முட்டை மற்றும் சாசேஜ் ரோஸ்ட்

தேதி: May 25, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

 

மெல்லிய சாஃப்ட் பிரெட் - 4 துண்டுகள்
முட்டை - 2
சாசேஜ் - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டர்/மாஜரின் - பிரெட்டில் பூசுவதற்கு


 

சாசேஜ் ரோஸ்ட் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாண் துண்டுகளை கரையை நீக்கி விட்டு மெல்லிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய் தூள், உப்பு போட்டு அடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் சாசேஜை போட்டு நன்கு வாட்டி எடுத்து முட்டை கலவையில் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
மிகுதியான எண்ணெய் ஊற்றி இந்த கலவையை அப்பம் போல குறைந்த தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். ப்ரெட் துண்டுகளில் ஒரு பகுதியில் மட்டும் மாஜரின்/பட்டரை நன்கு பூசி விடவும்.
இப்பொழுது செய்து வைத்திருக்கும் அப்பத்தை ப்ரெட்டின் அளவிற்கு நறுக்கி ப்ரெட்டின் உள்ளே வைத்து மூடி அதை டோஸ்டரில் வைக்கவும். டோஸ்டரின் லைட் சிவப்பு நிறமாக மாறும் வரை டோஸ்ட் செய்யவும்.
லைட் சிவப்பு நிறத்திற்கு மாறியதும் உடனேயே ப்ரெட்டை வெளியில் எடுத்து விடவும். அழகாக வெட்டப்பட்டிருக்கும் அல்லது அந்த அடையாளத்தின் மேலே மெதுவாக கத்தியால் வெட்டி பிரிக்கவும். சுவையான எளிதில் செய்யக்கூடிய சாசேஜ் ப்ரெட் ரோஸ்ட்.

இதைப் போல செய்து வேலைக்கு/ஸ்கூலுக்கு செல்லும் போது கொடுக்கலாம். சாண்விச் பைகளில் அல்லது அலுமினியப் பேப்பர்களில் நன்கு சுற்றிக் கொடுக்க வேண்டும். அப்போது தான் சாப்பிட இலகுவாக இருக்கும். உடனே சுடச்சுட, திடீர் விருந்தாளிகள் வந்துவிட்டால் இப்படிச் செய்து அசத்தலாம்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு இந்த சாண்ட்விச். இப்போ அதிகமா சாண்ட்விச்தான் செய்கிறேன். இந்த வீக் செய்வேன். காப்பி பண்ணி என் மெயிலில் வைத்துக் கொண்டேன். அதிரா ஒரு சந்தேகம் சாசேஜ் எந்த சாசேஜ் யூஸ் பண்ணியிருக்கீங்க. சிக்கன் சாசேஜ்தானே. சந்தேகத்தை தெளிவு படுத்துங்க அதிரா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் அதிரா மேடம்
உங்களுடைய சான்விச் சூப்பர்
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

கலோஅதிரா மேடம் அசத்திட்டிங்க. நானும் எவளவோ விதமான சாண்டுவிச் செய்துள்ளேன் ஆனால் இது புதுவிதமானது, செய்வதும் மிகவும் சுலபம் நன்றாக இருக்கின்றது. நீங்கள் அதிகமாக இலங்கை சமையல் செய்து காட்டுகின்ரிர்கள், நீங்கள் இலங்கைல் பிறந்தவரா? அறிய ஆவல். நான் இலங்கைல் பிறந்தவர்.ஆனால் சிறு வயதிலேயே ஐரோபா மாறிவிட்டேன்.எனக்கு இலங்கை சமையல் மிகவும் பிடிக்கும் love Rani.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பிரெட் ரோஸ்ட்,
தனிஷா மிக்க நன்றி. நான் இப்படித்தான் நிறைய பொருட்களை உள்ளே மாற்றி மாற்றி வைத்து ரோஸ்ட் செய்வேன். ரின்மீன் சம்பல், அவித்த முட்டை, உருளைக்கிழங்கு பிரட்டல் கறி.... இப்படியெல்லாம் உள்ளே வைத்தெடுப்பேன். திடீரென விருந்தாளிகள் வந்தாலும் இப்படி 2/3 விதமாகச் செய்து ரீயோடு கொடுப்பேன்.

சரி இதில் நான் பாவித்துள்ளது சிக்கின் வித் ஒலிவ் சொசேஜ். எப்பவுமே சொசேஜ் சிக்கினில் வாங்குவதுதான் நல்லது. நான் ஒரு ஆர்டிகல் படித்தேன். அதில் எழுதியுள்ளதைப் பார்த்தால்(எப்படித் தயயரிக்கப்படுகிறதென்று) யாருமே வாழ்க்கையில் சொசேஜ் சாப்பிட முடியாது. கொஞ்சக்காலம் நானும் வாங்குவதை நிறுத்தினேன் இப்போ மீண்டும் தொடங்கிவிட்டேன். விலை பார்க்காமல் தரமான சுப்பர்மார்கட்டில்தான் நிட்சயம் வாங்குங்கள், முடிந்தவரை சிக்கின் தவிர ஏனைய சொசேஜ் வாங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். இதுக்குமேல் இதுபற்றி இங்கே நான் கதைப்பது அழகல்ல.

