எப்பொழுது தொடங்கலாம்......எப்படி??????

என் மகளுக்கு 15 மாதம் ஆகிறது. எப்பொழுது "POTTY TRAINING" ஆரம்பிக்க வேண்டும். அவளுக்கு POTTY CHAIR எல்லாம் வாங்கி தூங்குது. POOPY பண்ணின அப்புறம் வந்து என்னிடம் POOPY என்று சொல்கிறாள். யாரவது POTTY TRAININGல் வெற்றி பெற்றவர்கள் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும்.

எல்லாருமே போராடித்தான் வெற்றி பெற்றிருக்கிறோம். அதனால், உங்களுக்கும் "ஆல் த பெஸ்ட்".

எப்பொழுது டாய்லட் போவான் என்று ஓரளவு கணித்திருப்பீ்ர்கள். அந்த சமயங்களில் pottyயில் உக்கார வைங்க. கொஞ்ச நேரம் அவனருகில் இருங்கள். முக்கச் சொல்லுங்கள். செய்து காட்டுங்கள். (ரொம்பவும் முக்கக் கூடாது.)

யூரின் போவதற்கு என்றால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அதில் உக்கார வைத்துப் போகச் சொல்லுங்கள். உறுப்பில் லேசான குளிர் நீர் ஊற்றுங்கள். (இது பழக்குவதற்கு மட்டும்தான். ஊற்றினால்தான் போகும் என்ற அளவுக்கு பழக்கிவிடக் கூடாது.)

மிக முக்கியம், சொல்லிப் புரிய வைப்பது. pottyயைக் காட்டி, அதைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். தரையில் போய்விட்டால், அடுத்த முறை வரும்போது இதில்தான் போக வேண்டும் என்று சொல்லுங்கள்.

ஒன்றேகால் வயதுதான் ஆவதால் கொஞ்சம் சிரமப் பட்டால்தான் பழக்க முடியும். ஆனால் கண்டிப்பாக பழக்கி விடலாம்.

பிள்ளைகளை சின்னதிலேயே சுமார் ஒரு 7 மாதத்திலிருந்தே பழக்கினால் சீக்கிரம் பழக்கி விடலாம்..அதுவே விட்டால் பிறகு ஒரு 2.5 வயதாவது ஆனால் தான் பழக்க கொஞ்சம் ஈசி.
ஆனால் இப்ப முடியாது என்று இல்லை நீங்கள் ஒரு நாள் போட்டியில் விட்டு மறுநாள் போகவே மாட்டேஙிறான் என்று போட்டியை தூக்கிப் போட்டு பிறகு ஒரு மாசம் கழித்து எடுத்தால் அது பழகாது
மனம் தளறாமல் பழக்கியே தீருவேன் என்று நினைத்தால் ஒரு மாதத்தில் பழகிடும்
நிறைய யூ டியூப் வீடியோஸ் உண்டு பிள்ளைகள் பாட்டியில் போவது போல் அதை போட்டு காண்பியுங்க...அதை பாத்து ஆசை வரும்.
ஃப்லஷ் பன்ற மாதிரி யெல்லாம் பாட்டி உண்டே அதை வாங்கி பார்க்கலாம்..முதலில் யூரின் போவதை பாட்டியில் நல்ல பழக்கி விட்டு பிறகு 2 க்கு பழக்கலாம்..நிறைய பிள்ளைகளுக்கு 2 பாட்டியில் போக பிடிக்காது..அதற்கு நீங்கள் அந்த நேரத்தில் டயபர் போட்டபடியே சில நாள் பாட்டியில் உட்கார்ந்து போக சொல்லுங்கள்...அதில் உட்கார்ந்தாலும் முடியும் என்ற நம்பிக்கை குழந்தைக்கு வந்தபின் டயபர் கழட்டி போக சொல்லுங்கள்..
பழகிடுவார் பாருங்க..ட்ரை பன்னிகிட்டே இருங்க.ஒருக்க செய்தால் கூட ஒரே கை தட்டி ஆராவாரம் செய்து கைய்யில் ஒரு மிட்டாய் கொடுங்க..

நீங்கள் சொல்வது போல் சீக்கிரமே ஆரம்பித்திருக்க வேண்டும். இங்குள்ளவர்கள் யாரும் அந்த வயதில் ஆரம்பிகாததால் எனக்கு அந்த விழிப்புணர்வு வரவில்லை. மேலும் அவள் எப்போ தான் பூபி பண்ணினேன் என்று எனக்கு தெரியப்படுத்த ஆரம்பித்திருக்கிறாள். இங்கு diaper இல்லாமல் அலையை விட முடியாது. கார்பெட் பாழாகிவிடும்.

