அழகிய பிஷ்நெட் ஒயர் மாலை செய்வது எப்படி?

தேதி: May 18, 2009

5
Average: 4.2 (5 votes)

இந்த அழகிய பிஷ்நெட் ஒயர் மாலையை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. தனலெஷ்மி அவர்கள். இவர் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

 

பிஷ்நெட் நைலான் ஒயர்(சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள்)
கத்திரிக்கோல்
நரம்பு
ஊசி
சிவப்பு நிற ஒயர் - 20 செ.மீ + 5 செ.மீ
பச்சை நிற ஒயர் - 10 செ.மீ + 2 1/2 செ.மீ

 

முதலில் குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொண்டு ஊசியில் நரம்பை இரண்டாக கோர்த்து அடியில் முடிச்சு போட்டு வைத்துக் கொள்ளவும்.
கத்திரிக்கோலை வைத்து சிவப்பு நிற ஒயரை பாதியாக நடுவில் வெட்டி இரண்டாக பிரித்துக் கொள்ளவும். அதே போல் பச்சை நிற ஒயரையும் இரண்டாக பிரித்துக் கொள்ளவும்.
பிரித்து வைத்திருக்கும் சிவப்பு நிற ஒயரில் ஒன்றை மட்டும் எடுத்து ஒரு செ.மீ அளவிற்கு மடித்து கொள்ளவும். மடித்த அந்த இடத்தில் ஊசியை வைத்துக் கோர்க்கவும்.
இதை போல் மேலும், கீழுமாக ஒரு செ.மீ என்ற அளவில் மடக்கி நடுவில் கோர்த்துக் கொண்டே வரவும். எந்த அளவிற்கு நமக்கு நீளம் தேவையோ அந்த அளவுக்கு செய்துக் கொள்ளவும்.
சிவப்பு நிற ஒயர் முடிந்ததும் இதை போலவே பச்சை நிற ஒயரை முழுவதும், மேலும் கீழுமாக மடக்கி கோர்க்கவும். பச்சை நிற ஒயர் முடிந்ததும் அதன் மேலே சிவப்பு நிற ஒயரைக் கோர்க்கவும். நமக்கு எந்த அளவிற்கு மாலை தேவையோ அந்த அளவுக்கு ஒயர்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதைப் போலவே மற்றொரு புறமும் சிவப்பு மற்றும் பச்சை நிற ஒயர்களை வைத்து இதே அளவில் சமமாகக் கோர்த்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு செய்து வைத்த இரண்டு ஒயர் பூவையும் ஒன்றாக இணைத்து நடுவில் முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
சிவப்பு நிற ஒயரை 5 செ.மீ வெட்டி நடுவில் இரண்டாக பிரித்துக் கொள்ளவும். அதை போல் பச்சை நிற ஒயரை 2 1/2 செ.மீ வெட்டி நடுவில் இரண்டாக பிரித்துக் கொள்ளவும். பிறகு ஊசியை வைத்து மாலை கோர்த்தது போல் ஒரு செ.மீ என்ற அளவில் மடக்கி சிவப்பு நிற ஒயரைக் கோர்க்கவும். பிறகு இரண்டாக பிரித்த பச்சை நிற ஒயரை அடுத்தடுத்து இதே போல் மடக்கிக் கோர்க்கவும். அதன் மேலே வெட்டிய மற்றொரு சிவப்பு நிற ஒயரை மடக்கிக் கோர்க்கவும்
குஞ்சம் போல் செய்த பிறகு இணைத்து வைத்திருக்கும் மாலையின் நடுவில் குஞ்சத்தை வைத்து கட்டி முடிச்சு போடவும்.
எவ்வளவு பெரிய மாலையாக வேண்டுமோ, அதற்கு தகுந்தாற் போல் ஒயரின் அளவை அதிகமாக எடுத்துக் கொள்ளவும். இதுப் போல் செய்து சாமி படத்தில் மாட்டலாம் அல்லது இதையே நிலை மாலையாகவும் மாட்டலாம்.
இதுப் போல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு அளவிலும் நிறத்திலும் மாற்றங்கள் செய்து மாலையாக செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப நன்றாக இருக்கு. உங்கள் கைவன்னமும் நன்றாக இருக்கு. என் அம்மாவும் இதே ஒயரில் குக்கர் கேஸ்கட் உபயோகித்து அதை இந்த ஒயரால் சுற்றி இந்த ஒயரிலேயே கிளி செய்து தொங்க விட்டு செய்த்தை பார்த்து இருக்கேன்.
ரொம்ப நன்றாக இருக்கு. மேலும் தொடரருங்கள்.

ரொம்ப நன்றாக இருக்கிறது.இதுபோல் சேட்டின் ரிப்பனில் (satin ribbon)செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.?

anuchakko

ஹாய் அனு, நானும் ரிப்பனில் செய்யலாம் என்று நினைத்தேன். பேப்பர் ரிப்பனில் கூட செய்யலாம். சாட்டின் ரிப்பன், பேப்பர் ரிப்பன் இரண்டிலுமே அழகாக வரும். ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள மாலை கழுவிப் பாவிக்கக் கூடியதாக இருக்கும். வெகு காலத்துக்கு வரும். அது இதன் சிறப்பு. :)
மாலை அழகாக இருக்கிறது தனலெஷ்மி. பாராட்டுக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta