பத்திய குழம்பு

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மஞ்சள் - 2 துண்டு
மிளகாய் வற்றல் - 6
மல்லி - 3 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 100 கிராம்
சுண்டைக்காய் வற்றல் - சிறிதளவு
கத்திரி வற்றல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 100 மில்லி
மிளகு - 3 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி


 

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மஞ்சள், மிளகாய், மல்லி, மிளகு வறுத்து கொண்டு நன்றாக அரைக்க வேண்டும்.
புளியைக் கரைத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு தேவையான அளவு போட்டு கலக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கத்திரிவற்றல், சுண்டைவற்றல் ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து கரைத்து வைத்துள்ள குழம்பில் சேர்க்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம் போட்டு சிவந்ததும், உரித்த பூண்டை போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் அதில் கரைத்த குழம்பை ஊற்றவும். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் மேலே மிதந்து வந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்