வெங்காய வற்றல் சட்னி

தேதி: May 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காய வற்றல்[சின்ன வெங்காயத்தை இரண்டாக அரிந்து வெய்யிலில் நன்கு காய வைத்தது]- 2 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த தக்காளி- 2 கப்
புளி- அரை நெல்லி அளவு
உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை- 2 மேசைக்கரண்டி
காயப்பொடி- கால் ஸ்பூன்
தேவையான உப்பு
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல்-5


 

எண்னெயை வாணலியில் ஊற்றி சூடானதும் முதலில் பருப்புகள், மிளகாய் இவற்றை பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்லவும்.
பின் அதே எண்ணெயில் வெங்காயத்தைப்போட்டு இலேசாக சிவப்பாகப் பொரிந்ததும் எடுத்து வைக்கவும்.
பின் அதே எண்ணெயில் தக்காளி, கொத்தமல்லி, காயம் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.
அனைத்தையும் புளியுடன் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்