வெந்தயக் குழம்பு

தேதி: May 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (10 votes)

 

வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
புளி - 20 கிராம்
தேங்காய் துருவல் - 40 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
செத்தல் மிளகாய் - 5
மல்லி - ஒரு மேசைக்கரண்டி
நற்சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 8 பற்கள்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு நெட்டு


 

வெந்தயத்தை 10 மணி நேரம் ஊற வைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
செத்தல் மிளகாய், நற்சீரகம், மல்லியை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் தேங்காய் துருவலை அரைத்து எடுக்கவும்.
வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
அதில் வெந்தயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு நறுக்கின வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் மல்லி, மிளகாய் விழுதை போட்டு பிரட்டி விடவும்.
அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து பிரட்டவும்.
புளியுடன் 300 மி.லி தண்ணீர் ஊற்றி கரைத்து பிரட்டி வைத்திருக்கும் மசாலா கலவையில் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் கறிவேப்பிலையை சேர்த்து இறக்கி வைக்கவும்.
சுவையான வெந்தயக் குழம்பு ரெடி. இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து ஏதேனும் ஒரு பொரியல் வகையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள் திருமதி. மாலதி அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த வெந்தயக் குழம்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலோ அதிரா மடம்! வெந்தய குழம்பு செய்தேன் நீங்கள் குறிப்பிட்டபடி, ஆனால் அரைத்த மசாலா சேர்க்கும்போது சிறிது இராலும் சேர்த்து குழம்பு வைத்தேன் நன்றாக இருந்தது நன்றி ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அசத்துரீங்க.சளைக்காமல் எல்லோருடைய சமையலிலும் ஒரு குறிப்பை படத்துடன் அனுப்பி வைப்பதில் தாங்கள் முன்னோடி என்று சொன்னால் வியப்பில்லை.பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ராணி, வெந்தயக்குழம்பிற்கு இறாலும் சேர்த்தீங்களா? அப்போ சுவையைச் சொல்லவே தேவையில்லை. இந்த வெந்தயக் குழம்பு எனக்கு எப்பவும் பிடிக்கும் செய்யத்தெரியாமல் இருந்தேன். இப்போ மாலதியக்காவின் குறிப்பைப் பார்த்ததும் உடனே செய்தேன் பிரெட்டோடுகூடச் சாப்பிடலாம் அவ்வளவு சுவை. மிக்க நன்றி ராணி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஐயையோ ரச் பண்ணிட்டீங்களே ஆசியா....

ஆசியா, இம்முறை கொஞ்சம் நேரம் கஸ்டமாக இருக்கிறது, அதனால் ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுப்பதை நிறுத்தி, அடுத்து எடுக்கலாம் என எண்ணிக்கொண்டிருக்க இப்படிச் சொல்லிட்டீங்களே... சோர்ந்த எனக்கு பூஸ்ட் குடுத்ததுபோல் இருக்கு உங்கள் பதிவு... முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா, நீங்களும் வெந்தய குழம்பு விசிறியா? எனக்கும் மிகவும் பிடிக்கும். நல்ல ரெசிப்பி.
வாணி

சூப்பர் என்னோட பேபரிட் எங்க வீட்டில் அடிக்கடி செய்வோம். இத்துடன் அரிசி ரவை உப்புமாவோடு சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும்.
சூடு சாதம், கிரை +வெந்தய குழம்பு விட்டு சாப்பிட்டால் சொல்லவே தேவையில்லை அவ்வளவு
நல்ல காம்பினேஷோட சாப்படு ஒரு அசத்தல்.

வாணி, விஜி
மிக்க நன்றி. எனக்கும் இப்படிப் புளி சேர்த்துச் செய்யும் கறிகள் நன்கு பிடிக்கும். அதுசரி இன்னும் என் ரெயினுக்கு வரவில்லை:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா மேடம்
உங்கள் குழம்பு சூப்பர் இன்று வெள்ளிகிழமை என்ன குழம்பு வைப்பது எண்டு ஒரே குழப்பம் பின்உங்களுடைய வழகாய் பிரட்டல் வைத்தேன் நல்லயிருந்தது நன்றி.அடுத்தகிலமைக்கு வெந்தய குழம்பு குறிப்பு குடுத்திரிக்கிரிங்க நன்றி அதிரா மேடம்.

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

எனக்கு இந்த வெந்தய குழம்பு நல்ல விருப்பம். உடன் தேவை என்றால் வெந்தயதை அவித்து விட்டு செய்யலாமா? தயவு செய்து பதில் சொல்லவும். நன்றி.

ஹாய் அதிரா,
நிஜமாவே உங்க குறிப்புகள் அசத்தல் தான்.நீங்க சமையல் அசத்தல் இராணி என்று நானே உங்களுக்கு பட்டம் கொடுக்கிறேன்.
உங்க குறிப்பெல்லம் ரொம்ப நல்லா ஈசியா இருக்கிறது.எனக்கும்,மேலே இருக்கும் சந்தேகம் தான்.

உடனே செய்யனும்னா,வெந்தயத்தை வேகவத்து செய்தால் நல்லாயிருக்குமா?இப்போ தான் வெள்ளி பொழுது விடிஞ்சதும்,பார்த்தா சூப்பர் ரெஸிப்பி.
எனக்கும் இந்த குழம்பு மிகவும் பிடிக்கும்.
உடனே பதில் சொன்னா நல்லது,செய்ய முயற்சி பண்ணுவேன்.

