பனீர் மட்டர் மசாலா

தேதி: May 21, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

பனீர் - 200 கிராம்
பச்சைப்பட்டாணி- 100 கிராம்
டொமேட்டொ பூரி - அரை கப்
முந்திரிபேஸ்ட் - 2-3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
வெங்காயம் பேஸ்ட் - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி - அரைஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - அரைஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - அலங்கரிக்க சிறிது


 

பனீரை சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். மற்ற பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
நாண்ஸ்டிக் கடாயில் எண்ணெய்விட்டு பனீரை பொரித்தெடுக்கவும். அதே கடாயில் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, வெங்காயம் பேஸ்ட், டொமேட்டொ பூரி, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி, பச்சைப்பட்டாணி, உப்பு போட்டு பிரட்டி 10 நிமிடம் மூடி திறக்கவும்.
பின்பு முந்திரி பேஸ்ட் சேர்க்கவும், சிறிது தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் பனீர் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து எண்ணெய் தெளியவும் இறக்கவும். மல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான பனீர் மட்டர் மசாலா ரெடி. இதனை நாண், சப்பாத்தி, பரோட்டா உடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்