ரசப்பொடி இல்லாத ரசம்

image

வழங்கியவர் : ammujan24

தேதி : ஞாயிறு, 17/05/2009 - 04:31

ஆயத்த நேரம் : 10 minutes

சமைக்கும் நேரம் : 15 minutes

பரிமாறும் அளவு : 2 பேர்.

5
1 vote
Your rating: None
 

 

  • புளி - கெட்டியாக கரைத்தது ஒரு சிறிய டம்ளர்
  • துவரம் பருப்பு - 1(1/2) கப்
  • தக்காளி - 1
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • தனியா தூள் - 2 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 5
  • மல்லி இலை - ஒரு கைப்புடி
  • கறிவேப்பிலை - 1/2 கைப்புடி
  • உப்பு - தேவையான அளவு
  • நெய் - தாளிப்பதற்கு

 

  • முதலில் துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், தக்காளி, சிறிது மல்லி இலை சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.
  • வெந்ததும் அதை மிக்சரில் ஸ்மூத்தா அரைத்து எடுத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது ஆயில் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, சீரகம், மிளகு தாளித்து புளிக்கலவையை விட்டு கொதிக்க விடவும்.
  • பச்சை வாசனை போக ஆரமித்ததும் அரைத்த பருப்புக்கலவையை போட்டு, மூன்று பொடிகளும் சேர்த்து இரண்டு டம்ளர் அல்லது தேவையான அளவு நீர் விட்டு ஒரு கலக்கு கலக்கி அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
  • நுரைத்ததும் இறக்கி மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.






அம்மு அக்கா இந்த ரசம் சூப்பர். எளிமையாக இருந்தது. மிக்க நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

சகோதரி அம்மு!
உங்களின் ரசம் செய்து ரசித்து ருசித்தோம். பச்சைமிளகாய் சேர்த்து ரசம் செய்தது இதுவே முதல்முறை. நன்றாக இருந்தது.

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

ரசப்பொடி இல்லாத ரசம் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது.செய்வதற்கு எளிமையாகவும் இருந்தது நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்