கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி

தேதி: May 17, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் - 1
கார்ன் ஃப்ளார் - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
அரிசிமாவு - 1/2 கப்
முளைக்கீரை - 1 பிடி (ஏதாவது கீரை)
பச்சைமிளகாய் - 2
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாயத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


 

கருணைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், கீரை, பச்சைமிளகாய் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கார்ன் ஃப்ளார், கடலை மாவு, அரிசிமாவு மூன்றையும் பஜ்ஜிமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் சீரகம், பச்சைமிளகாய், பொரித்துவிட்டு வெங்காயத்தையும் வதக்கி விட்டு கீரையும் போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.(ஒரு நிமிடம் போதுமானது)
மசித்த கருணைக்கிழங்குடன் வதக்கியவற்றைப்போட்டு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பும் போட்டு பிசைந்து சிறு சிறு உருண்டையாக்கவும்.
வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெய் விட்டு காயவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் உருண்டைகளை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்