உங்களுடைய யோசனை படி இன்றிலிருந்து potty training ஆரம்பித்துளேன். சுச்செச்ஸ் ஆனதும் கண்டிப்பாக சொல்கிறேன்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

திருமதி மூர்த்தி

அதானே நம்ப ப்ரச்சனை நம் ஊர் பிள்ளைகள் இதை சீக்கிரம் பழகிவிடும் ஏன்னா இஷ்டத்துக்கு ஃப்ரீயா நெனச்ச இடத்தில் போனா துடைக்க அங்கு வசதி இங்கு நமக்கு கார்ப்பெட் அது இதுன்னு பாழாகிடுமோன்னு பயம் அதனால் நாம பயத்தால் பழக்கமுடியாமல் சிரமப்படுகிறோம்
மட்டுமில்லை அல்லாமலும் வெளிநாட்டில் நம்மூரில் இருப்பதை விட ஒரு படி மேல் சுத்தமாக இருக்க தான் விரும்புகிறோம் நம் பிள்ளைகள் சிறுநீர் நம் மேல் சுத்தமாக படாமல் தான் வளர்க்கிறோம்.
டயபரில் விட்டுக் கொண்டே போட்டியில் பழக்குவது கொஞ்சம் சிரமம் தான் ...னேப்பி துணி வாங்கி கட்டுங்கள் லீக் ஆகாத துணியாக வாங்குங்கள் அதற்கு சின்ன ப்லாஸ்டிக் கவர் போல் கட்டிவிடுவதும் வருகிறது அதிருந்தால் கீழ எங்கும் ஆகாது...அப்ப தான் குழந்தைக்கு ஈரம் தெரியும் கொஞ்சம் இன்னும் சுலபமாக பழகும்..ஆனால் நமக்கது மண்டை காய்ச்சல் தான்.
முதலில் இத்தனை மணிக்கொருதடவை போகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அந்நேரத்தில் உக்கார வைய்யுங்கள்...டிவி முன்னால் அவங்களுக்கு பிடித்தமானதை போட்டு விட்டுட்டு போட்டியில் விடுங்கள் இல்லையென்றால் எழுந்து வந்துவிடுவார்கள்..
லேசா belly button ல் அழுத்துங்கள் சில குழந்தைகள் அப்படி செய்தால் போய்விடும்.துணி கழுகிப் போடவே சில நாளுக்கு சரியா இருக்கும் உங்களுக்கு.அப்பப்ப கழுகாமல் ஒரு பக்கெட்டில் தண்ணி நிரப்பி டெட்டால் ஊத்தி வச்சுட்டு நனையும் துணியை உடனே அலாசி விடு அந்த பக்கெட்டில் போடுங்கள்...இரவில் ஒட்டுமொத்தமாக பிழிந்து நல்ல சுடு நீரில் துவைத்து எடுக்கலாம்.அல்லது ஒரு முறை திரும்ப அலாசி விட்டு மெஷினில் சுடு நீர் ஆப்ஷனில் போட்டு துவைத்து எடுத்தால் சுத்தமாகிவிடும்
என் மகளுக்கு யூ டியூப் வீடியோஸ் நல்ல கைகொடுத்தது அதை பார்த்ததும் ஆசை வந்துவிட்டது.இருந்தாலும் போட்டி அவளுக்கு பிடிக்கவில்லை என்பது எனக்கு புரிந்தது அதனால் டாய்லெட் சீட் வாங்கினேன் அதில் உட்கார வைப்பேன் காலுக்கு ஸ்டூளும் வைத்து அவல் முதன்முறை சிறுநீர் கழித்ததும் கைதட்டி அவளையே ஃப்லஷ் பன்ன சொன்னேன்..அவளுக்கு ஒரே சந்தோஷம் பிறகு ஃப்லஷ் பன்னுவதற்காகவே அடிக்கடி டாய்லெட் போக ஆரம்பித்து விட்டாள்...
பிள்ளைகளை புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டம் ரொம்ப சிரமப்பட்டு நாம பழக்க அவங்க மனசுல நெனச்சா அதுக்கு ஒரு நாள் போதும் டக்குன்னு புரிஞ்சுக்குவாங்க..ஆல் த பெஸ்ட்

என் பையன் 2 வயதில் பாட்டியில் நம்பர் 2 போக பழகிவிட்டான். பேம்பர்ஸில் போக அவனுக்கே கொஞ்சம் uneasy ஆக இருந்ததால் பேம்பர்ஸை அவனே கழட்டிவிட்டு ஓடிபோய் பாட்டியில் உக்கார்ந்து விடுவான். நம்பர் 1 க்கு பழக்கத்தான் ரொம்ப நாள் ஆனது. அதுவும் பழக்கும் நேரத்தில் வின்டர் வந்துவிட்டது. அந்தா இந்தா என்று பழக்கியாச்சு.

