மறைபொருள் ரகசியங்கள் பகுதி 3

மறைபொருள் ரகசியங்கள் முதல் பகுதியின் லிங் கிழே கொடுக்க பட்டுள்ளது.

http://www.arusuvai.com/tamil/forum/no/12198

மறைபொருள் ரகசியங்கள் இரண்டாம் பகுதியின் லிங் கிழே கொடுக்க பட்டுள்ளது.

http://www.arusuvai.com/tamil/forum/no/12522

பகுதி 1 & 2 சில பட விளக்கங்களின் லிங் கிழே கொடுக்க பட்டுள்ளது.

http://picasaweb.google.co.in/haish12/hvLWwI# அல்லது
http://picasaweb.google.co.in/haish12 இல் மறைபொருள் என்ற ஆல்பத்தை பார்க்கவும்.

பகுதி 3 சில பட விளக்கங்களின் லிங் கிழே கொடுக்க பட்டுள்ளது.

http://picasaweb.google.co.in/haish12/3#

படம் பார்த்து வையுங்கள், வந்து படத்தின் கதையை சொல்கிறேன்.

வணக்கம் அண்ணா,
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் பதிவுகளுக்கு நான் ரசிகை என்றே சொல்லலாம்.அந்தளவுக்கு உங்கள் பதிவுகளை ஒன்று விடாமல் படிப்பேன்.பகுதி 2 ல் தீபம் ஏற்றும் முறை பற்றி கூரியிருந்திர்கள். நான் தினமும் பலாடைலிருந்து வெண்ணை எடுத்து வைத்திருக்கிறேன். இந்த வெண்ணையை நெய்யாக உருக்கி தீபம் ஏற்ற பயன்படுத்தலாமா?.நேரம் கிடைக்கும் பொது பதில் தரவும் அண்ணா.
நன்றி.
அன்பு சகோதரி
வாசு.

Vasu

அன்பு சகோதரி விஜயா51: உங்கள் பாராட்டுதல்களுக்கு மிகவும் நன்றி.

சகோதரர் ஜஸ்டின் மைகெல் ராஜ் : 1. தியானத்தில் வந்த பதில் 80% வர்ம சிகிச்சையின் மூலம் குணமாக்க முடியும்.
போகர்: கி.பி 10 நூற்றாண்டில் வாழ்ந்தவர் அவரின் குருகள் அகத்தியர், காளங்கி நாதர். அவரின் சீடர்கள் கொங்கனர், கருவூரர், இடைகாடர், புலிப்பாணி. அவரைப் பற்றி சில சுவையான தகவல்கள்.

அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.

போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது.

போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.

அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

1. போகர் – 12,000
2. சப்த காண்டம் – 7000
3. போகர் நிகண்டு – 1700
4. போகர் வைத்தியம் – 1000
5. போகர் சரக்கு வைப்பு – 800
6. போகர் ஜெனன சாகரம் – 550
7. போகர் கற்பம் – 360
8. போகர் உபதேசம் – 150
9. போகர் இரண விகடம் – 100
10. போகர் ஞானசாராம்சம் – 100
11. போகர் கற்ப சூத்திரம் – 54
12. போகர் வைத்திய சூத்திரம் – 77
13. போகர் மூப்பு சூத்திரம் – 51
14. போகர் ஞான சூத்திரம் – 37
15. போகர் அட்டாங்க யோகம் – 24
16. போகர் பூஜாவிதி – 20

இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.

“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தவம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொடங்கியது.

அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.

போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோன்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.

அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு.

பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.

இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுர கிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை.

கதை 1: சப்த காண்டம் ஏழாயிரத்தில் எவ்வளவோ அபூர்வமான விசயங்கள் ஒளிந்திருக்கும். போகரின் வழக்கம் ஒரு தினுசு. ஏதாவது ஒரு பொருளைப் பற்றி விலாவாரியாகச் சொல்லிக்கொண்டே வருவார். திடீரென்று வேறு ஏதாவது ஒரு சிறு வரலாறு, சம்பவம், கதை அதில் குறிக்கிடும். வரிசையாகப் படித்துக்கொண்டே வந்தால்தான் அந்த மாதிரி நடுப்பட்ட இடைப்பட்ட விசயங்களெல்லாம் தட்டுப்படும். தட்டுப்பட்டாலும் கூட அந்த பாடல் என்ன சொல்கிறது என்பது எளிதில் மட்டுப்படாது. அதனால் அது எங்கிருந்து வந்தது என்பதோ அதன் தொடர்புகளோ தெரியாமலிருக்கும்.

