ராஜ்மா கறி

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ராஜ்மா - இரண்டரை கோப்பை
பெரிய வெங்காயம் - 2
பெரிய தக்காளி - 3
இஞ்சி - 10 கிராம்
பூண்டு - 12 பல்
மிளகாய் வற்றல் - 3
கரம்மசாலாப் பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
தாவர எண்ணெய் - அரை கோப்பை
தண்ணீர் - நான்கரை கப்
உப்பு - தேவையான அளவு


 

இஞ்சியையும், பூண்டையும் சேர்த்து அரைத்து விழுதாக்கவும்.
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் சூடாக்கி அதில் மிளகாய் சேர்க்கவும். சில வினாடிகளுக்கு கிளறவும்.
பிறகு நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்க்கவும்.
சில வினாடிகளுக்குக் கிளறி விடவும். அதன் பின் தக்காளி, மிளகாய் பொடி, உப்பு இவற்றைச் சேர்க்கவும்.
தக்காளி கூழாகி அவற்றிலிருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை (சுமார் ஐந்து நிமிடங்கள்) இடைவிடாது கிளறிக் கொண்டே இருக்கவும். ராஜ்மா மற்றும் தண்ணீரைச் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி நன்றாக எரியும் அடுப்பில் வைத்து, முழு பிரஷருக்குக் கொண்டு வரவும்.
பின்பு அதே அடுப்பில் குறைந்த தீயில் மேலும் 20 நிமிடங்கள் சமைக்கவும்.
அடுப்பிலிருந்து குக்கரை இறக்கவும். இயல்பாகவே ஆற விடவும். பிறகு குக்கரைத் திறந்து அகப்பையின் பின்புறத்தால் பருப்பை அரை குறையாக கிரீம் போன்ற சாறு ஆகும் வரை மசிக்கவும்.
கரம் மசாலாப் பொடியைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்