என் பையனுக்கு சுட்டி டீவியின் சேனல் சாங்கில் வரும் சூரியன் டாய்லெட்டில் உக்காருவதை காட்டினேன் (அய்யே....சூரியன் கை கழுவலையே... என்று உங்கள் குழந்தை கேட்டால் அதை நீங்கள் தான் சமாளிக்கணும்)...அதன் பின் டாய்லெட்டிலேயே போக விரும்பிவிட்டான்.

முயற்சி திருவினையாக்கும், திருமதி மூர்த்தி... வாழ்த்துக்கள்.
With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

வணக்கம்
என் மகனுக்கு 19 மாதம் ஆகிறது.இப்ப 2 நாட்களாதான் potty முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்..என் மகனிடம் நல்ல முன்னேற்றம்.முதல் நாள், poop போவதற்கு lightஆ முக்குகிற மாதிரி முகத்தில் தெரிந்தது, உடனே,potty உட்கார வைத்தேன்,போய் விட்டான்.மறு நாள், அவனே poop போவதற்கு என்னை கூப்பிட்டான்.pee pee பொவதற்கு, இன்னும் பழகவில்லை.முதல் நாள் ,ஒரு மணினேரத்திற்கு ஒருமுறை, அவனை potty உட்காரவைத்து,சிறிது தண்ணீர் ஊற்றினேன்.அடுத்த நாள், potty உட்காரவைத்தாளே போய் விட்டான்.அதிசயம், இரவிலும் போவதில்லை, மதியம் தூங்கும் போதும் போவதில்லை.
ஆனால், நான் proper potty பயன் படுத்தவில்லை.pottyயை stoolஆகவும், potty seatயை நம்முடைய toilet sinkமேல் வைத்து பயன் படுத்தினேன்.நானும் அவனின் 15வது மாதத்தில் முயற்சி செய்தேன்.ஆனால் அவன் , ஒரு சில சமயம் அதில் உட்காருவான், ஒரு சில சமயம் அழ ஆரம்பித்துவிட்டான்.அதனால்,
2 to3 days try பண்ணிவிட்டு, விட்டு விட்டேன்.மறுபடியும், ஒரு தோழியின் ஆலோசனைப்படி, இப்பொழு திரும்பவும் ஆரம்பித்து உள்ளென்.
நீங்கள் முதலில், pottyல் பயம் இல்லாமல்,உட்கார பழக்குங்கள்.அடுத்து poop போவத்ற்கு முன்பு,சிறிய மாற்றம், குழந்தையின் முகத்தில் தெரியும், அப்பொழுது அவளை,potty உட்கார வையுங்கள்.பழகிவிடுவாள்..பிறகு pee pee try பண்ணுங்கள்.இது தான் என் தோழி எனக்கு கூறியது.நல்ல பலன். try பண்ணுங்கள்

என் மகளுக்கு தலை நிமிர்ந்து உட்கார தொடங்கியவுடனேயே நான் potty training ஆரம்பித்து விட்டேன். அதனால் எனக்கு எந்த கஷ்ட்டமும் இருக்கல்ல. 1 1/2 years ஆன பிறகே சொல்லி போக ஆரம்பித்து விட்டால். முடிந்தளவு சின்ன வயதிலேயே தொடங்கினால் easy. ஒரே பெயரில் (நான் choo எனறு தான் சொன்னேன்) தினமும் சொல்ல சொல்ல அவர்களுக்கு விளங்கிவிடும். பிறகு அவர்களாகவே சொல்ல தொடங்கிவிடுவார்கள். முடிந்தளவு 1 hour க்கு ஒரு முறையோ half-an-hour க்கு ஒரு முறையோ potty யில் வைக்கவும். தானாகவே பழகிவிடுவார்கள்.

Lalitha

என் பெண்ணிற்கு 5 மாதம் முடிந்தவுடன் பழக்கினேன் 8 மாதம் ஆஹிரது அதில் உக்கார வைத்தால்தான் போவாள் 6 மாதத்திலிருந்தே பழக்கினால் சீக்கிரம் பழகிடும்

என் பெண்ணிற்கு 5 மாதம் முடிந்தவுடன் பழக்கினேன் 8 மாதம் ஆஹிரது அதில் உக்கார வைத்தால்தான் போவாள் 6 மாதத்திலிருந்தே பழக்கினால் சீக்கிரம் பழகிடும்

உங்களின் அன்பான பதிவுக்கும் அனுபவங்களுக்கும் மிக்க நன்றி. நீங்கள் அனைவரும் சொல்வது போல் செய்கிறேன். வெற்றி அடைந்ததும் கண்டிப்பாக சொல்கிறேன்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்