கிறமாதிரி பால்கறி நேரம் கிடைக்கும் பொது நிறைய போடுங்கோ ஆவலுடன் எதிர்பர்கிறேன். நன்றி அதிரா மேடம் உங்களுடைய குறிப்புகள் எல்லாமே எனக்கு பிடித்ததாக இருக்கு என்ன கனநல உங்கட சமையல கனேள்ள எண்டு பார்த்தான் இன்று வந்துவிட்டது.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

என் கறிகள் எல்லாம் பிடித்துள்ளது எனச் சொல்லும்போது எனக்குச் சந்தோஷமாக இருக்கு சுகா, மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இதில் பால் என்பது தேங்காய் பாலா. விரைவில் சொல்லுங்கோ

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா விரைவாகச் சொல்கிறேன். நான் பாவித்தது பசுப்பால். ஆனால் ஊரில் தேங்காய்ப்பால்தான் சேர்ப்போம். இருவகைப் பாலும் பாவிக்கலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் பசும்பால் ஊற்றிதான் செய்தேன். சுவை அருமையாக இருந்தது. மகளுக்கும் ஊட்டினேன். நன்றி அதிரா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா மிக்க நன்றி.
எங்கள் வீட்டிலும் இப்படிச் செய்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா இந்த கறி எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது,நான் பீன்ஸ் சேர்த்து செய்தேன்,காயே திங்காத என் மகன் கூட சாப்பிட்டான்,அவனுக்கு ரெம்ப பிடித்ததில் எனக்கு ரெம்ப மகிழ்ச்சி,மிக்க நன்றி அதிரா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மிகவும் நன்றி ரேணுகா. இது குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும். எங்கள் வீட்டிலும் இதேமுறையில் என்றால் சாப்பிடுவார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த பீன்ஸை செய்து பார்த்தேன் சூப்பர் ...நன்றிமேம்....

வாழு, வாழவிடு..