இந்தக் கதை எப்போது நடந்தது எனக்கு தெரியாது. நடந்த இடம் கபாட புரம். அதாவது இரண்டாவது தமிழ்ச்சங்கம் நடந்த சமயம். அச்சங்கத்தில் அகத்தியருடைய சீடராகிய 'திரணதூமாக்கினி முனி' என்னும் தொல்காப்பியரும் இருந்தார். (நான் போகர் ஏழாயிரத்திலுள்ள கதையைத்தான் சொல்கிறேன். 'திரணதூமாக்கினி இது அது', என்று என்னைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கப்படாது.)

தொல்காப்பியருக்குத் தலைவலி. பத்தாண்டு காலம் இடைவிடாது தொடர்ந்து தலைவலி. எத்தனையோ வைத்தியர்கள் முயன்றும்கூட அந்தத் தலைவலி தீரவில்லை. அகத்தியரை நினைத்தார்கள். அவரும் வந்தார். அவருடைய ஞானதிருட்டியில் பார்த்தார். காரணம் புலப்பட்டு
விட்டது.

கட யோகியரிடம் ஒரு பயிற்சியுண்டு. தண்ணீரை ஒரு நாசித் துவாரத்தில் ஏற்றி கபாலத்தில் உள்ள அறைகளிலெல்லாம் செலுத்திவிட்டு இன்னொரு நாசித்துவாரத்தின் வழியாக வெளியே விடுவார்கள். (பயிற்சியற்றவர்கள் இதனைச் செய்து பார்க்கவேண்டாம். ஆபத்து).

அந்த மாதிரி பயிற்சியெல்லாம் தொல்காப்பியருக்கு அத்துப்படி ஒருமுறை அவர் நாசியின் வழியாக இழுத்த தண்ணீரில் தேரை முட்டை இருந்திருக்கிறது. ஆலவிதையை 'சிறுமீன் சினையினும் நுண்ணிதேயாயினும்' என்று பழைய நீதி நூல் சொல்கிறது. தேரை முட்டை அதனினும் நுண்ணிது. ஆகவே நாசித்துவாரத்தின் வழியாக மூளைக்குச் சென்றுவிட்டது. இப்போது இருக்கும் அனாட்டமி நூலின்படி ஏதாவது ஸைனஸிற்குள் நுழையலாம் என்று சொல்லலாம். ஆனால் கடயோகியர்களின் கபாலம் எப்படியிருக்கும் என்று சொல்லமுடியாது.

ஏதாவது பயிற்சியின் மூலம் எதையாவது வாசலைத் திறந்துவைத்திருப்பார்கள்.

"சிக்குள்ள வாசல் திறந்ததடி; சிலம்பொலிதானும்தான் கேட்டதடி",

என்று காணாக்கண் கேளாச்செவி மூலம் காணமுடியாக் காட்சி, கேட்க முடியா ஓசையை உணர்ந்துகொண்டு பாடிக்கொண்டிருப்பார்கள். அந்த முட்டையிலிருந்து தவளை வெளிவந்து பெரியதாகிவிட்டது. அதுதான் அப்படியரு தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

தம்முடைய ஞானதிருட்டியினால் இதனை உணர்ந்துகொண்ட அகத்தியர், பண்டுவம்(surgery) செய்து தேரையை எடுக்கத் தீர்மானித்தார். அதனைப் பாண்டிய மன்னனின் பிரத்தியேக மருத்துவசாலையில் செய்தார்கள். தொல்காப்பியரின் தலையில் கபாலத்தைத் திறந்து
மூளையைக் கீறிப் பார்த்தார்கள். அங்கே ஒரு தேரை மூளையைப் பற்றியவாறு இருந்தது.

"எப்படி கபாலத்துக்குள்ளிருந்துகொண்டு பத்தாண்டுகள் ஜீவித்திருந்தது?"......என்று என்னிடம் கேட்பதில் பிரயோசனமில்லை. அந்த சித்தை அறியவேண்டுமானால் 'கல்லினுள் தேரை'யையும் 'கருப்பை உயிரை'யும்தான் கேட்கவேண்டும். அவற்றுக்குப் புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் தான் அந்த காலத்துள் தேரைக்கும் கொடுத்து வாழ்வித்திருக்கவேண்டும். அந்தத் தேரையை அகத்தியர் குறடால் எடுக்க முயன்றார். அதனை பார்த்துக்கொண்டிருந்த சீடர்களில் ஒருவராகிய பொன்னரங்கன் என்பவர் தடுத்தார். அப்படியே தேரையை எடுத்தால் அது மூளையைப் பிய்த்துக்கொண்டு வந்துவிடும். ஆகவே பொன்னரங்கனார் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் செய்தார். அந்தப் பாத்திரத்தைத் தேரையின் அருகே பிடித்தார். தண்ணீரைக் கண்ட தேரை உடனே மூளையை விட்டுவிட்டு தண்ணீருக்குப் பாய்ந்தது. தொல்காப்பியரின் மூளைக்குச் சேதமில்லாமல் கபாலத்தை மூடிவிட்டார்கள். சமயோசிதமாக உத்தியைச் சொன்ன பொன்னரங்கனாரை அகத்தியர் பாராட்டினார். அத்துடன் அவருக்குச் சிறப்புப் பெயராக 'தேரையர்' என்னும் பெயரும் ஏற்பட்டது. தேரையர் பெயரால் பல வைத்திய நூல்கள் இருக்கின்றன.

