பேப்பர் கப் கொண்டு அழகிய பூ வாளி செய்வது எப்படி?

தேதி: May 28, 2009

5
Average: 4.7 (3 votes)

இந்த அழகிய பூ வாளியை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர், திருமதி. ஜீவா மோகன் அவர்கள். சமையலில் தீவிர ஆர்வம் கொண்ட இவர். உணவுச் சத்துக்கள் குறித்து ஏராளமாக படித்தவர். சமையலில் மட்டுமல்லாது பின்னல் வேலைகள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் செய்தல், ஓவியம் வரைதல் இவை அனைத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர்.

 

பேப்பர் கப் - 1
சணல் கயிறு
அலுமினிய கம்பி
ஸ்டாக்கின் துணி - மஞ்சள் மற்றும் ப்ரெளன் நிறம்
இலை - 1
கத்திரிக்கோல்
பெவிக்கால்
நூல்
ஸ்ட்ரா
பஞ்சு
ரிப்பன் லேஸ் - ஆரஞ்சு நிறம்

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் ஸ்ட்ராவை கப்பின் உயரத்திற்கு நறுக்கி கொள்ளவும். கப்பை சுற்றிலும் ஸ்ட்ராவை ஒட்டுவதற்கு தேவையான அளவு நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு கப்பில் பெவிக்கால் தடவி முதலில் ஒரு ஸ்ட்ராவை வைத்து ஒட்டவும். அதை தொடர்ந்து வரிசையாக நறுக்கிய எல்லா ஸ்ட்ராவையும் கப்பை சுற்றிலும் வைத்து ஒட்டிக் கொள்ளவும்
அலுமினிய கம்பியை 6 செ.மீ அளவுக்கு வெட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு கம்பியை பாதியாக வளைத்துக் கொள்ளவும். வளைத்த கம்பியை ஸ்டாக்கின் துணியின் ஒரு முனையில் வைத்து கம்பி முழுவதும் மறையும் படி வைத்து இரண்டு முனையும் இணையும் இடத்தில் இறுக்கமாக பிடித்துக் கொண்டு நூலால் பூ தொடுப்பது போல் தொடுத்து முடிச்சு போட்டுக் கொள்ளவும். பிறகு கத்திரிக்கோலால் அடியிலிருக்கும் துணியை வெட்டி விடவும். இதேப் போல் 9 இதழ்கள் செய்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் சிறிதளவு பஞ்சை எடுத்து அதை ப்ரெளன் நிற ஸ்டாக்கின் துணியின் நடுவில் வைத்து இறுக்கமாக பிடித்துக் கொண்டு பூ தொடுப்பது போல் தொடுத்து முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
பிறகு 6 செ.மீ அளவிற்கு அலுமினிய கம்பியை எடுத்து முடிச்சு போட்ட மொட்டுப்பகுதியில் வைத்து நன்கு இறுக்கமாக இரண்டு சுற்றுகள் சுற்றவும்.
அதன் பிறகு ப்ரெளன் நிறத்தில் செய்த மொட்டை கையில் பிடித்துக் கொண்டு மொட்டின் பக்கத்தில் ஒரு இதழை வைத்து நூலால் பூத்தொடுப்பது போல் தொடுத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
அடுத்த இதழை வைக்கும்பொழுது முதல் இதழின் ஓரத்தில் இரண்டாவது இதழின் நடுப்பகுதி இருப்பது போல் வைத்து பூ தொடுப்பது போல் தொடுத்துக் கொள்ளவும். மொட்டு சுற்றிலும் இதேப் போல் இதழ்களை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து முடிச்சு போடவும். (ஒவ்வொரு இதழ் வைத்த பிறகும் ஒரு முடிச்சு போட்டுக் கொள்ளவும்.) இதழ்களை சுற்றி முடித்தப் பிறகு மொட்டு பிடித்திருக்கும் மீதமுள்ள கம்பியை வெட்டி எடுத்து விடவும்
ஒன்பது இதழ்களையும் வைத்து பூக்கள் செய்து முடித்தப்பிறகு அதன் பின்புறத்தில் இலையை சொருகி வைக்கவும். (இப்போது பார்ப்பதற்கு சூரியகாந்தி பூ போல் இருக்கும்)
அதன் பிறகு செய்து வைத்திருக்கும் பூவின் பின்புறம் பெவிக்காலை தடவி ஸ்ட்ரா ஒட்டிய கப்பின் நடுப்பகுதியில் வைத்து ஒட்டவும்.
திக்கான அலுமினிய கம்பியை 10 செ.மீ அளவு எடுத்துக் கொள்ளவும். அதே அளவிற்கு சணலையும் வெட்டி எடுத்து கம்பியில் நெருக்கமாக சுற்றவும். கம்பியுடன் சுற்றிய சணலின் ஒரு முனையில் ரிப்பன் லேஸை ஒரு இன்ச் அளவிற்கு விட்டு விட்டு முடிச்சு போட்டு கொள்ளவும். அதன் பிறகு லேஸை கம்பி முழுவதும் நெருக்கமாக சுற்றிக் கொண்டே வரவும்.
கம்பியின் நுனி வரை சுற்றியதும் இறுதியில் ஒரு முடிச்சு போட்டுக் கொள்ளவும். பிறகு ஒரு இன்ச் அளவிற்கு ரிப்பனை விட்டு விட்டு மீதி ரிப்பனை நறுக்கி விடவும்.
கப்பின் மேல் இரு புறமும் ஓரத்தில் ஓட்டைகள் போட்டுக் கொள்ளவும். அதில் ரிப்பன் சுற்றிய கயிறில் ஒரு இன்ச் அளவு விட்டிருக்கும் லேஸ் பகுதியை இரண்டு ஓட்டையிலும் விட்டு கயிறை வளைத்து கட்டி விடவும்.
இப்போது அழகிய பூ வாளி ரெடி. உபயோகமற்ற கப்புகளை தூக்கி எரியாமல் இதுப்போல் செய்து குழந்தைகளுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுபர்ப் ஜீவா. :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

பார்க்கவே சூப்பெர். ஒரு சின்ன ஹெல்ப் ஸ்டாக்கின் துணி எங்கு கிடைக்கும்

அனைத்துக் க்ராஃப்ட் கடைகளிலும் கிடைக்கும் தாரணி. இந்தியச் சகோதரிகள் வந்து மேலும் விபரம் சொல்லுவார்கள்.
வீட்டில் பயன்படுத்திய பழைய ஸ்டாக்கிங்க்ஸ் இருந்தால் டை பண்ணியும் பயன்படுத்தலாம்.
இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta