முருங்கைக்கீரை பொரியல்

தேதி: May 16, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

முருங்கைக்கீரை - ஒரு கட்டு
தேங்காய் துருவல் - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஆறு
வேர்க்கடலை - கால் கப்
மிளகு- ஒரு டேபிள்ஸ்பூன்
ஜீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
புதினா மற்றும் மல்லி இலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிப்பதற்கு:
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலை பருப்பு
மிளகாய் வற்றல்
பெருங்காயம்


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை பொடியாக நறுக்கி நன்கு அலசவும்.
மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றும் பாதியுமாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
நறுக்கிய கீரையை ஒரு ஐந்து நிமிடம் சுடு நீரில் போடவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து நிலக்கடலையும், வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
புதினா மற்றும் மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கி போடவும்.
தேவையான அளவு உப்பு போட்டு நீரில் இருக்கும் கீரையை நன்கு பிழிந்து போடவும்.
ஒரு ஐந்து நிமிடம் சிறு தீயில் வதக்கவும்.
தேவையான உப்பு போட்டு பொடித்த பொடியையும் போட்டு அடுப்பை அணைக்கவும்.


கீரை ரொம்ப வெந்து விட கூடாது. 3/4 th குக் ஆகி இருந்தால் போதுமானது. இதை மோர்க்குழம்பு, வெந்தயக்குழம்பு, மிளகாய் குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும். முருங்கைக்கீரை இல்லையெனில் எந்தக் கீரையிலும் செய்யலாம் இதே செய்முறையில்.

மேலும் சில குறிப்புகள்