குறை மாதக் குழந்தை

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்,

குழந்தைப் பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்குமே பிரசவ அனுபவம் என்பது வாழ்நாள் முழுவதும் நினைத்து இன்புறத் தகுந்தாகவே இருக்கும். எனக்கு முதல் குழந்தை எந்த சிக்கலுமின்றி சுகமாகவே பிறந்தது. இரண்டாவது முறை கர்ப்பம் தரித்தபோது தான் நான் சில பிரச்சனைகளை எதிர்நோக்கினேன். அந்த அனுபவத்தை தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றெண்ணியே இந்தப் பதிவினை தொடங்கியுள்ளேன்.

கர்ப்பகாலத்தின் ஐந்தாம் மாத இறுதியில்(20 weeks) கர்ப்பப் பையின் நீர்க் குடத்தில் ஓட்டை ஏற்பட்டு பனிக்குட நீர் வெளியாகியது. உடனே நான் இங்குள்ள மருத்துவமனையில்(Singapore National University Hospital) சென்று சேர்ந்தேன். பரிசோதித்த மருத்துவர்கள் இதுபோல் நூறில் ஒருவருக்கு ஏற்படுவதுண்டு என்று கூறி, ஒரு சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம் தொடர்ந்து நீர் வெளியானால் குழந்தையை வெளியே எடுத்துவிடுவோம் என்று கூறினர்.
ஆனால் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருந்ததால் குழந்தை வளர அனுமதியளித்தனர்.

இருப்பினும் நீர் தொடர்ந்து வெளியாகிக் கொண்டேயிருந்ததால் ஏழாம் மாத இறுதியில் (29 weeks) ஒரு நாள் பிரசவ வலி ஏற்பட்டு அறுவை சிகிச்சை மூலம் என் பெண் பிறக்க வைக்கப் பட்டாள். பிறந்தபொழுது நுரையீரல் போதுமான வளர்ச்சியடையவில்லை அதனால் மூன்று மாதம் மருத்துவமனையிலேயே(neonatal ICU) இருந்தாள். குறைமாதத்தில் பிறந்ததால் ஏகப்பட்ட பிரச்சனைகளை(Brain bleeding,chronic lung disease, ..) எதிர்நோக்கினாள். செலவழிந்த பணத்திற்கு கணக்கேயில்லை. ஆனால் என் பெண்ணை எனக்கு எந்த குறையுமின்றி காப்பாற்றிக் கொடுத்தனர் இங்குள்ள மருத்துவர்கள்.

தோழிகளே மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேறி விட்டது, அதனால் பயமின்றி பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டும். (நிறைய எழுத வேண்டும் என்றெண்ணினேன், நேரமின்மை காரணமாக இத்துடன் நிறைவு செய்கிறேன். மீண்டும் பிறகு தொடர்கிறேன்).

அன்புடன்
அருள்மதி

அருள்மதி,

உங்களின் மன உறுதிக்கு வாழ்த்துக்கள். இறையருளால் உங்கள் குழந்தை நலமாக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.

முன்னேறிய மருத்துவ வசதிகள் காரணமாக நமது எந்தப் பிரச்னையையும் மனதைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்பது மிகச் சரி. அத்தகைய மருத்துவ வசதிகள் எல்லாருக்கும் கிடைக்கப் பெறுமாறு சூழ்நிலையும், பொருளாதார வசதியும் இறைவன் தந்தருள வேண்டும்.

மதி, குறைப்பிரசவத்தைத் தடுப்பதற்கு கர்ப்பவாயில் தையல் போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் விஷயத்தில் அம்முறை ஏற்புடையதல்ல என்பதால் செய்யவில்லையோ?

எனது மருத்துவத் தோழி கூறக்கேட்டிருக்கிறேன், ஆறு மாதம் நிறைந்தாலே குழந்தையை எந்தக் குறையுமில்லாமல் காப்பாற்றி விடலாம் என்று. ஆனால் (கிட்டத்தட்ட எட்டு மாதத் தொடக்கத்தில்) ஏழு மாதம் ஆன பிறகும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பது அறிந்துகொள்ளவேண்டிய விஷயம்.

ஹாய் அருள்மதி,
உங்களின் அனுபவம் என்னென்று எனக்கு புரிகிறது என் இரண்டு குழாந்தகளும் குறைபிரசவம் தான் முதல் பொண்ணு ஆறுமாதம் பையன்ஏழுமாதம்
இங்குவந்து நிறைய மருத்துவ வசதிஇருப்பதல் எந்தக்குறையும் இல்லாமல் என்கைக்கு கிடைத்தார்கள் அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லவேணும்.உங்கள்ளுடைய எல்லா கஸ்ரத்துக்கும் உங்களுடைய குழந்தைதான் பரிசு சந்தோசமாக இருங்கள்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

திருமதி ஹூசைன்,

வணக்கம். உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் இதமாக உள்ளது. பனிக்குடத்தில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்கவோ, தைக்கவோ முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் நேரடியாக கர்ப்பப் பையில், 3 முறை நீர்(Amino Infusion fluid) இறக்கினர். ஆனால் சில மணி நேரத்தில் அந்த நீர் முழுமையாக வெளியாகி விடும். முழுமையான படுக்கை ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறினர், அப்பொழுது நான் மருத்துவர்கள் வார்த்தைகளை முழுமையாக கடைபிடிக்கவில்லை. நடக்க முயற்சி செய்வேன் அப்பொழுதெல்லாம் நீர் வெளியாகிக் கொண்டேயிருக்கும். அனுபவித்த பிறகு தான் எல்லாம் புரிகிறது. மருத்துவர்களிடம் சென்றால் முழுமையாக அவர்கள் கூறுவதைக் கேட்டு நடக்க வேண்டும் இல்லையெனில் அவஸ்தைதான்.

