மீன் குழம்பு

தேதி: May 23, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (15 votes)

 

சுத்தப்படுத்திய மீன் துண்டுகள் - 500 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 5 அல்லது 6 பற்கள்
கறித்தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
புளி - 25 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாதூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதனுடன் கறித்தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் மீதமுள்ள கறித்தூளையும் வெந்தயத்தையும் போட்டு பிரட்டி விடவும்.
புளியுடன் 250 மி.லி சுடுத்தண்ணீர் ஊற்றி கரைத்து அதை பிரட்டியவற்றுடன் ஊற்றவும்.
இந்த கலவை சூடாகி கொதித்ததும் அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை போடவும்.
சிறிது நேரம் கழித்து பாதியளவு வெந்ததும் மீன் துண்டுகளை திருப்பி விடவும். அடிக்கடி கரண்டியை வைத்து கிளறி விடக்கூடாது. குழம்புடன் கரம் மசாலா, கறிவேப்பிலை சேர்த்து விட்டு உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும்.
மீன் நன்கு வெந்து குழம்பு கெட்டியானதும் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும். சுவையான மீன் குழம்பு ரெடி. அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் அதிரா மேடம்
மீன் குழம்பு சூப்பர்.
ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதனுடன் கறித்தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.இது புது முறை.
குழம்புக்கு கடுகு சிரகம் போடத்தேவயில்லைய?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அய்யோ! எவ்வளவு அருமையான மீன்குழம்பு அதிரா அசத்திவிட்டீர்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆகா ஓப்பன் பண்ணதும் மீன் குழம்பா?
சூப்பர் பார்க்கவே நல்ல இருக்கு, இதில் கிரேவி அவ்வளவா வராதா?

அதிரா நல்ல இருக்கீங்களா? எல்லோருடய சமையலும் படம் பிடித்து போடுகிறீர்கள், உங்கள் சமையலும், அப்ப உண்மையில் நீங்கள் தான் சமையல் ராணி.

Jaleelakamal

மீன் குழம்பு...
இப்போதான் ரஸியாவின் பிறியாணி செய்து சாப்பிட்டுவிட்டு வந்தேன், இங்கே மீன்குழம்பு, பார்த்ததும் சாப்பிடவேணும்போல் இருக்கு.

சுகா, மிக்க நன்றி. சீரகம் சேர்த்துத்தானே கறித்தூள் செய்கிறோம் அதனால் சீரகம் சேர்க்கத் தேவையில்லை. கடுகு நாங்கள் இக் குழம்பிற்குப் போடுவதில்லை. நிட்சயம் மீனுக்கு எல்லாம் பிரட்டி, முடிந்தால் அதிக நேரம் ஊறவைத்தபின் சமைத்தால் சுவை அதிகமாகும். அப்போதான் மீனில் உப்பு உறைப்பு நன்கு ஊறியிருக்கும். நானும் சிலவேளை அவசரத்துக்காக பிரட்டாமல் சமைப்பேன் அம்மா பேசுவா...

ஆசியா மிக்க நன்றி. ஜலீலாக்கா நான் இப்போ பறவாயில்லை. இது கிரேவி இல்லாமல் செய்தேன். எங்கள் வீட்டில் கிரேவி பெரிதாகத் தேவையில்லை என்பதால் அப்படிச் செய்தேன். வேண்டுமென்றால் புளி கரைத்து விடும்போது தண்ணியின் அளவைக் கூட்டி வைத்தால் கிரேவி கிடைக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அழகாக சமைத்து படம் பிடித்து இருக்கின்றீர்கள்.கறித்தூள் என்றால் அதில் என்னென்ன மசாலா பொருட்கள் சேர்ப்பீர்கள்?தக்காளி போடாமலேயே குழம்பு.கண்டிப்பாக செய்து பார்க்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா, எங்கள் கறித்தூளுக்கு, செத்தல்மிளகாய், மல்லி, பெருஞ்சீரகம், நற்சீரகம், மஞ்சள், மிளகு இவ்வளவும்தான் மெயின், நன்கு வறுத்து பின்னர் அரைத்து எடுப்பதுதான் எமது கறித்தூள். விரைவில் யாரும் சமைக்கலாமில் போடவுள்ளேன். அத்தோடு அவரவர் விருப்பத்திற்கு வாசனையும் சேர்ப்பார்கள்... அதாவது.. கறுவா, கராம்பு, கறிவேப்பிலை... சிலர் வாசத்திற்காக, உள்ளிச் செட்டையையும் சேர்ப்பார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா மேடம்
இன்று உங்களுடைய மீன் குழம்பு வைத்தேன் ரொம்ப நல்ல வந்தது விட்டில் விருந்தினர் வந்தாங்க ஒரே பாராட்டுதான். உங்களுடைய குறிப்புக்கு மிக்க நன்றி
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

சுகா, சமைத்துப்பார்த்து பின்னூட்டமும் தந்தமைக்கு மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா,
உங்கள் பெயர்க்கு என்ன அர்த்தம்? இது தமிழ் பெயரா? தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

