முருங்கைகீரை கூட்டு

image

வழங்கியவர் : ESMS-4

தேதி : வியாழன், 21/05/2009 - 17:19

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • முருங்கைகீரை -1கப்
  • பாசிப்பருப்பு -1/2கப்
  • சின்னவெங்காயம் -5
  • காய்ந்தமிளகாய் -2
  • பூண்டு -3பற்கள்
  • சீரகம் -1/2ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணை -1ஸ்பூன்
  • பெருங்காயம் -1/4ஸ்பூன்
  • மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்

 

  • பருப்பை லேசாக வருத்து 10நிமிடம் ஊறவைக்கவும்.
  • கீரையை நன்கு அலசி தண்ணீர்வடியவிடவும்.வெங்காயம்,மிளகாய்,பூண்டு நறுக்கிவைக்கவும்.
  • குக்கரில் எண்ணை ஊற்றி சீரகம் போட்டு வெடித்தவுடன் வெங்காயம்,மிளகாய்,பூண்டு போட்டு வதக்கி கீரையை போடவும்.
  • ஊறவைத்த பருப்பை போட்டு 1நிமிடம் வதக்கி மஞ்சள்பொடி,உப்பு பெருங்காயதூள் போட்டு 1கப் தண்ணீர் ஊற்றி குக்கரைமூடி 3விசில் விடவும்.
  • ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து கரண்டியில் லேசாக மசித்துவிட்டு வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  • சுவையான முருங்கைகீரை கூட்டு ரெடி.

Note:

சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.வெரும் சாதத்தில் கீரை போட்டு 1ஸ்பூன் நெய்விட்டு பிசைந்து குழந்தைகளுக்கு குடுக்கலாம்.