அன்பு சகோதரி பிருநதா: நன்றி இநத இழையில் இருந்து கால அட்டவணை இட்டு பதிவுகள் போடுகிறேன்.

காலையில்: சிந்தனை விருந்து

மாலையில் பதில்கள்

புதன் கிழமை தோரும் பயிற்சிகள். 27-5-09 காலை துவங்கும் முதல் பயிற்சியே மன எழுச்சியை அடக்கும் பயிற்சிதான். அதற்கு பிறகுதான் குரு தட்சணை கேட்பேன்

அன்பு சகோதரி அதிரா : நன்றி. உப்பு, புளிப்பு மற்றும் உறைப்பு எப்படி இருக்கு என்று சொன்னால் அதற்க்கு தகுந்த மாதிரி மசாலா கூட குறைத்து போடுவேன். லதாவிடம் சொல்லிவிட்டேன். மிகவும் ஆச்சர்யப்பட்டார். எப்படி என்னை அதிரா நினைவு வைத்து இருக்கிறார் என்றுதான்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

வணக்கம் அண்ணா,
உங்கள் பதிவை முழுமையாகப் படித்தேன். எல்லாமே ஆச்சரியமான விடயங்களாகவே உள்ளன.

பயிற்சிகளுக்காகக் காத்திருக்கின்றோம். ஆனால் என்ன குருதட்சணை கேட்கப் போறீங்கள் என்றுதான் தெரியவில்லை? (எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.)

சகோதரி பிருந்தா

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் காலத்திலேயே அது தன்னுடைய பெற்றோர்களது பதிவுகளைப் பெற்றுக் கொள்கிறது. அதைப் போலவே, ஒவ்வொரு தாவரத்தினுடைய விதையிலும், அந்தத் தாவரத்தின் எல்லாத் தன்மைகளும், குணங்களும் பதிவாகி அந்த விதையானது செடியாக வளரும் போது அந்தக் குணங்கள் ஒவ்வொன்றாகப் பிரதிபலிக்கின்றன.

ஆகையால் தான், கருமையத்தை மனித இனத்துக்குக் கிடைத்த தெய்வீகப் புதையல் எனலாம். அந்தக் கருமையம் தான் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றலினுடைய நீதிமன்றம் என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்லாமல், அதே கருமையம் தான் ஒருவரது தற்போதைய வாழ்க்கையில் ஏற்படும் உணர்வுகளுக்கெல்லாம் உற்பத்திக் கூடமாகவும், கருத்தொடராக வந்த பதிவுகளுக்கெல்லாம் களஞ்சியமாகவும் விளங்குகிறது.

ஒவ்வொருவரும் கருமையத்தின் பெருமையைத் தெரிந்து கொள்வதோடு, அதை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருமையந்தான் 'ஆன்மா' எனப்படுகின்றது. கருமையத்தின் தன்மைகள் தான் ஒரு சீவனின் முற்பிறவிகள் பலவற்றுக்கும் பின்பிறவிகள் பலவற்றுக்கும் கருத்தொடர் விளைவாகத் தொடர்புற்றிருக்கின்றது.

வாழ்க்கையை வாழ்வதற்கும் இன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், அறிவில் முழுமை பெறுவதற்கும் கருமையத்தை எப்போதும் வளமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு மனதுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அதாவது இரண்டு விதத்தில் உடலுக்குப் பயிற்சி வேண்டும். இது வரையில் செய்த செயல்களினால், இந்த அணு அடுக்குகள் எல்லாம் சீர் குலைந்துபோய் நோய் பதிவாகியிருக்கும். அவையெல்லாம் போக்குவதற்கும், இனி நோய் வராமல் இருப்பதற்கும் தக்க பயிற்சி உடற்பயிற்சி அவசியம்.அதற்கும் மேலாக எல்லோருக்கும் கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அதைத் தூய்மை செய்வதற்கு காயகல்பப் பயிற்சி என்று இதிலேயே ஒரு பயிற்சி இருக்கிறது. வித்து சுத்தம் செய்யும், உயிர்ச்சக்தியை அதிகரிக்கும். அதே நேரத்தில் சீவ காந்த சக்தியையும் அதிகரிக்கும். இந்த மூன்றையும் திருத்தி கருமையத்தையே தூய்மை செய்யக்கூடியது வளப்படுத்தக் கூடியது காயகல்பப் பயிற்சி.

