ஸ்பெஷல் சப்பாத்தி

தேதி: May 18, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கோதுமை மாவு - 1 கப்
ராகி மாவு - 1/2 கப்
சத்துமாவு - 1/2 கப் (மன்னா பவுடர் )
ரவை - 2 டேபிள் ஸ்பூன் (10 நிமிடம் ஊறவைத்து சேர்த்துக்கொள்ளவும்)
சீரகத்தூள் - 1 டீஸ்பூன் (வாசனைக்கு)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 

ஒரு பாத்திரத்தில் மூன்று மாவையும் முதலில் போட்டு ஒரு கரண்டியின் உதவியால் கலந்து வைக்கவும்.
அடுத்து சீரகத்தூள், நெய்யை உருக்கி ஊற்றவும், அடுத்து தேவையான அளவு உப்பும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து 15 நிமிடம் ஊற வைத்துப்பின்னர் சப்பாத்தி பரத்தவும்.
அதை மிதமான சூட்டிலேயே நெய் விட்டு சுடவும். மிகவும் அருமையான டேஸ்ட்.


சில வேளையில் மாவுகள் கொஞ்சம் கொஞ்சம் மீதி இருக்கும் அதை என்னசெய்யலாம் என்றால் இப்படி எல்லாமும் கலந்து ஒரு டிபன் ரெடி செய்து விடலாம். நாம் அந்த கொஞ்சமாக இருக்கும் மாவையும் வீணாக்காமல் உபயோகப்படுத்த முடியும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மஹாபிரகதீஸ் நான் daily evening சப்பாத்தி தான் சாப்பிடுவேன், உங்களுடைய ஸ்பெஷல் சப்பாத்தி மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் சத்து மாவு இல்லை. அதை விட்டு விட்டு செய்தேன். அடுத்த முறை சத்து மாவுடன் try செய்கிறேன்.

நன்றி
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

--