BABY ADOPTION......(Help me friends....)

ஹாய் friends,

என் friend ஒரு குழந்தையை தத்துஎடுக்க விரும்புகிறாள்...அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது..(2 years ) தத்து எடுப்பது பற்றி,அதாவது அதனை பற்றி ஒரு சிறிய கருத்தாய்வு தரவும்.....சிலர் என் friend டை பயமுதுகிரர்கள் .....விரிவாக கருத்துகளை சொலவும்....நன்மை மற்றும் future இல சந்திக்கும் problem இது பற்றி விவாதிக்கவும்....(my friend wants to adopt a FEMALE baby)..

Help me friends.......

அன்புடன்
ஸ்ரீ

தோழியிடம் நல்ல ஆலோசகரிடம் ஆலோசனை பெற சொல்லுங்கள்
அடுத்தவர்கள் சொன்னால் பயம் வராமல் இருக்கும் அளவுக்கு தத்தெடுக்கும் பெற்றொர் உறுதியான மனநிலையுடன் இருப்பது தான் குழந்தைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க உதவும்
நல்லதொரு காரியம் என்றாலும் நிறைய சிக்கல் உள்ளது நமது சமுதாயத்தினரின் பார்வை உங்களுக்கு தெரியும் அதிலிருந்து குழந்தையை காக்க பெற்றோர் உறுதியாக இருக்க வேண்டும்..முழுமனதுடன் குழந்தையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற்றொருக்கு இருக்க வேண்டும்..எங்கு வளர போகிறது எப்படி வளர போகிறது என்பதிலும் பெற்றோர் உறுதியாக இருக்க வேண்டும்.
நல்ல ஆலோசித்து நல்ல முடிவை தேர்ந்தெடுக்க உங்கள் தோழிக்கு வாழ்த்துக்கள்

ஹலோ ஸ்ரீ,

முதலில் உங்கள் தோழியின் முடிவை பாராட்டுகிறேன். எதற்கும் பயப்படாமல் தைரியமாக தத்தெடுக்க சொல்லுங்கள்... முதலில் ஒரு ஆண் குழந்தை இருப்பதாக சொல்லி இருந்தீர்கள். இதிலிருந்தே தெரிகிறதே.. அவர்கள் கட்டாயத்தால் தத்தெடுக்கவில்லை. அதனால், அந்த குழந்தையை தன் குழந்தையாக வளர்க்கும் அளவுக்கு மனப்பக்குவம் அவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும். அதனால் மனதை குழப்பிக் கொள்ளாமல் இருக்கச் சொல்லுங்கள். எனக்கு தெரிந்த தோழி ஒருவர் பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரும் அறுசுவை தோழி தான்... அவர் தத்தெடுத்து வளர்த்து வரும் குழந்தைகள் எல்லாம் இலங்கை போரில் கைவிடபட்டவர்கள். அவரை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கும். இத்தகைய செயல்களை செய்யும் போது.. உங்கள் மேல் பெருமை கொள்ளுங்கள்...
இதை பற்றி மேலும் நம் தோழிகள் ஆலோசனை கூருவர்.

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

ஹாய் லக்ஷ்மி,thalika,

கருத்து கூறிய உங்களுக்கு என் நன்றிகள்....அறுசுவை தோழிகள் யாராவது குழந்தையை தத்துஎடுத்த அனுபவம் இருந்தால் அவர்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...

அன்புடன்
ஸ்ரீ

அறுசுவையில் யாரும் இருக்கிறார்களா தெரியவில்லை
எங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் வீட்டு வேலைக்காரி இறந்து விட யாரும் பெண்குழந்தையை பார்க்க இல்லை அதனால் இவர்கள் விரும்பி தாங்களே வளர்த்தார்கள்...மற்றவர்கள் கண்படும் அளவுக்கு அழகாக அந்த குழந்தையை 1 வருடம் வளர்த்தார்கள்..ஆனால் கூட்டுக் குடும்பத்தில் மாமியார் தொல்லை ரொம்ப அதிகமாகியது..குழந்தையின் முன்னேயே கறுப்பு கறுப்பு என்று சொல்லி அதனை திட்டிக் கொண்டே இருப்பார்கள் இப்படியே போனால் குழந்தையின் மனசு பாதிக்கும் என்று இவர்களே வேறு யாரிடமோ வருத்தத்துடன் தத்தெடுக்க கொடுத்து விட்டார்கள்..அதனால் முடிந்தவரை தம்பதியினருடைய முகசாயலிலேயே குழந்தையை தத்தெடுப்பது நல்லது

உறவினர் ஒருவர் பெண்குழந்தையை தத்தெடுத்தார் தற்பொழுது என் மகளது வயதிருக்கும்.குழந்தையில்லாத காரணத்தால் எடுத்தார்கள்..ஆனால் மற்றவர்கள் பொறாமை படுமளவு குழந்தையை அருமையாக வளர்க்கிறார்கள்.
ஆனால் முதல் குழந்தை சொந்த ரதத்தில் பிறந்த குழந்தை என்பதால் தத்தெடுக்கும்பொழுது அக்குழந்தையிடம் நிதானமாக யோசித்து தான் அனுக வேண்டும்..ஒரு குறிப்பிட்ட வயதில் ஒரு 8 வயதுக்குள் தான் தத்தெடுக்கப்பட்டது என்று நாமே சொல்லிவிடுவது நல்லது..
அது தெரிந்த குழந்தைகள் தம்மை வித்யாசமாக பார்க்கிரார்களோ என்று நினைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்..அதனால் முடிந்தவரை குழந்தையிடம் நாம் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை சொல்லி வளர்த்த வேண்டும்...மூத்த குழந்தையிடமும் அது போலவே பழக்க வேண்டும்.

ஹாய் thalika,

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி .....என் தோழியிடம் சொல்கிறேன் .............

அன்புடன்
ஸ்ரீ

http://www.csa.org.in/Final%20Latur%20HTML/agency_sri%20ganesh.asp

இங்கு மற்ற இடங்களை விட எளிதில் குழந்தையை தத்தெடுத்து கொண்டு வரலாமாம்.
யாருக்கேனும் உதவும் என்பதால் இங்கு போடுகிறேன்

ஹாய் ஸ்ரீ,

குழந்தை தத்து எடுப்பது பற்றி
http://www.arusuvai.com/tamil/forum/no/5663?from=10&comments_per_page=10
இதில் சில கருத்துக்கள் உள்ளன.

BE HAPPY ALWAYS

hai,

thanks for ur valuable reply...thank u very much...

from
sri

hai,

thank u very much for ur reply......

from
sri

hai,

thank u very much for ur reply......

from
sri

மேலும் சில பதிவுகள்