மனிதனுடைய நிலைக்குத் தகுந்தவாறு அவ்வப்போது சில கருத்துக்கள் வரும். அப்படி ஏற்படக்கூடிய கருத்து எதுவானாலும் சரி நான்கு முகங்கள் உள்ளன.

1.தேவையின நீதி (Justification of need)
2.தேவையின் அளவு (Justification of Quality)
3.தேவையின் தன்மை (Justification of quantity)
4.தேவையின் காலம் (Justification of Time)

எந்தக் கருத்தானாலும் அது தேவையை உணரக்கூடிய அடிப்படையான ஒன்று. எவ்வளவு தேவை என்பது இரண்டு. எது மாதிரியாக அதனை அனுபவிக்க வேண்டுமென்பது மூன்று எப்பொழுது என்பது நான்கு. இந்த நான்கும் சேர்ந்ததுதான் ஒரு கருத்து.

ஒருவருக்கு இருக்கக்கூடிய கருத்து இன்னொருவருக்கு இருக்காது. இந்த நான்கு வகையிலும் கருத்து ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும். அது மனிதனை மனிதன் உணராததனால், என் கருத்துக்கு இசைந்துதான் அவர் நடக்க வேண்டும், என் கருத்தைத் தான் அவர் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு (Ego) தன்முனைப்பு என்பது எல்லோருக்கும் உண்டு. அந்த தன்முனைப்பு எதுவரைக்கும் உண்டு?

தன்னையறியும் வரைக்கும்.தேவைப்படக்கூடிய ஒன்றை அறியாத முன்னம், பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் இந்த நான்கிலே சிக்கிக் கொண்டு அங்கு தவிக்கிற பொழுது, அங்கு நான்தான் பெரியவன், எனக்கு வேண்டியதுதான் வேண்டும், நான் விரும்புவதுதான் சரி என்று இந்த நான்கில் இவன் எப்படி நினைக்கிறானோ அதேபோன்று மற்றவர்களும் நினைக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதனால் (Conflict) ஒருவருக்கொருவர் ஒரு பிணக்கு ஏற்படுகிறது. இந்தப் பிணக்குத்தான் இன்று எல்லா சங்கடங்களுக்கும் காரணமே தவிர, சந்தேகம் என்று ஒன்று இல்லை. இருந்தாலும் ஏன் என்றால் இங்குதான் கருத்தொடர் பதிவைப் பற்றி நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.ஒரு மனித உருவம் எங்கிருந்து வந்திருக்க முடியும்? ஐயறிவு இனத்திலிருந்துதான் மனிதன் வடிவம் வந்திருக்க வேண்டும். இயல்பூக்கம் (Mutation) வழியாக வந்திருக்க வேண்டும். மனிதன் தோன்றி இதுநாள் வரையில் இந்தப் பதிவு எங்கிருந்து வந்தது. மனிதனுக்குத் தேவைதானா என்று எண்ணிய ஒரு மனிதன் விடுபட்டான். மற்றவர்கள் அங்கேயே அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால் ஒருவர் வாழ்வை ஒருவர் பறித்துண்ண வேண்டும் என்ற பழக்கமும் அந்த சிந்தனைற்ற செயலும்தான் சந்தேகத்திற்குக் காரணமே தவிர அந்த சந்தேகம் போக வேண்டுமானால் மனிதனுடைய பிறப்பை உணர வேண்டும், பிரபஞ்ச இயக்க நியதிகளை உணர வேண்டும்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணன்
இப்போதான் முழுவதையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனக்கும் நன்றி சொல்லியிருக்கிறீங்கள். எனக்கு, உங்கள் தலைப்பிலுள்ள விஷயங்கள் எல்லாம், மிகவும் பிடித்தவையாகவும் பயனுள்ளவையாகவும் இருப்பதால் தொடர்ந்து உங்களைத் தொல்லை:) ப் படுத்த முடிந்தது.

செல்வியக்கா குடும்பத்தாரைச் சந்தித்திருக்கிறீங்கள் சந்தோஷமே. எங்கள் அட்மின் குடும்பத்தையும் சந்தித்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும்.

