தயிர் சட்னி

தேதி: May 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

தேங்காய்த்துருவல் - 1 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 1 பல்
உப்பு - சுவைக்கு
தயிர் - 1/2 கப்
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
மிளகாய் வற்றல்
கறிவேப்பிலை
எண்ணெய்
நீளமாக நறுக்கிய வெங்காயம்


 

பொட்டுக்கடலை, மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். தேங்காய்த்துருவலையும் நீர் சேர்க்காமல் அரைத்து பின்னர் சிறிது நீர் சேர்த்து அரைத்தால் சீக்கிரமாக, நைஸாக அரையும்.
சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து, தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்து கலந்து இட்லி, தோசை வடையுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்