கவாபட் ரைஸ்

தேதி: May 20, 2009

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பாசுமதி அரிசி - 5 குவளை
தக்காளி - 7
வெங்காயம் பெரியது - 2
பூண்டு - 10பல்
பச்சை மிளகாய் - 3
நெய் +எண்ணெய் - 50கிராம்
சோயாசாஸ் - 3 கரண்டி
வினிகர் - 2 கரண்டி
மிளகுத்தூள் - 1 கரண்டி
எழுமிச்சைபழம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
முட்டை - இரண்டு
மல்லிக்கீரை - ஒரு சிறிய கட்டு


 

அரிசியை உதிர் உதிராக வடிக்கவும். பூண்டை பொடியாக வெட்டி வைக்கவும்
தக்காளியை அரைத்து வைக்கவும் பச்சை மிளகாயை விதையை நீக்கி இரண்டாக கீறி வைக்கவும் வெங்காயத்தை வெட்டி வைக்கவும்
சட்டியில் எண்ணெய்+நெய் ஊற்றி வெங்காயத்தை போட்டி வதக்கவும் பாதி வெந்ததும் அதில் அரைத்த தக்காளியை ஊற்றி மூன்று நிமிடம் கிளறி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு விதை நீக்கிய பச்சை மிளகாய் சோயா சாஸ், மிளகுத்தூள், எ.பழம், வினிகர் அனைத்தையும் சேர்த்து நன்கு ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
பின் அதில் சோற்றை சேர்த்து கிளறி பத்து நிமிடம் தம்மில் போடவும் கடைசியில் முட்டையை கொத்திவிட்டு பொரித்து மேலே தூவி மல்லிக்கீரையை தூவி சூடாக பரிமாறவும்.


இது தாய்லாந்தில் செய்யும் ஒருவகை ரைஸ் விரும்பியவர்கள் சிறிது அஜினமேட்டோ சேர்த்துக் கொள்ளலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜுலைஹா இநத ரைஸ் பெயர் புதுமையா இருக்கு. மிகவும் நன்றாக இருந்தது. எளிதில் செய்யக் கூடியதா இருக்கு.நன்றி உங்களுக்கு.

எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தமான ரைஸ் இதுசெய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு ரொம்ப நன்றி வானதி
ஜீலைஹா

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!