வெண்டைக்காய் வெள்ளைக்கறி

தேதி: May 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

வெண்டைக்காய் - 300 கிராம்
வெங்காயம் - 20 கிராம்
பூண்டு - 2 பல்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சம்புளி - 2 மேசைக்கரண்டி
பால் - 75 மில்லி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

வெங்காயத்தையும் பூண்டையும் சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெண்டைக்காயை கழுவி விட்டு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு புளி சேர்த்து பிரட்டவும்.
வெண்டைக்காயுடன் நறுக்கின வெங்காயம், பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்து பிரட்டவும்.
அதன் பின்னர் உப்பு போட்டு 100 மி.லி தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்ததும் திறந்து மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
பாலுடன் சேர்ந்து வெண்டைக்காய் கலவை நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான வெண்டைக்காய் வெள்ளைக்கறி தயார். இது குழந்தைகளுக்காக மிளகாய் சேர்க்காமல் செய்தது. பெரியவர்களுக்காக இருந்தால் 3 பச்சை மிளகாய் சேர்த்துக் செய்யலாம். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வணக்கம்

பார்க்க நன்றாக உள்ளது.இதனை பால் இல்லாமல் செய்யளாமா??

Anbe Sivam

Anbe Sivam

அதிரா நேற்று ஒரு த்ரெட் ஓபென் பன்னலாமோன்னு யோசிச்சேன் என் கணவர் 1/2 கிலோ வெண்டக்காய் வாங்கி வந்து விட்டார் நான் மட்டும் தான் சாப்பிடுவேன் நேற்று 1/4 கிலோவை எப்படியோ சமைத்து ஒரு வழியா சாதம் போல் சாப்பிட்டேன் ..இன்று மீதம் அதை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன் ஓரிருநாளில் செய்து விடுவேன்:-D

ஹாய் அதிரா
வெண்டைக்காய் பால் கறி பார்க்கவே நன்றாக இருக்கிறது ஆனால் எனக்கு இங்கு வெண்டைக்காய் கிடைப்பதில்லை,எப்பவாது ஆடிக்கு ஒரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை என்று சொல்லுவதுப்போல் இங்கு வரும் இந்தியா செல்வேன் அப்போது செய்த்துப்பார்க்கலாம்

நானும் இன்னமும் கணவாய் பிரட்டலுக்கு வேண்டி கணவாய் மீன் சைனீஸ் பெயரை இன்னமும் கண்டுப்பிடிக்க முடியாமல் இருக்கிறேன்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

இந்த வெண்டைக்காய் கறி நன்றாக இருக்கு. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். இதில் பால் சேர்த்து செய்தால் ஒட்டி கொள்ளாதா? அடுத்த சந்தேகம் இலங்கை சமையலில் நிறய்ய கறிகளில் பால் சேர்த்து செய்வதை நான் பார்த்துள்ளேன். ஏன் தெரிந்து கொள்ளலாமா? பால் இல்லாமல் இதை செய்தால் வேற டேஸ்டாக இருக்குமா? கொஞ்சம் நிறய்யவே சந்தேகங்கள் கேட்டுட்டேன்.

என் சமையலைப்போல் அதிகளவு நீங்களும் பால் சேர்க்கின்றீர்கள்.நாங்களும் வெண்டைக்காயை இதே முறையில்தான் செய்வோம்.வெண்டைக்காயை எண்ணெயில் பிசுபிசுப்பு தன்மை நீங்கும் வரை வதக்கி விட்டு பால் சேர்ப்பதால் ஒட்டிக்கொள்ளாது.சுவையான் கூட்டு இது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

என் சமையலைப்போல் அதிகளவு நீங்களும் பால் சேர்க்கின்றீர்கள்.நாங்களும் வெண்டைக்காயை இதே முறையில்தான் செய்வோம்.வெண்டைக்காயை எண்ணெயில் பிசுபிசுப்பு தன்மை நீங்கும் வரை வதக்கி விட்டு பால் சேர்ப்பதால் ஒட்டிக்கொள்ளாது.சுவையான் கூட்டு இது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

என் சமையலைப்போல் அதிகளவு நீங்களும் பால் சேர்க்கின்றீர்கள்.நாங்களும் வெண்டைக்காயை இதே முறையில்தான் செய்வோம்.வெண்டைக்காயை எண்ணெயில் பிசுபிசுப்பு தன்மை நீங்கும் வரை வதக்கி விட்டு பால் சேர்ப்பதால் ஒட்டிக்கொள்ளாது.சுவையான் கூட்டு இது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் அதிரா மேடம்.
நல்ல அழாக இருக்கு உங்களுடைய வெண்டிக்காய்கறி
நான் வெண்டிக்காய் கறி வைத்தல் என்மகள் பாத்திற்று சத்தி எடுப்ப அதல நான் பால்காரி வைக்கிறது இல்லை. உங்களுடைய கறி எப்படி இப்பிடி வந்தது நானும் இந்தமுறைபடி செய்து பாத்திற்று பின்னுட்டம் அனுப்பிறன் உங்களுடைய குறிப்புக்கு நன்றி.

