முருங்கைக்கீரை தோசை

image

வழங்கியவர் : Mrs.Mano

தேதி : திங்கள், 18/05/2009 - 23:04

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • தோசை மாவு- 5 அல்லது 6 கப்
  • முருங்கைக்கீரை- 2 கப்
  • தக்காளி-1
  • சிறிய வெங்காயம்-10
  • சீரகம்- அரை ஸ்பூன்
  • காயப்பொடி- கால் ஸ்பூன்
  • உப்பு சிறிது
  • எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

 

  • எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கவும்.
  • சீரகம் போட்டு தாளித்து பொடியாக அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
  • பின் பொடியாக அரிந்த தக்காளி, காயம் சிறிது உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.
  • கீரையைச் சேர்த்து நன்கு வெந்து சுண்டியதும் இறக்கி ஆற வைக்கவும்.
  • பின் மாவில் சேர்த்து நன்கு கலக்கி மெல்லியதாக தோசைகள் சுட்டெடுக்கவும்.