ஐந்து மாதத்தில் பிறந்த குழந்தையைக் கூட இங்கு பார்த்திருக்கிறேன். எனக்கு குழந்தை பிறந்த புதிதில் சதா அழுதுகொண்டேயிருப்பேன். குழந்தையின் உடலெங்கும் ஊசியும், ட்யூபுமாக இருக்கும். ஒரு மாதம் சென்ற பிறகே மருத்துவர்கள் என் குழந்தையை காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கை வந்தது. (என்னை மதி என்று அழைத்தது மிகவும் மகிழ்ச்சி. வீட்டில் அப்படி தான் என்னை அழைப்பர்.)

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

வணக்கம் சுகா,

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. என்னுடைய மகளுக்கு தற்பொழுது 1 வயதாகிறது.(மருத்துவர்கள் கணக்கிற்கு 10 மாதம்) சராசரி பிள்ளை போல் தான் இருக்கிறாள். உங்கள் பிள்ளைகளுக்கு தற்பொழுது எத்தனை வயதாகிறது? நன்றாக இருக்கின்றனரா? இந்தமாதம் இந்தியா சென்று காது குத்தி வரலாம் என்றெண்ணியுள்ளோம், குறைமாதக் குழந்தைக்கு காதுகுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா?

சுகா, வெறும் கேள்வியாக அடுக்கிவிட்டேன். உங்களுக்கு விருப்பமிருந்தால், உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். என் போன்றோருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

ஹாய் மதி,
என் பெயர் ஸ்ரீதேவி.நான் சிங்கப்பூர் தான்..jurong west இல இருக்கிறேன்...உங்க குழந்தைக்கு இந்நிமேல் எந்த கஷ்டமும் வராது...நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்..கடவுள் ஆசி என்றும் உங்கள் குடும்பத்துக்கு உண்டு.......

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் அருள்மதி,
உங்களுடைய குழந்தைக்கு ஒரு வயத்கிறதா நடக்காரம்பித்திர்ரவ? காது குத்துவதில் என்தபிரைசனையும் இல்லை நான் என்போன்னுக்கு மூண்டு மதத்திலேயே காது குத்திற்றேன்.என் மகளுக்கு நாலு வயதாகிறது என்தபிரைசனையும் இல்லை நோமலா இருக்கிற ஸ்கூல் சேர்க்கும் மட்டும் எனக்கு பயமா தான் இருந்தது இப்ப ஓகே.என் மகனும் ஒன்றரை வயது அவரும் ஓகே நல்ல சமத்து இப்பதான் கதைக்க துவங்கிறார். ஒரே ஒரு பிரய்சன இப்படி பிறக்கிற குழந்தகழுக்கு நோய் எதிர்ப்பு சத்தி குறைவு நல்ல கவனமா பாக்கணும் நிறைய தொத்து வருத்தங்கள் வர வாய்ப்பு இருக்கு நிங்கள் இந்திய போவதாக சொன்னிர்கள் போகும் முதல் நோய்தடுப்பூசி போடுவார்கள் உங்கள் மருத்துவரிடம் கேட்டுபாருங்கள். உங்களுடைய பயணம் நன்றாக அமையவாழ்த்துக்கள்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் ஸ்ரீ,

வணக்கம். உங்களுடைய வேண்டுதலுக்கு மிகவும் நன்றி.
நாங்கள் கிளமெண்டியில் வசிக்கிறோம். என் மகள் பெயர் யாழினி. இறைவன் அருளால் தற்பொழுது நன்றாக இருக்கிறாள்.

நன்றி ஸ்ரீ மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
மதி.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

ஹாய் சுகா,

உங்களுடைய பதில் பதிவிற்கு மிகவும் நன்றி. என் மகள் தற்பொழுது நடக்க முயற்சி செய்கிறாள், வாக்கரில் போட்டால் ஒடுகிறாள். எடை மிகவும் (Birth weight 1.4.kg, Now 7k.g.)குறைவாக தானிருக்கிறாள், மற்றபடி பிரச்சனையில்லை. இந்தியா செல்வது தொடர்பாக மருத்துவரிடம் கேட்டேன், தடுப்பூசி எதுவும் தேவையில்லை என்று கூறிவிட்டார். ஆனால், அதிக நாட்கள் தங்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதனால் சில நாட்களிலேயே திரும்ப திட்டமிட்டுள்ளோம்.

சுகா, உங்கள் குழந்தைகளும் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று திகழ ஆண்டவன் அருள்புரிவான். நன்றி சுகா.

அன்புடன்,
மதி.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

மேலும் சில பதிவுகள்