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

வெண்டிக்காய்க் கறி.
சுடர், இக்கறி ஒருவித்தியாசமான சுவையாக இருக்கும் செய்துபாருங்கள். பால் விடாமல் செய்தால் ஒருவித பச்சைத்தன்மையாக இருக்குமென நினைக்கிறேன். நீங்கள் தே.பால்தான் சேர்க்கவேண்டுமென்பதில்லை. நான் பாவிப்பது பசுப்பால்தான். அதுவும் ஸ்கிம் மில்க் பாவிக்கலாமே. பாலை வேண்டுமானால் மிகவும் குறைத்துவிடுங்கள்.

தளிகா எங்கள் வீட்டில் வெண்டிக்காய் என்றால் இக்கறிதான் விருப்பம். சின்னவர்கள் போட்டிபோட்டுச் சாப்பிடுவார்கள். அதிலும் சின்ன வெங்காயம் கிடைத்தால், அதைச் சேர்த்துச் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். செய்துவிட்டுச் சொல்லுங்கள்.

சைனா மஹா உங்களைத் திரும்பப் பார்த்ததில் மகிழ்ச்சி. எனக்கும் வெண்டிக்காய் பக்கத்தில் கிடைக்காது. ஒரு மணித்தியாலம் ஹைவே எடுக்க வேண்டும் வாங்க. இன்னும் கணவாய் கிடைக்கவில்லையா? மீன் படத்தைப் பார்த்து மார்கட்டில் தேடுங்கள் சைனாவில் இல்லாததா?.

விஜி பால் சேர்ப்பதால் ஒட்டவே ஒட்டாது. ஒட்டாமல் இருப்பதற்காகவே முதலில் எலுமிச்சை சேர்த்துப் பிரட்டுகிறோம். இலங்கையில் தே.பால் இல்லாமல் கறியே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் வெளிநாட்டுக்கு வந்தவர்கள் தேங்காய்ப்பாலைக் கைவிட்டுவிட்டோம். தேங்காய் வாங்கித் திருவினால் குளிருக்கு உடனே திரண்டுவிடும். கிரைண்டரில் அடித்தால் கொழுப்பாக ஒட்டிக்கொள்கிறது. ரின் பால் வாங்கினால் ஒருவித மணம் வருகிறது. ஆனாலும் அதைத்தான் வாங்கி வைத்திருக்கிறேன். வெள்ளைச் சொதிகளுக்கு பாவிப்பேன். பாலில்லாமல் செய்தால் சுவை குறைவாகவே இருக்கும். இப்படிச் செய்து கொடுங்கள் குழந்தைகள் நிட்சயம் விரும்புவார்கள்.

ஆகா ஸாதிகா அக்கா 3 தடவை அனுப்பிட்டீங்கள் எவ்வளவு அன்பு உங்களுக்கு. பால் சேர்ப்பதுபற்றி மேலே சொல்லிட்டேன் ஸாதிகா அக்கா. வெள்ளைக்கறிகளுக்கு மட்டும் கட்டாயம் பால் சேர்ப்போம். உறைப்புக் கறிகளுக்கு கிட்டத்தட்ட சேர்ப்பதில்லை. ஏனெனில் அதில் அதிகம் தூள் வகைகள் சேர்ப்பதால் பால் தேவைப்படுவதில்லை. இதே வெண்டிக்காயில் நீங்கள் சொன்னதுபோல் வதக்கியும் செய்வோம், அதுக்கு தூள் சேர்ப்போம் பால் சேர்ப்பதில்லை. அல்லது பொரித்தெடுத்து தூள் போட்டுக் குழம்பாக வைப்போம்.

சுகா மிக்க நன்றி. இக்கறிக்கு, அவியும்போது அதிகம் தண்ணி சேர்க்காமல் கொஞ்சமாகத் தண்ணிவிட்டு, குறைந்த நெருப்பில் அவித்து, (ஆகவும் நன்கு அவித்தாலும் அருவருக்கும்) பால் விட்டுக் கொதித்ததும் இறக்கிவிடுங்கள். கறி தண்ணியாக இருந்தால் சுவை கிடைக்காது. கட்டாயம் எலுமிச்சம்புளி சேர்க்கவேண்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா வெண்டக்காய் பால் கறி செய்தேன்,ரெம்ப நன்றாக இருந்தது,நான் சேர்த்ததில்லை,பால் சேர்த்து நன்றாக இருந்தது,உங்கள் சமையலில் எல்லாத்திலும் பால் சேர்க்கிறேன்,ஈசியான குறிப்புக்கு நன்றி அதிரா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா மிக்க நன்றி. பால் சேர்த்தால்தான் இக்கறியில் அதிக சுவை கிடைக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா எப்படி இருக்கீங்க...?
ஏனோ உங்களை இந்த அருசுவையில் காணமுடியவி்ல்லை.
மனதிற்க்கு கஷ்ட்டமாக உள்ளது.
இருப்பினும் என்றாவது ஒரு நாள் உங்களை நிச்சயம் காண நேறும்
என்ற நம்பிக்கை உள்ளது.
உங்களின் இந்த “வெண்டைக்காய் வெள்ளைகறியை”செய்து பார்த்தேன்..
மிகவும் நன்றாக இருந்தது.நன்றி அதிரா.
மீண்டும் உங்களை ஆவலோடு எதிர் நோக்குகின்றோம்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.