சிறு பயறு புட்டு

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - ஒரு கப்
முளைவிட்ட சிறு பயறு - 2 கப்
துருவிய தேங்காய் - ஒரு கப்
பூண்டு - 5 பல்
மிளகுப்பொடி - அரை தேக்கரண்டி
சீரகபொடி - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை


 

தேங்காய் துருவல், பூண்டு, மிளகு பொடி, சீரகப்பொடி, மஞ்சள் பொடி இவைகளை ஒன்றாக சேர்த்து அம்மியில் வைத்து நன்கு நசுக்கவும்.
பின் ஊற வைத்த அவலுடன் முளை விட்ட சிறு பயறையும், அரைத்த கலவைகளையும் ஒன்றாக சேர்த்து கிளறி தேங்காய் எண்ணெயை விட்டு சாப்பிடவும்.
ருசிக்கு தேவையானால் சிறிது உப்பை சேர்த்துக் கொள்ளலாம்.


மேலும் சில குறிப்புகள்