அன்புடன்
உமா.

உமா இந்த குழம்பிற்க்கு வெந்தயத்தை ஊறவைத்து தான் செய்யனும்,அப்பதான் ரொம்ப நல்ல இருக்கும்.வேக வைத்து செய்தால் சில நேரம் கசக்கும்,குழம்பின் டேஸ்ட் மாறிடும்.

அதிரா உங்களுக்கு பதில் நானே பதில் போட்டுட்டேன்னபா.

ஹாய் மேனகா...

நாம இப்போ தான் முதன் முதல்ல பேசறோம்ன்னு நினைக்கிறேன்.என்னை உமா என்றே சொல்லுங்கள்,பதில் கொடுத்ததற்கு நன்றி.இன்று நேரமாகிவிட்டதால்,நான் வேறோரு நாள் ஊறவைத்தே செய்கிறேன்.

அன்புடன்
உமா.

மன்னிக்க வேண்டுகிறேன்.
நேற்று எனக்கு பதில் தரமுடியாமல் போய் விட்டது.

சுகா என் குறிப்புக்களுக்கு இடவிடாமல் பின்னூட்டம் கொடுத்துவரும் உங்களுக்கு மிக்க நன்றி.

அனுஷா, உங்கள் கேள்விக்கு எனக்குச் சரியான பதில் தெரியவில்லை, ஆனால் மேனகா சொல்லியுள்ளார் அப்படிச் செய்தால் சுவை கிடைக்காதென்று. ஊறவைத்துச் செய்யுங்கள்.

ஐயையோ உமா, அதிரா இப்பத்தான் ஓடிவாறேன். நேற்று காணாமல் போயிட்டேன்:) எங்கே போனோம் என்பதை செல்லங்கள் தலைப்பில் சொல்கிறேன்.
மேனகா பதில் தந்திட்டா... இப்பவே ஊறப்போடுங்கோ. என்னுடையது ஊறப்போட்டேன் முளைக்கட்டிவிட்டது... அது இன்னும் சூப்பராக இருந்தது. என்ன எனக்கு பட்டமா? இது சரிவராது அங்குதான் பட்டம் தரவேண்டும்:).

மேனகா மிக்க நன்றி.

இது மாலதியக்காவின் குறிப்பைப் பார்த்துச் செய்ததுதானே.. அவ இன்னும் இதைப் பார்க்கவில்லை என நினைக்கிறேன். பார்த்தீங்களா வருடக்கணக்காக இக்குறிப்பு இருந்தது கூட்டாஞ்சோறில் யாரும் பார்க்கவில்லை, சமைத்து அசத்தலாமில் வந்ததால் எல்லோருக்கும் செய்யும் ஆவல் வந்துவிட்டது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வணக்கம்,
வெந்திய குழம்புக்கு வெந்தியத்தை வருத்து அரைத்து போடலாமா.

gamakb, ஏன் உங்களுக்கு இப்படி ஒரு யோசனை வருகிறது. அப்படிப்போட்டால் கைக்கும் என்றுதான் நினைக்கிறேன். இதே முறையில் செய்தால்தான் நல்ல சுவை கிடைக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வணக்கம் அதிரா,
வெந்தியம் ஊரவைத்து செய்தேன் இன்று சூப்பரக இறுந்தது.

ஹாய் அதிரா‍ ,

வெந்தயக்குழம்பு சூப்பரோ சூப்பர்.அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.இத்தனை நாட்களாக எப்படி வைப்பது என்று தெரியாமலிருந்தேன்.மிக‌வும் ந‌ன்றி.

அன்புட‌ன்
உமா.

gamakb, உமா, செய்துபார்த்துப் பின்னூட்டமும் அனுப்பிவிட்டீங்கள் மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்க வெந்தய குழம்பு இன்று செய்தேன், ரொம்ப ருசியாக இருந்தது. அரிசிரவை உப்புமாவும் உங்க வெந்தய குழம்பும் தான். நன்றாக இருந்தது.

இக்குழம்பு ஏற்க்கனவே பார்த்திருந்தாலும் இன்று தான் செய்தேன்.. சுட்ட அப்பளத்துடன், நல்ல கார சாரமான புளிக் குழம்பு சாப்பிட்டோம்.. வெந்தயம் உடலுக்கு நல்லதென்பார்கள், இனி அடிக்கடி செய்ய வேண்டும்.. சுவையான இக்குறிப்பை தந்த மாலதி அவர்களுக்கும், செய்து காட்டிய அதிராவுக்கும் நன்றி...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அதிரா மேடம் உங்கள் வெந்தய குழம்பு செய்தேன் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.இந்த ரெசிபீயை ஊரில் இருக்கும் என் அத்தைக்கும் சொன்னேன்.செய்து பார்த்து விட்டு ரொம்ப நல்லா இருக்கு என்று சொன்னார்கள்.இந்த பாராட்டு மாலதி அவர்களுக்கும்,படங்களுடன் செய்து காட்டிய உங்களுக்கு தான் சேரும் .நன்றி அதிரா மேடம்