சுகா மிக்க நன்றி. உங்களைப்போன்ற ஊக்குவிப்பாளர்களுக்காகவே நிறையச் செய்துபோடலாம் குறிப்புக்கள்.

ராணி மிக்க நன்றி. நீங்களும் இலங்கையோ.. நான் இலங்கையில் பிறந்து இலங்கையில் தவண்டு, இலங்கையில் நடந்தனான்.. இப்போ இங்கே இருக்கிறேன். ஆமாம் இது சிம்பிள் சான்விச் தான் சுலபமாகச் செய்துவிடலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த சாண்ட்விச் இன்று செய்தேன். சுவை சூப்பராக இருந்தது. நான் எப்போதுமே சாசேஜ் வாங்குவதில்லை அதிரா. நீங்கள் இதில் சேர்க்கவும் வாங்கலாம் என நினைத்தேன். நீங்க சாசேஜ் பற்றி இப்படி கூறியதும் வாங்கவில்லை. அதன் பிறகு சிக்கனை க்ரில் செய்து சின்ன சின்னதாக பிய்த்து போட்டு இதே மெத்தடில் செய்தேன் சுவை சூப்பர் அதிரா. ரொம்ப நன்றி உங்களுக்கு.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா மிக்க நன்றி
என்ன? என் பதிவால் பயந்துவிட்டீங்கள்போல:). பயப்படாமல் சிக்கினில் வாங்கிப் பாவியுங்கள். பயப்படும்படி ஏதுமில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா முட்டை மற்றும் சாசேஜ் ரோஸ்ட், ரொம்ப நலல் இருக்கு, நான் அடிகக்டி செய்வேன் ஆனால் டோஸ்டரில் சிக்கன், வெஜ், கீமா தான் செய்து உள்ளேன்,இது போல் செய்ததில்லை.
ஏன் சாசேஜ் ரொம்ப பெருசாஇருக்கு, எனக்கும் சாசேஜ் பிடிக்காது, பிள்ளைகளுக்கு மட்டும்செய்து கொடுப்பேன்.
சிக்கன் பிராஅண்ட் முக்கியம் பார்த்து வங்கனும்.
இரட்டையர்கல் நலமா?

Jaleelakamal

அதிரா எனக்கொரு சந்தேகம்
நான் எப்பவாவது இந்த பெரிய சாசேஜ் வாங்கலாமா என்று யோசிப்பேன் பிறகு அதை ஃப்றொசென் ஆக்கினால் எப்படி வெட்டி எடுப்பது என்று யோசித்து வாங்க மாட்டேன்.சின்னதாக இருந்தால் தட்டி எடுத்து விடலாம்
நீங்க எப்படி வெட்டுவீங்க?அல்லது ஃர்பீசரில் வைக்காமல் கீழேயே வைத்து உபயோகித்து தீர்ப்பீர்களா

ஜலீலாக்கா, தளிகா
ஜலீலாக்கா, இதைவிடப் பெரிய சோசேஜ்ஜும் கிடைக்கிறது. நான் அதிகம் பெரிய உருண்டைகள் வாங்குவதில்லை. இங்கு அனைவரும் நலமே. மிக்க நன்றி. நீண்ட நாளின்பின் கண்டது சந்தோஷமாக இருக்கு. இனி அடிக்கடி வாங்கோ.

தளிகா,
நான் ஒருபோதும் சொசேஜ் பிரீசலில் வைப்பதில்லை. பிரிஜ்ஜில்தான் வைப்பேன். ஒரு கிழமைவரை இருக்கும். அதுக்குள், புட்டுக்கு, றைஸ்ஸுக்கு சின்னனாக வெட்டிப் பொரிப்பேன், இப்படி பிரெட் ரோஸ்ட் அப்படி ஏதாவது செய்து முடித்துவிடுவேன். நன்கு பொரித்தால் உடனேயே முடிந்துவிடும். ஆனால் பெரிய உருண்டை நீளம் குறைவானதும் இருக்கு, அதை வாங்குங்கள். முடித்துவிடலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா முட்டை சாசேஜ் றோஸ்ட் சுவையாக இருந்தது.இன்று காலை தான் செய்தேன் நீட்டாக சுவையாக வந்தது என் கணவரும் என்னது புது ரெசிபியா இருக்கேன் என்று கேட்டார்..நன்றி அதிரா