ஏதாவது சொல்லுங்களேன் ப்ளீஸ்..

என் ஒன்றரை வயது குழந்தை இப்போதெல்லாம் நான் கொடுக்கும் எதையுமே வாங்கி சாப்பிடுவதில்லை. வாயை திறக்கவே மாட்டேங்கிறாள். எல்லா உணவையும் அவளுடைய கையில் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். தண்ணீர் கூட அவளே தான் குடிக்கிறாள். இதில் என்ன ப்ராப்ளம் என்றால் எதுவுமே அவளுடைய வாயில் போகாது. எல்லாம் கீழே கொட்டி விடுகிறாள். சாதம் ஒரு ஸ்பூன் அல்லது ரெண்டு ஸ்பூன் மட்டுமே உள்ளே போகிறது. நிறைய தண்ணீர் குடிக்காததால் யூரின் மஞ்சள் கலரில் போகிறது. கடந்த இரண்டு வாரங்களில் உடம்பும் ரொம்ப மெலிந்து விட்டது. என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.
நான் இப்படியே பழகட்டும் என்று விட்டு விடுவதா அல்லது கட்டாயப்படுத்தி கொடுப்பதா என்று குழப்பமாக இருக்கிறது.
எனக்கு எதாவது ஐடியா சொல்லுவீங்களா யாராவது.

ஹாய் Andrea, நீங்களும் உங்கள் குழந்தையும் நலமா? உங்கள் குழந்தை தன்னாலே சாப்பிடுவதற்கு நீங்கள் சந்தோஷப் பட வேண்டும். ஏனெனில் குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்டாலே தன்னாலே சாப்பிட பழக வேண்டும். இல்லையென்றால் 10 வயது ஆனாலும் ஊட்டிக் கொண்டே பின்னாலேயே திரிய வேண்டி இருக்கும். தானாகவே சாப்பிடும் குழந்தைகள் வளர வளர உணவை ரசித்து நன்றாக சாப்பிடுவார்கள். (அனுபவம்).

இப்போது உங்கள் ப்ரச்சனை குழந்தை சரியாக சாப்பிடத் தெரியாததால்தான். நாளாக நாளாக இப் ப்ரச்சனை சரியாகி விடும். நீங்கள் ஒரு இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை ஏதாவது பழங்கள், காய்கள், ஹெல்தியான ஸ்னாக்ஸ் போன்றவற்றை இடையிடையே குழந்தையிடம் சாப்பிடக் குடுங்கள். எவ்வளவு உள்ளே போகுதோ அவ்வளவு போகட்டும். குழந்தைக்கு ஒரு நாளில் சத்தானது எதுவும் உள்ளே போக வில்லை என்று தோன்றினால் ஒரு வேளைக்கு முடிந்தால் நீங்கள் ஏதாவது நைஸாக பேசி, கதைச் சொல்லி ஊட்டி விடுங்கள். வற்புறுத்தி மட்டும் ஊட்ட வேண்டாம். பிறகு உணவின் மேல் வெறுப்பு வந்துவிடும்.

குழந்தை ஒரேடியாக எடை குறைந்தாலோ அல்லது உங்களுக்கு மிகவும் கவலைப் படும்படி எடை இருந்தாலோ உங்கள் டாக்டரின் ஆலோசனையைப் பெறவும்.

இவை யாவும் என் இரண்டு குழந்தைகளை வளர்த்த அனுபவத்தில் நான் எழுதியது. மற்ற தோழிகள் யாராவது தங்களுடைய கருத்துக்களை சொல்வார்கள்.

உங்கள் பதிவை பார்த்ததும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. என் என்றால் என் மகளும் எதையே தான் செய்கிறாள். உட்டினால் சாப்பிட மாட்டாள் தானாகவே சாப்பிட வேண்டும் என்று அடம் பிடிப்பாள். நான் இதுவரை என் குழந்தைக்கு வற்புறுத்தி சாப்பாடு உட்டியதில்லை. அப்படியே நாம் வற்புறுத்தி உட்டினால் அவர்களுக்கு உணவின் மேல் வெறுப்பு தான் வளரும்.
தானே சாப்பிட விரும்புகிறார்கள் என்றால் மிகவும் சந்தோஷ பட வேண்டிய விஷயம். அவர்களை ஹை சிரில் ஒட்காரவைத்து உணவை நன்கு மசித்து சிறு சிறு துண்டாக பிரித்து வைக்க வேண்டும். நீங்கள் பவுல் அண்ட் ஸ்பூன் வைத்திருந்தால் அதில் சாப்பிட ஆசைபடுவார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன bowl சிறு சிறு உருண்டையாகவோ அல்லது சிறு துண்டாகவோ அதில் வைத்து spoon அல்லது fork கொடுக்க வேண்டும். (kids spoon and fork பயன்படுத்தவும்). முக்கியமாக bib அணிய செய்ய வேண்டும். spoon and fork எப்படி உபயோகபடுத்துவது என்று சொல்லி கொடுங்கள்.
முதல் நாள் ஒரு உருண்டை அல்லது இரண்டு தான் உள்ளே போகும். பின்பு நாளடைவில் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களாகவே கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். நீங்கள் படகில் உட்கார்ந்தால் சாபிடாமல் விளையாடினால் அவர்களை தனியே விட்டு உங்கள் வேலையை கவனிப்பது போல் பாவனை செய்து அவர்களை கவனிக்க வேண்டும்.
இரண்டு வேளை பால் (whole மில்க்) கொடுங்கள். மொத்தம் 16 oz மட்டும் தான் கொடுக்கவேண்டும். இடை இடையே சூப் வேகவைத்த காய்கறி பழங்கள் கொடுத்து பழகுங்கள். காய்கறிகள் மற்றும் பழங்களை சிறு சிறு துண்டுகளாக கொடுக்க வேண்டும். cookies அல்லது juices அதிகம் கொடுக்க வேண்டாம். ஒரு வயது நிரம்பியதால் முட்டை கொடுக்கலாம். scrambled egg கொடுங்கள். தினம் உணவில் மாற்றம் இருக்க வேண்டும். மாலையில் வாக்கிங் கூட்டிடுபோங்கள். எந்த உணவு கொடுத்தாலும் தண்ணீர் கொடுக்க மறக்காதீர்கள். அவர்களே குடிக்க ஆசைபட்டாலும் பரவாயில்லை. தண்ணீர் மேல சிந்தினாலும் பரவில்லை. முதலில் சிறுதளவு தண்ணீர் கொடுத்து பழுகுங்கள்.
எனினும் ஒவ்வொரு குழந்தையின் செயலும் வளர்ச்சியும் ஒன்றாக இராது. எனினும் குழந்தையின் வளர்ச்சி தளங்களுக்கு திருப்தி தரவில்லை என்றால் அவளுடைய பழக வழக்கங்களை நோட் பண்ணி அடுத்த செக்குப் போகும் போது உங்களின் குழந்தை நல மருத்துவரிடம் கருத்து கேளுங்கள்.

All the best.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என் பதிப்புக்கு பதில் கொடுத்த வின்னிக்கும்,திருமதி மூர்த்தி அவர்களுக்கும் மிகவும் நன்றி. ரொம்ப குழம்பி போய் இருந்தேன். இப்போது ஓரளவு தெளிந்து விட்டேன். நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் ட்ரை பண்ணி கொண்டு இருக்கிறேன். நன்றி.

மேலும் சில பதிவுகள்