ஃகார்ன் கட்லெட் (சோளம்)

தேதி: May 17, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

ஃகார்ன் - 1 (சோளக்கதிர்)
உருளைக்கிழங்கு - 1 (பெரியது)
கார்ன் ஃப்ளார் மாவு - 1 கப்
கடலை மாவு - 1 கப்
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை - 4 கொத்து
கறிவேப்பிலை - 2 இணுக்கு
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப


 

சோளக்கதிரை வேகவைத்து எடுத்து அதன் மணிகளை உதிர்த்துக் கொள்ளவும், உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சோளமணிகள், காய்ந்த மிளகாய், கசகசா, சீரகம் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும் (தண்ணீர்விட வேண்டாம்)
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தோலுரித்த உருளைக்கிழங்கை மசித்துக்கொள்ளவும், நறுக்கிய கொத்தமல்லித்தழை அதில் அரைத்த விழுது, வதக்கிய பொருட்கள் மற்றும் சோள மாவு, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் கலந்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து ஏதாவது ஒரு ஷேப்பில் தட்டி வைக்கவும்
ஒரு வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்