தயிர்வடை ஸ்பெஷல்

வழங்கியவர் : Mahalakshmiprag...
தேதி : செவ்வாய், 19/05/2009 - 08:12
ஆயத்த நேரம் : 3 hrs
சமைக்கும் நேரம் : 30 min
பரிமாறும் அளவு : 4
- சிறுபருப்பு - 1 கப்
- தயிர்/ யோகர்ட் - 1/2 லிட்டர்
- காய்ந்த மிளகாய் - 10
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை - 1 பெரிய துண்டு
- கொத்தமல்லித்தழை - சிறிது (பொடியாக நறுக்கிவும்)
- எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
- உப்பு - தேவைக்கேற்ப
- முதலில் சிறு பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும், பின்னர் அதை தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக வடை பக்குவத்திற்கு அரைத்து வைக்கவும்.
- சர்க்கரையை பொடித்து தண்ணீர் விட்டு பாகு காய்ச்சிக்கொள்ளவும் கம்பிப்பாகுக்கு முந்தின பக்குவம்
- வெறும் வாணலியில் காய்ந்தமிளகாய் மற்றும் சீரகத்தை வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும்.
- வடை மாவுடன் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித்தழையும், உப்பும் சேர்த்து பிசைந்து விட்டு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும், மாவை சிறிது எடுத்து அதை ஏதாவது ஷேப்புக்கு வடையாக தட்டி போட்டு பொரித்து எடுத்து தனியே எடுத்து ஆறவைக்கவும்.
- ஒரு பெரிய அகன்றப்பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் வடைகளை அதில் போட்டு ஊறவைக்கவும். அந்த பாத்திரத்தை ஃப்ரிஜ்ஜில் எடுத்து வைத்துவிடவும்.
- பரிமாறும் முன்பு ஒரு சின்ன கிண்ணத்தில் தயிருடன் வடையை எடுத்து வைத்து அதன் மேல் சர்க்கரைப்பாகினை ஊற்றி அதன் மேல் வறுத்து வைத்துள்ளப்பொடியினை போட்டு பரிமாறவும். சாப்பிட வித்தியசாமான டேஸ்ட்டாக இருக்கும்.
Note:
நீங்கள் வடையினை சாப்பிட பயன்படுத்துவதற்கு 2 மணி நேரம் முன்பு வடையினை ஊறவைத்து ஃப்ரிஜ்ஜினில் வைத்துவிடவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
மஹா நூறு குறிப்புகள் தாண்டியதற்கு வாழ்த்துக்கள்!குழந்தை வைத்துக்கொண்டு குறிப்பு கொடுத்தல் என்பது சாதாரணம் இல்லை. உங்கள் வாழ்த்து த்ரெட் எங்கோ போய் விட்டது. திரும்ப அதை தேட சோம்பேரித்தனம், அதான் இங்கு வாழ்த்துகிறேன்.
தயிர் வடையில் சர்க்கரை பாகா? வித்தியாசமாக இருக்கிறதே?உங்க ஊர் ஸ்பெஷலா?
ஹாய் மாலினி
எப்படியிருக்கிறீங்க?வீட்டில் அனைவரும் நலமா? இந்த தயிர்வடை எனக்கு ஒரு நார்த் இந்தியன் பாபி ஒருவரோடு 4 ஆண்டுகள் பழக்கம் அங்க மூலம் தெரிந்து கொண்டது. எனக்கு சில வெளி நபர் மூலம் தெரிந்து கொண்டதை உடனே குறிப்புகளில் போடுவது இல்லை முதலில் நான் செய்துப்பார்த்து வீட்டில் எல்லருக்கும் பிடித்து இருக்கிறது என்று செக் செய்து பின்னர் தான் போடுவேன். அதுப்போல் நானே புதியதாக ஏதாவது டிரை செய்துப்பார்த்து வீட்டில் ஓ.கே என்றவுடந்தான் குறிப்பே கொடுப்பேன். நாம் ஏதாவது நபர்கள் சொல்லுவதை அப்படியே போட்டு விட்டு நாளைக்கு ஏதாவது உறுப்பினர் ஏதேனும் டவுட் கேட்டால் சொல்லத்தெரியாமல் இருக்கக்கூடாது அது அசிங்கம் அதனால் என்னைப்பொறுத்தமட்டில் சுலபமான குறிப்புகள் கொடுக்கவே விருப்பம்.. ஐய்யோ ஏதேதோ எழுதிவிட்டேன்.
நீங்களும் செய்துப்பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும் அதுவும் ஒரு தயிர் வெள்ளைகலர் அதற்க்கு மேல் வடை மஞ்சள்நிற ஷேடு அதன் மேல் சர்க்கரை பாகு பிரண் ஷேடு அதன் மேல் வத்தல் மிளகாய் சிகப்பு கலர் பார்க்கவே சாப்பிட தோன்றும்
இதில் இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு எல்லாமும் கலந்து வாவ ரொம்ப நல்ல டேஸ்ட்.
மிகவும் சந்தோஷம் வாழ்த்து பரிமாறியதற்க்கு, யுவனை வைத்துக்கொண்டு குறிப்பு அனுப்புவதில் கஷ்டம்தான், அவருக்கும் கம்பியூட்டரில் அதிகம் இருந்தால் பிடிக்காது அதையும் அஜெஸ்ட் செய்து கொண்டுதான் குறிப்புகள், பதிவுகள் அனுப்புவேன்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China