அதிரா: அதி(மிக அதிகமான-பண்பு சொல்)+ரா(எதிர்வினை சொல்) அமைதியான பெண் என்று பொருள்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அதிரா நேற்று உங்கள் ஸ்டைலில் மீன் குழம்பு செய்தேன். நல்லா வந்துச்சு. நான் இலங்கையில் கனெக்டிங் பிளைட் லேட் ஆனாதால் 1 நாள் அங்கு தங்கியிருந்தேன். அங்கு நான் சாப்பிட்ட மீன் குழம்பு காரமே இல்லை. இலங்கையில் இப்படி தான் செய்வாங்க போலன்னு நினைச்சேன். ஆனா அதிரா இந்த குழம்பு கார சாரமா மீனுக்குள்ளும் மசாலா சேர்ந்து சாப்பிட நல்லா இருந்தது.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அமைதியாக வந்திருக்கிறேன்:)
ஜேபி, எனக்கு இப் பெயரின் அர்த்தம் தெரியாது, அதுதான் ஹைஷ் அண்ணன் சொல்லிட்டார், அமைதியான பெண் என்று அர்த்தம் என்று, அதுக்காக என்றாலும் அமைதியாக இருக்க வேண்டும் நான்:), மிக்க நன்றி ஹைஷ் அண்ணன். நடிகர் அரவிந்தசாமியின் மகளின் பெயரும் அதிரா எனக் கேள்விப்பட்டேன்.

உமாராஜ் மிக்க நன்றி. இலங்கையில் எல்லோரும் காரம் அதிகம் சேர்ப்பார்கள் என்றில்லை. இடத்துக்கு இடம் மாறுபடும். முக்கியமாக வடபகுதி மக்கள் அதிகம்.... அதிகம் காரம் சேர்ப்பார்கள். ஆனால் இத் தூளில் மிளகாய் காரம், சேர்ப்பதைப் பொறுத்தே கூடவோ குறையவோ இருக்கும். மற்றும்படி மசாலாவாக இருக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அமைதி அதிரா,
பெயர் நன்றாக இருக்கு. எனக்கு பெண் பிறந்தால் வைக்கலாம் என்று இருக்கிறேன்.

ஹாய் அதிரா! இலங்கை முறைப்படி மீன் குழம்பு செய்துளிர்கள். எனக்கு மிகவும் பிடித்த முறை. இன்று அதே முறையில் சமைத்தேன். சுவை அருமையாக இருந்தது. நன்றி
இது அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சூப்பர்,அதிரா.சிறப்பு சமைத்து அசத்தலாமிற்காக சமைத்தேன்.அருமை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ராணி மிக்க நன்றி.

ஆசியா மிக்க நன்றி. என்ன நீண்ட நாளாகக் காணவில்லையே?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

hi mam

i like ur fish curry style thats very nice.

உங்க டைம்க்கு எல்லாரும் இந்தியாவிலேயும், வளைகுடாவிலேயும் தூங்கிருவாங்க.
என்னைமாதிரி சில ராப்பாடிகள் முழிச்சு இருக்கும்
நீங்க இந்த நேரத்துல மீன்குழம்பு நல்லா இருக்குனு சொல்லிகிட்டு இருக்கீங்க
:)நட்புடன்
ஆஷிக்

Yesterday i planned to prepare fish gravy but disappointed to know that current wouldnt be available till evening. I usually prepare coconut paste for fish gravy but yesterday i couldnt put mixie. Then I tried your receipe.Its very good. My husband appreciated. Thanks.

உங்களின் மீன் குழம்பு ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது ..நன்றி

வாழு, வாழவிடு..

உங்கள் மீன் குழம்பு நன்றாக இருந்தது .... நான் இந்த பகுதிக்கு புதியவள் ... இலங்கையை சேர்ந்தவள் தான் ... இப்போது திருமணம் முடித்து துபாய் இல் இருக்கிறேன் ... பெரிதாக சமைக்க தெரியாது .... உங்கள் குறிப்புகளை பார்த்துத்தான் பழகுகின்றேன் .... மிக்க நன்றி .....

ஹாய் நான் இந்த மீன் குழம்பு செய்தேன் சுவை நன்றாக இருந்தது. விருப்ப படியலில் சேர்த்துவிட்டென்.வாழ்த்துக்கள்.

Dreams Come True..

meen thunduku muthale uppu thool piradi seithaal madume oil pavithu vathaki pin kulampu koodi vaikiraarkal...because amma soluvaa niraya karikaluku venkaayam,poondu vathaki vaithaal thaan suvai athikam.but meen kulampuku madum oil pavika kudaathu ean endaal uppu thool meenukul ura vidaathunu, so vathaki vaipathenraal porumaiyaka uppu thool piradi uravaithu athira kuripu mathiri seiunkal super..but sollapada ellarhaium serthu koodi pin adupil vaithu (oil serthu vathakaamal)irakinaal meen thundum super,athil podda venkaayam kuda suvai. amma sonathu pakirthen..