சுருள் பூரி

தேதி: May 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 1/4 கிலோ
டால்டா - 1/4 கப்
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
ஒயிட் சாஸ் செய்வதற்கு:
டால்டா - 1/4கப்
மைதா - 1/2கப்
எண்ணெய் - 300 மிலி
சர்க்கரை - 1/4 கிலோ
எலுமிச்சை - பாதி மூடி


 

மைதாவுடன் டால்டா, சமையல் சோடா சேர்த்துப் பிசறிக்கொள்ளவும்.
நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ஒயிட் சாஸ் செய்ய டால்டாவை உருக்கி சூடாக இருக்கும் பொழுதே மைதாவைக் கலந்து பேஸ்ட் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
சர்க்கரையை 1 1/2டம்ளர் நீர், எலுமிச்சைசாறும் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
மைதாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி வட்ட வடிவில் சப்பாத்தியாக தேய்க்கவும்.
ஒரு டீஸ்பூன் அளவு ஒயிட் சாஸை எடுத்து சப்பாத்தியின் மீது பரவலாக தடவவும்.
அதனை பரோட்டாவுக்கு செய்வது போல் ஃபிரில் செய்து வட்டமாக சுற்றிவைக்கவும்.
இப்படியே எல்லா உருண்டைகளை தயார் செய்யவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடேறியதும் சுற்றி வைத்த மாவை கனமான சப்பாத்திகளாக இட்டு எண்ணெயில் மிதமான தீயில் வேக வைக்கவும்.
பொன்னிறத்தில் மொறுகலாக வரும் வரை பொரிக்கவும்.
ஒரே தடவையில் 4 பூரிகளை சுடலாம்.
சுட்ட பூரிகளை பாகில் லேசாக தோய்த்து பாகை வடிய விட்டு டப்பாவில் அடுக்கவும்.
சுவையான சுருள் பூரி தயார்.


விரும்பினால் பூரியுடன் உதிர்த்த ரோஜா இதழ்களை சேர்த்து டப்பாவில் போட்டு வைத்தால் நல்ல மணமாக இருக்கும். பாகில் எலுமிச்சைச்சாறு சேர்ப்பதால் பாகு விரைவில் கெட்டிபடாது. எலுமிச்சைச்சாறு அதிகமானால் புளிப்பாகி விடும். ஒயிட் சாஸ் கெட்டி பட்டால் தீயில் காட்டி உருக்கி கொள்ளலாம். அல்லது மேலும் சிறிது உருக்கிய டால்டா சேர்த்துக்கொள்ளலாம் டால்டாவுக்கு பதிலாக ரீபைண்டு ஆயிலும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு ஷாதிகா ஆண்டி
இதை படிக்க நல்லா இருக்கு ஆனால் கொஞ்சம் கஷ்டமான குறிப்பா தெரியுது..சீக்கிரம் யாரும் சமைக்கலாமில் போடுங்கள் செய்து விடுகிறேன்

பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.கண்டிப்பாக நான் யாரும் சமைக்கலாம் பகுதிக்கு குறிப்புகள் பல லிஸ்ட்டில் வைத்துள்ளேன்.அதில் இந்த சுருள் பூரியும் ஒன்று.ஆனால் இப்போது சிக்கிரமே முடியாது.காரணம் பையன் காலேஜ் அட்மிஷன் வரை பொறுத்துக்கொள்ளுங்கள்.சரியா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

your son jalila sis son write the +2 what about result? i pray for all student get high marks

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

உங்களைப்பற்றிய விபரம் எனக்குத்தெரியாமலே அடிக்கடி எனக்கு வாழ்த்துக்களும்,எனக்காக பிரார்த்தனையும்,குறிப்புகளுக்கு பின்னூட்டமும் கொடுத்து வருகின்றீர்கள்.மிகவும் சந்தோஷமாக உள்ளது.மிகவும் நன்றி ஐனுன்.முகம் தெரியாத உங்கள் ஹக்கிலும் நானும் பிரே பண்ணுகின்றேன்.
என் மகன் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்தாலும் நாங்கள் எதிர் பார்த்த அளவு இல்லை.நல்ல கல்லூரியில் அட்மிஷன் விரைவிலே கிடைத்து என் பாரம் குறைய மீண்டும் பிர்ரார்த்தனை செய்யுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்
inshaallah nalla college kidaikummum u will try srm, cresent ,svc ,st joseph , panimallar counselling kidaika valthukkal

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்