கண்பயிற்சிபற்றி நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்கள், வாசிக்க இன்ரஸ்றிங்காக இருக்கு. சின்ன வயதில், வாரம் ஒருமுறை எமது கண்ணுக்கு, அப்பா நல்லெண்ணெய் விட்டு பின்னர் தோயச் சொல்வார். நாங்கள் வளர்ந்ததும் எல்லாம் நின்றுபோச்சு. புலூ பெரி இதயத்துக்கும் நல்லதெனக் கேள்விப்பட்டேன். இன்னுமொரு முக்கிய கேள்வி, சோயாவில் நிறைய சத்துக்கள் இருக்கிறது, ஆனால் சோயாமீற், சோயாபீன்ஸ் எதையும் ஆண்குழந்தைகள்/ஆண்களுக்கு கொடுக்கக்கூடாதென்று ஒரு மருத்துவ ஆராச்சியில் வெளியிட்டிருந்தார்கள், காரணம் மலட்டுத் தன்மையை உருவாக்குகிறதாம்(ஆண்களுக்கு மட்டும்). இதுபற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? ஏனெனில் நிறையப்பேர் சோயாப் பால் கொடுக்கிறார்கள் குழந்தைகளுக்கு.

sardine டின் மீனில், முழுச்சத்தும் கிடைக்குமா? அல்லது உடன்மீனில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளதோ?.(இங்கு உடன் மீன் கிடைப்பது குறைவு, அதில் முள்ளும் அதிகம்).

///(3000 மனைவிகள் அவருக்கு-ஒன்றுக்கே எவ்வளவு கஷ்டம் என்று சாதராண மனிதனுக்குதான் தெரியும்) ///
இந்தக்குசும்புக்கு எங்கேயும் குறைவில்லை:), ஒரு மருத்துவ உலகின் தந்தை அவர், என்பதால்தான், அவருக்கு மனைவியின் அருமை தெரிந்து:) 3000 வைத்திருக்கிறார்:) சாதாரண மனிதருக்கெல்லாம் எங்கே தெரியப்போகிறது மனைவியின் அருமை:).

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்..... இப் பாடல் கேட்கும்போதெல்லாம் எனக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்யும்... அவ்வளவு பிரியமான பாட்டது எனக்கு.

சரியாகச் சொன்னீங்கள் கணவன் மனைவிக்குள் எந்த ஒழிவு மறைவும் இருக்கப்படாது.

ஆனால் எனக்கு தெரிந்த வயதான உறவினர் ஒருவர், சொன்னார், தான் திருமணமான புதிதில், ஒழிவு மறைவெதுவும் இருக்கக்கூடாதென்று, தன் குடும்பக் கதைகளையெல்லாம் கணவருக்குச் சொல்லிவந்தாவாம், வயதான காலத்தில் மனிஷன் அவற்றை எல்லாம் பொறுக்கி வைத்துச் சொல்கிறாராம், உன் குடும்பத்தை எனக்குத் தெரியாதோ... அவரின் நடத்தை தெரியாதோ... இவரைப் பற்றித் தெரியாதோ எனச் சின்னச் சின்னச் சண்டைக்கெல்லாம் குடும்பத்தை இழுக்கிறாராம்.... இப்படியும் சில கேடுகெட்ட ஜென்மங்கள் இருக்கிறார்கள்.

///நல்லாவின் பால்முழுதும் கன்றுக்கில்லை:
...............////
ஹைஷ் அண்ணன், நீங்கள் கற்றதெல்லாம் உங்களுக்கில்லை எமக்கும்தான்....:).

லதா அக்கா ஆச்சரியப்பட்டாவோ?:) அப்போ அவ நிட்சயம் என்னை மறந்துவிட்டா.....:(

ஹைஷ் அண்ணன் உப்பு, புளிப்பு, உறைப்பு எல்லாம் சரியாகவே இருக்கு ஆனால் கிரேவியைத்தான் எமது அளவுக்கு அதிகமாக வைக்கிறீங்கள்..... கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டால்தானே.... எமக்கும் பத்திக்கொள்ளும்...:), உங்களைப்போல எங்களைச் சமனாகப் பார்த்து எழுதுறீங்கள் போல இருக்கு:) நாங்கள் கொஞ்சம் குறைவுதான்:).... மெல்ல மெல்லத்தான் பத்திக்கொள்ளும்.

தியானம் பற்றி வடிவா எழுதுங்கோ. எனக்குத் தெரிந்தது, சப்பாணிகட்டிக்கொண்டிருந்து இரு கைகளையும் முழங்காலுக்கு மேல் வைத்து கண்களை மூடிக்கொண்டு, ஒரு விஷயத்தை மட்டுமே(மனம் அலைபாயாமல்) சிந்தித்துக்கொண்டிருக்கவேணும் என்பது. இதுதான் தியானமோ?

இன்னுமொன்று 16 செல்வங்களிலும் ஒன்று "நெல்" எனப் போட்டிருக்கிறீங்கள், அதெப்படி? உணவு என்பதற்குப் பதிலாக நெல் வருகிறதோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு சகோதரி வாசுகி: ஊக்கத்திற்கு நன்றி. வீட்டில் தயாரித்த நெய்யினால் தீபம் ஏற்றலாம். அதனால் எந்த தவறும் கிடையாது.

அன்பு சகோதரி பிருந்தா: மிகவும் நன்றி நீங்களும் சகோதரிகள் அதிரா, திருமதி சேகர் வரிசையில் சேர்ந்து விட்டீர்களோ!

அன்பு சகோதரி அதிரா: “ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்” என்பார்கள் இன்னும் ஒருவரை தேடிக்கொண்டு இருக்கிறேன் எதற்கா? அரை வைத்தியன் ஆவதற்க்கு தான் அதன் பிறகு குருநாதர் போகரை (முழுவைத்தியர்=3000 ஃ அரை வைத்தியர் ???) பின்பற்றலாம் அல்லவா?? பி.கு என்க்கும் லதாவின் அருமை நன்றாக தெரிந்து கொண்டேன்!

எனக்கும் தான் ஆசை தூண்டிவிட்டு வேடிக்கை பார்பது என்றால் அதில் ஒரு அலாதியான மகிழ்ச்சி அல்லவா? ஆனால் இரண்டு காரணங்களுக்காக அது போல் செய்ய முடியவில்லை. ஒன்று விமானம் ஒரு நிமிடத்தில் 10-12 கி.மீ ஓடும் அல்லவா? அதனால் விமானம் ஓடும் வேகத்தை விட மனம் வேகமாக செயல் பட்டால் தானே விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியும். இரண்டாவது, முதல் இழையின் தலைப்பு நினைவிருகிறதா? 27 மார்ச் 10. அது வரைக்கும் தான் என் குரு என்னை அவிழ்த்து விட்டு இருக்கார்.

கணவன் மனைவி பற்றி எழுத வேண்டும் என்றால் 10 இழை பற்றாது அதில் தான் நான் சூப்பர் ஸ்பேஷலைஸேன், ஆராய்ச்சிகள் செய்து இருக்கிறேன். ஆனால் நேர பற்றாகுறை, என்ன செய்ய இயற்கையின் சித்தம்.
/// திருமணமான புதிதில், ஒழிவு மறைவெதுவும் இருக்கக்கூடாதென்று, தன் குடும்பக் கதைகளையெல்லாம் கணவருக்குச் சொல்லிவந்தாவாம்,/// இதை தான் “நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். கேட்ட்தற்கு (மட்டும்) பதில் சொன்னால் பிரச்சனைகள் குறைவாக வருமல்லவா! (Exceptions are always there!)

Soya :Blakoemax Soya is gently fermented to release the full 20 latent amino acids, which are the basis of DNA and create the energy to regularly renew the body's cells throughout life. Particularly relevant among the amino acids are:
Arginine, which promotes energy and fertility. The body uses Arginine to make nitric oxide, a substance that relaxes the blood vessels promoting erection amongst other things. In a double-blind clinical trial, 50 men with problems achieving an erection received Arginine and consequently their sexual performance was improved
Carnitine, a combination of Lysine and Methionine, which also promotes fertility
Histidine which promotes orgasm as well as alleviating tiredness and stress
Soya also contains the minerals: Calcium and Zinc and the vitamins: Folacin, Niacin, Riboflavin and Vitamin B6.

எதுவுமே அளவோடு சாப்பிடும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. அப்படியே இருந்தாலும் இருக்கவே இருக்கிறது அதிமதுரம், கடுகாய், ஜாதிக்காய் அணுகுண்டை போன்ற ஒரிதழ் தாமரை(போகர் சாப்பிட்ட்து). சோயாவைவிட பிராய்லர் கோழி இனத்தின் தொடை பகுதிதான் அதிகமாக ஆண்களுக்கு மலட்டுதன்மை கொடுக்கும். (அதற்கு தொடையில் போடும் தடுப்பு ஊசியினால்)
சாட்டின் மீன்(3-4), மற்றும் அயிலை(1) மீன் முழுவதுமாக ஒருவர்தான் சாப்பிடவேண்டும், துண்டங்களை மாற்றி சாப்பிட்டால் பலனில்லை. ஒரு ஆர்கனிசத்தில் எல்லா சத்துக்களும் இருக்கும் ஆனால் சில இடம் மாறி இருப்பதால் சில சத்துக்கள் கிடைகாமல் போகலாம். புது மீன் இல்லை என்றால் என்ன செய்வது “ சர்கரை இல்லாத ஊரில் இலுப்பை பூ” போட்டு டீ குடிக்க வேண்டியதுதான். சாட்டின் மீனை நன்றாக சமைத்தால் முள் மிகவும் சகோதரி ஸாதிகாவின் ஸாஃப்ட் சப்பாத்தியை போல் மிருதுவாகிவிடும். பெண்களுக்கு ஏற்கனவே கால்ஷியம் குறைவு அல்லவா?

