மைதா அடை

தேதி: May 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 2 (1 vote)

 

மைதா - 2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மல்லித்தழை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - சுவைக்கு


 

வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லி இவற்றை மிகப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
இதில் மஞ்சள் பொடி, உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கலக்கவும்.
மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து கூடவே தேவையான அளவு நீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
தவாவை அடுப்பில் வைத்து சூடேறியதும் துணியால் துடைத்து விட்டு, சிறிது நீர் தெளித்து ஒரு குழிக்கரண்டி அளவு மாவை எடுத்து நடுவில் ஊற்றி மெல்லிய தோசை வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் மறுபுறம் திருப்பிப்போடவும்.
சட்னி, சாம்பார், மட்டன், சிக்கன், மீன் குழம்பு அனைத்துக்கும் பொருந்தும்


மொறுகலாக வேண்டும் என்பவர்கள் தோசையை வார்த்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்தே சுட வேண்டும். இத்துடன் 1 முட்டையை அடித்து கலந்தும் செய்யலாம். இன்னும் சுவையும், ஷாஃப்ட்டும் கிடைக்கும்.

மேலும் சில குறிப்புகள்