ஸ்டாக்கிங் துணியை கொண்டு ரோஸ் செய்வது எப்படி?

தேதி: May 14, 2009

5
Average: 5 (1 vote)

இந்த அழகிய, ஸ்டாக்கிங் ரோஸை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர், திருமதி. ஜீவா மோகன் அவர்கள். சமையலில் தீவிர ஆர்வம் கொண்ட இவர். உணவுச் சத்துக்கள் குறித்து ஏராளமாக படித்தவர். சமையலில் மட்டுமல்லாது பின்னல் வேலைகள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் செய்தல், ஓவியம் வரைதல் இவை அனைத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர்.

 

ஸ்டாக்கிங் துணி
அலுமினிய கம்பி
கம் டேப்
நூல்
இலை

 

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த ஸ்டாக்கிங் துணிகள் ஒரே நிறங்களிலும், இருநிறங்கள் கலந்தும் கிடைக்கிறது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அளவுகளில் கம்பிகளை எடுத்துக் கொள்ளவும்.
அலுமினிய கம்பியை மூன்று விதமான அளவுகளில் வெட்டிக் கொள்ளவும். (i) 5 1/2 இன்ச் (ii) 4 இன்ச் (iii) 2 1/2 இன்ச்
முதலில் 2 1/2 இன்ச் அளவுள்ள சின்ன கம்பியை பாதியாக வளைத்துக் கொள்ளவும். பிறகு வளைத்த கம்பியை ஸ்டாக்கிங் துணியின் ஒரு முனையில் வைத்து கம்பி முழுவதும் மறையும் படி வைத்து இரண்டு முனையும் இணையும் இடத்தில் இறுக்கமாக பிடித்துக் கொள்ளவும்.
பிடித்திருக்கும் அந்த இடத்தில் நூலால் பூ தொடுப்பது போல் முடிச்சு போட்ட பிறகு கத்திரிக்கோலால் அடியிலிருக்கும் துணியை வெட்டி விடவும்.
இதே முறையில் மற்றும் இதே அளவில் 5 இதழ்கள் செய்து வைத்துக் கொள்ளவும்.
இதே போல் மற்ற அளவுகளிலான 4 இன்ச் மற்றும் 5 1/2 இன்ச் அளவுள்ள கம்பிகளை வளைத்து ஸ்டாக்கிங் துணியில் வைத்து இதழ்கள் தயார் செய்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய கம்பியை (காம்பு செய்ய) எடுத்து கொண்டு கம்பியின் முனையில் சிறிய அளவு காது மாட்டல் கொக்கி போல் மடக்கி கொள்ளவும். ஒரு சிறிய பூவிதழின் அடியில் இந்த கம்பியை சொருகி வெளியே மடக்கி விடவும்.
அடுத்த இதழை வைக்கும் போது முதல் இதழின் ஓரத்தில் இரண்டாவது இதழின் நடுப்பகுதி இருப்பது போல் வைத்து பூ தொடுப்பது போல் தொடுத்துக் கொள்ளவும்.
இதை போல மற்ற மூன்று இதழ்களையும் சுற்றிலும் வைத்து முடிச்சு போட்டு மொக்கு போல செய்துக் கொள்ளவும்.
அடுத்து பெரிய இதழை வைக்கும் போது முன்பு வைத்த இரண்டு சிறிய இதழ்களுக்கும் நடுவில் வைத்து பூ தொடுப்பது போல் தொடுத்துக் கொள்ளவும். இதே போல் மற்ற இதழ்களை சுற்றிலும் வைத்து தொடுத்துக் கொள்ளவும்.
மூன்றாவது வரிசை பெரிய இதழை சுற்றி வைக்கும் போது முதல் வரிசையில் வைத்திருக்கும் இரண்டு இதழ்களுக்கும் நடுவில் வைத்து பூ தொடுத்துக் கொள்ளவும். இதே போல் மற்ற இதழ்களை சுற்றிலும் வைத்து தொடுத்துக் கொள்ளவும். நூலை வைத்து கட்டும் போது நன்கு இறுக்கமாக கட்டவும். அப்போது தான் இதழ்கள் விழாமல் இருக்கும்.
ஒவ்வொரு இதழின் நடுவில் கட்டை விரலை வைத்து லேசாக வளைத்து விடவும்
கம் டேப்பை பூவின் நூல் சுற்றியிருக்கும் பகுதியிலிருந்து இழுத்து இறுக்கமாக கம்பி முழுவதும் சுற்றவும். ஒரு இலையை எடுத்து கம்பின் அடிவழியாக விட்டு பூவுக்கு பின்புறம் இலை இருப்பது போல் வைக்கவும்.
இப்போது ஸ்டாக்கிங் துணியில் செய்த அழகிய ரோஸ் தயார். இதைப் போல் வெவ்வேறு நிறத்தில் செய்து நாமே ஒரு பூங்கொத்து தயாரிக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப நன்றாக இருக்கு. எளிமையாகவும் அதே சமயம் நல்ல ஸ்டெப் பை ஸ்டெப்கவும் செய்து காட்டியிருப்பது ரொம்ப ப்ரமாதம். மேலும் தொடரட்டும். நன்றி.

என் கண்களையே நம்ப முடியவில்லை.
இன்றுதான் ஒரு புத்தகம் பார்த்தேன் தற்செயலாக "hand works" என்று ஒரு புத்தகத்தில் இதே ஸ்ரொக்கிங் துணி கொண்டு எப்படி பூச் செய்வது என இருந்தது. கவனமாகப் பார்த்துக்கொண்டு வந்தேன். இங்கே வந்தால் அதேவேலைப்பாடு தெரியவே எனக்கு நம்பவே முடியாமல் இருக்கு.

மிக நன்றாகச் செய்திருக்கிறீங்க. ஏன் பிளாஸ்ரிக் இலைகளுக்குப் பதிலாக, இதேபோலவே பச்சை நிறத்தில் இலை செய்தும் போடலாமே. இதே முறையிலேயே வண்ணாத்திப் பூச்சிகள் கூடச் செய்து காட்டியிருந்தார்கள் அப் புத்தகத்தில்.

பாராட்டுக்கள் இன்னும் இப்படி நிறையச் செய்து காட்டுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

செய்முறை அழகாக விபரித்திருக்கிறீர்கள் ஜீவா. பூ அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஜீவா,
உங்களது ரோஸ் கண்ணைக் கவர்கிறது. படங்களுடன் தெளிவாக விபரித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
செபா.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta