ரிப்பன்பேப்பர் ரோஸ்

தேதி: May 21, 2009

5
Average: 5 (3 votes)

 

ரிப்பன்பேப்பர் - ஒரு ரோல்
கம் டேப் - ஒன்று
அலுமினிய கம்பி - ஒரு கட்டு
அலுமினிய கம்பி கோல்டன் கலர் (தடிமனானது) - ஒரு கட்டு
மகரந்தம் - ஒரு கொத்து
செயற்கை இலைகள் - 2
கத்திரிக்கோல்
நூல் கண்டு

 

ரிப்பன்பேப்பர் ரோஸ் செய்ய தேவையான பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும்
முதலில் பிடித்தமான நிறங்களில் உள்ள ரிப்பன்பேப்பரை எடுத்து அந்த பேப்பரை ஐந்து பாகங்கள் வரும்படி மடித்துக் கொள்ளவும். பிறகு கத்திரிக்கோலை வைத்து விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளவும். ரிப்பன் பேப்பரில் பேனாவைக் கொண்டு என்ன வடிவிலான பூக்கள் வேண்டுமோ அதைப் போல் வரைந்தும் நறுக்கிக் கொள்ளலாம்.
அலுமினிய கம்பியை 20 செ.மீ என்ற அளவுகளில் 5 கம்பிகள் வெட்டி எடுத்துக் கொள்ளவும். வெட்டி வைத்திருக்கும் 5 இதழ்களில் ஒவ்வொரு இதழின் அடியிலும் ஓட்டை போட்டுக் கொண்டு அதில் வெட்டி வைத்திருக்கும் கம்பியை சொருகி, அடியில் சமமாக இருக்கும்படி கம்பியை இரண்டாக மடக்கிக் கொள்ளவும்.
இதழுடன் கம்பியை சேர்த்து பிடித்துக் கொண்டு கீழே இருக்கும் கம்பியை நெருக்கமாக திருகி விடவும். இதழ்கள் பிய்த்துக் கொள்ளாமல் திருகவும். இதைப்போல் எல்லா இதழ்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
பிறகு தடிமனான அலுமினிய கம்பியில் 25 செ.மீ எடுத்துக் கொண்டு அதன் நடுவில் மகரந்தத்தை வைத்து கம்பியை இரண்டாக மடக்கி திருகிக் கொள்ளவும்
தயார் செய்து வைத்திருக்கும் ஒரு இதழை எடுத்து அதன் நடுவில் தடிமனான கம்பியில் முருக்கி வைத்திருக்கும் மகரந்தத்தை வைத்து பிடித்துக் கொண்டு நூலால் ஒரு சுற்று சுற்றி பூத்தொடுப்பது போல் தொடுத்துக் கொள்ளவும்.
அதன் பக்கத்தில் இரண்டாவது இதழை வைக்கும் போது முதல் இதழின் அடியில் இரண்டாவது இதழின் ஒரு புறம் மட்டும் அடியில் இருப்பது போல் வைத்து பூத்தொடுப்பது போல் தொடுக்கவும்.
இதே போல் ஐந்து இதழ்களையும் சுற்றிலும் வைத்து பூத்தொப்பது போல் தொடுத்துக் கொள்ளவும்.
கடைசியில் 5 இதழ்களையும் வைத்து சுற்றிய பிறகு எல்லா கம்பிகளையும் நன்கு இறுக்கமாக முருக்கவும். கம்பி தெரியாமல் இருக்க கம் டேப்பைக் கொண்டு இதழின் அடியில் இருந்து நுனிவரை வைத்து அழுத்தி சுற்றவும்.
பிறகு இலையை பூவின் காம்பில் வைத்து கம் டேப்பால் சுற்றி விடவும்.
இதைப் போல் வெவ்வேறு நிறங்களில் ரிப்பன்பேப்பர் ரோஸ் செய்து கொள்ளலாம்.
இந்த அழகிய ரிப்பன்பேப்பர் ரோஸை பூ ஜாடியில் வைத்து அலங்கரிக்கலாம். இந்த ரிப்பன்பேப்பர் ரோஸை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர், செல்வி. சிந்து அவர்கள். இவர் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

என்னங்க சிந்து செம்ம அழகா இருக்கு..அருமை

உங்க க்ராப்ட்ஸ் எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கு.எனக்கு க்ராப்ட்ஸ், ட்ராயிங் இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். நானும் சிலவகை செய்துள்ளேன். இந்த ரிப்பன் பேப்பரில் செய்ததில்லை.
அவசியம் செய்துவிட்டு சொல்கிறேன். மேலும் தொடருங்கள்.

சிந்து மிகவும் அழகாக இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

alaga irukku.
eppadi ippadi ellam idea varutho.
very creative thinking.
super

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta