சைனீஸ் ஹாட் நூடுல்ஸ்

image

வழங்கியவர் : ammujan24

தேதி : ஞாயிறு, 17/05/2009 - 03:00

ஆயத்த நேரம் : 10 minutes

சமைக்கும் நேரம் : 5 minutes

பரிமாறும் அளவு : 2

2
1 vote
Your rating: None
 

 

  • நூடுல்ஸ் - 1 பாக்கெட் (எனி பிராண்ட்)
  • காய்ந்த மிளகாய் - 5
  • பச்சை மிளகாய் - 1
  • கோஸ்(மிகவும் மெலிதாக நீளமாக நறுக்கியது1) - 1 1/2 கப்
  • காரட், பீன்ஸ் - 1 கப் (மெலிதாக நீளமாக நறுக்கியது)
  • பச்சை பட்டாணி - 1/2 கப்
  • அஜினமோட்டோ - ஒரு பின்ச்
  • சால்ட் - தேவையான அளவு
  • வெங்காயத்தாள் - ஒரு கைப்புடி

 

  • முதலில் நூடுல்ஸை ஏழு கப் நீரில் முக்கால் பாகமாக வேக வைக்கவும்.
  • வெந்ததும் அதை ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடித்து விட்டு குளிர் நீரால் நன்கு அலச வேண்டும்.
  • சுத்தமாக நீரை வடித்ததும் அதில் ஒரு மூடி லைம் பிழிந்து மிக்ஸ் பண்ணவும்.
  • காய்ந்த மிளகாயை நீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் ஆயில் விட்டு காய்ந்ததும் அரைத்த மிளகாய் விழுதை போட்டு வதக்கி அனைத்து காய்களையும், பட்டாணியையும் போட்டு இரண்டு நிமிடம் வதங்கினதும் உப்பு, அஜினமோட்டோ போட்டு மிளகாய் போட்டு அடுப்பை அணைக்கவும்.
  • வேக வைத்து எடுத்துள்ள நூடுல்ஸை காய்க்கலவையில் போட்டு காய்களுடன் சேருமாறு பிரட்டி இறக்கவும்.
  • வெங்காயத்தாள் போட்டு பரிமாறவும்.






அம்மு...உங்க சைனீஸ் ஹாட் நூடுல்ஸ் ரொம்ப நல்ல இருந்தது.

என்னிடம் இருந்த மரக்கறி வதக்கலும் சேர்ந்தவுடன் ஜோர். மிக்க நன்றி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.