நெல் என்றால் தானியம் என்று பொருள் அதை இப்படியும் சொல்ல்லாம்.

1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா,

மனிதன் எப்போ "நான்", "எனக்குத் தேவை" என்பதை விடுகின்றானோ, அதிலிருந்து நிம்மதியாக இருப்பான். தேவைகள்/ஆசைகள் கூடக் கூட எமக்கும் பிரச்சனைகள் கூடிக் கொண்டே போகின்றன. "போதும்" என்ற எண்ணம் வந்தாலே நாம் உடலாலும் மனதாலும் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

சகோதரி பிருந்தா

முன் சொல்லிய பஞ்ச பூத உடலமைப்பை நினைவு படுத்திக்கொள்வோம்.

விண் அல்லது ஆகாசம் என்பது உயிராக கருமையதிலும்,
காற்று அல்லது பிராணவாயு (பிராணன்) நுரையிரலை மையமாகவும்,
நெருப்பு அல்லது அக்னி, நரம்புகள் வழியாக ட்ரிபிள் ஹீட்டர் எனும் இடத்தை மையமாகவும். (வால் எலும்பில் உள்ளது. இடது வழி குளிர்விக்கவும், வலபக்கம் சூட்டை அதிகரிக்கவும், நடுவழி உடல் சூட்டை சமநிலை படுத்தவும் செயல்படும்)
நீர் இரத்தமாக, இருதயத்தை மையமாகவும் –It is also called ZERO Point இதன் விளக்கம் இப்போது தேவையில்லை.
மண் பருவுடலாகவும் இருக்கிறது.

இதில் இயற்கையின் விந்தை என்னவென்றால் நுரையிரலை மையமாக கொண்டு செயல் படும் வாயுவை மட்டும் வேண்டும் என்றால் மனதால் கட்டு படுத்தலாம். மூச்சு பயிற்சிதான், பயிற்சியை நிறுத்திய உடன், அனிச்சை செயலாக, தானே நுரையிரல் செயல்படும். உடனே (வேண்டும் என்றால்) நுரையிரல் மனகட்டுபாட்டுக்கு வரும். இதில் வேண்டும் என்றால் என்பதை கோடிட்டு கொள்ளவும்.

உதாரணத்திற்கு ஒரு கண்ணாடி தட்டில் ஒரு துளி பாம்பின் விஷமும், ஒரு துளி விளக்கெண்ணையும் வைத்தால், யாரால் எது விஷம் எது எண்ணை என்று கண்டு பிடிக்க முடியும். சோதித்தால் தானே கண்டுபிடிக்க முடியும்.

அதற்காக என்னை பாம்பின் விஷம் போல் சோதித்த உடனே செயல்படவில்லை என்று எல்லாம் தொல்லை பண்ணக்கூடாது. ஒரு ரகசியம் என்னவென்றால் ஒரு பழக்கத்தை புதிதாக ஏற்படுத்தவோ அல்லது பழக்கத்தில் இருந்து விடுபடவோ 21 நாட்கள் ஆகும் அல்லது 3 வாரம். புதிதாக ஒரு வீட்டுக்கோ அல்லது ஒரு நாட்டுக்கோ அல்லது ஒரு புதிய நபரை சந்தித்தாலோ 21 நாட்களில் அவர்கள் பழகி பழயவராகி விடுவார்கள்.

27 மே 09 இருந்து 17 ஜூன் 09 வரை. (2+1=3 மனித எண், 5 என்பது தெய்விக எண் (ஆத்மா),(5/3 மிக தெய்விகமான எண் Fibonacci Number Golden Spiral) (1+7=8 முடிவில்லாத தொடர்) எனும் சூட்சம கணக்கு, இதற்கு மேல் இதைப் பற்றி விளக்கம் இப்போது யார் கேட்டாலும் பதிக்க முடியாது. ஆர்வ கோளாறு உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கில் படித்து தெரிந்து கொள்ளவும்.

http://en.wikipedia.org/wiki/Fibonacci_number

அதனால் விருப்பமுள்ளவர்கள் இன்று தொடங்கி 17 ஜூன் வரை தினமும் பயிற்சி செய்யவேண்டும். இதற்கு குரு தட்சணை எதும் கிடையாது. மேலும் யாருக்கும் பாதுகாப்பு வளையம் போட போவதும் இல்லை! யார் வேண்டுமானலும் பயிற்சி செய்யலாம். மறைமுகமாக படிபவர்கள் கூட. தேவைப்பட்டால் பலமுறை படித்துக்கொள்ளவும்.

1. நேரம் காலை 4-6
2. கிழக்கு நோக்கி ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து கொள்ளவும்.
3. முதுகு எலும்பு நேராக இருக்க வேண்டும்.
4. வலது கை மடி மீது வைத்துக் கொள்ளவும்.
5. இடது கையின் ஆள்காட்டி விரல்+நடுவிரல் அல்லது பாம்பு விரலை நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளவும். கட்டைவிரல் இடது மூக்கு பக்கமும், மோதிர விரல் வலது நாசியின் பக்கமும் வைத்துக் கொள்ளவும்.
6. நாக்கு நுனியால் வாயின் மேல் பக்கம் (அண்ணத்தில்) தொட்டு கொண்டு
7. கட்டை விரலால் இடது பக்கம் முடி வலது நாசி வழியாக 1,2,3,4,5,6 வரை மூச்சை சத்தம் இல்லாமல் மென்மையாக உள்ளே இழுக்கவும். பின் மோதிர விரலால் வலது நாசியையும் (இரு பக்கமும் மூடி) 1,2,3 க்கு பிறகு கட்டைவிரலை எடுத்துவிட்டு மூச்சை இடது நாசி வழியாக வெளியே 1,2,3,4,5,6 என்று விடவும். பின் 1,2,3 இரண்டு மூக்கையும் முடிக்கொள்ளவும்.
8. அதே போல்இடப்பக்கம் 1,2,3,4,5,6 உள் இழுத்து 1,2,3 அடக்கி வலப்பக்கம் 1,2,3,4,5,6 வெளியே விட்டு காற்று நுரையீரலில் இல்லாமல் 1,2,3 எண்ணி பின் வலது வழியாக உள்ளே (7 ல்) சொல்லியது போல் திரும்ப செய்யவும். இது ஒரு சுற்று எளிமையாக:
9. வலது 1-6 உள்ளே Hold 123 இடது 1-6 வெளியே Hold 123 (அரை சுற்று) --- இடது 1-6 உள்ளே Hold 123 வலது 1-6 வெளியே Hold 123 (ஒரு சுற்று)
10. இது போல் 21 சுற்று ஒரு நாளைக்கு செய்ய வேண்டும்.

இந்த பயிற்சியில் பல பலன்கள் உள்ளது. முக்கியமான பலன் என்னவென்றால் “கோபம், ஆத்திரம் எற்றால் என்ன” வென்று கேட்பீர்கள். அதே போல் இதில் பல சூட்சமங்கள் உள்ளன. பிறகு நேரம் கிடைத்தால் நாக்கு நுனி, மேல் உதடு, கீழ் உதடு மேல் அண்ணம் இவைகளுக்கும் சங்கினி நாடிக்கும், மனம், கணவன் மனைவி அன்னோனியத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறேன். இருந்தாலும் எல்லாவற்றையும் பதிவில் விளக்க முடியாது. நம்பிக்கை உள்ளவர்கள் செய்யவும்.

அடுத்த பயிற்சி 03-5-09 அன்று மன உறுதியை எப்படி வலிமைப் படுத்துவது என்று பார்போம்.

திருமூலர்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அண்ணா வழக்கம் போல் சிறப்பான பதிவு. போகர் பழனி முருகன் மூலவர் சிலை வடித்தார். அவ்ர் சமாதி அங்கு தான் உள்ளது.அவர் 18 சித்தர்களில் ஒருவர் எனபது மட்டும் தான் நானறிந்தது.ஆனால் இனறு உங்களால் அவரை பற்றி பல சுவையான தகவல்கள் தெரிந்து கொண்டேன்.விருந்தே சாப்பிட்டது போல் இருந்தது.படிக்க படிக்க இன்னும் படிக்கனும் போல் இருந்தது.

போகர் பற்றிய செய்திகள் ஆச்சர்யமாகவும், சுவையாகவும் இருந்தது.அது என்ன அண்ணா 'திரணதூமாக்கினி முனி'.(ஹா ஹா ஹா சும்மா கேட்டேன். நீங்க தான் கேட்க கூடாதுனுட்டிங்கல்ல) தொல்காப்பியர்க்கு இப்படி ஒரு பேரா.

கபாலத்துக்குள்ள தேரையா? அய்யோ சாமி.இதுல கபால அறுவை சிகிச்சை வேறா?(எதுக்குடா இந்த வம்புனு தான் நாங்கல்லாம் அமைதியா இருக்கோம்.)
தேரையரோட பெயர் க்காரணம் இது தானா? நான் நினைத்ததுண்டு எப்படி இப்படி பேர் வைக்கறாங்கனு(நிறைய பேரு இப்படி தான வித்தியாசமா இருக்கும்.)இப்ப தான் தெரியுது.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மூச்சு பயிற்சி இன்று செய்தேன்.செய்து முடித்த பின் மனசு சிறிது நேரம் மிகவும் அமைதியாக இருந்தது.நல்லாயிருந்தது.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்