சுண்டு வற்றல் குழம்பு

தேதி: May 28, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

கொண்டைக்கடலை - 100 கிராம்
சுண்டு (சுண்டைக்காய்) வற்றல் - 15
மாங்கொட்டை வற்றல் - ஒன்று
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவேண்டும்.
மாங்கொட்டையை குறைந்தது 3 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த மாங்கொட்டையிலிருந்து சதை தனியாகவும் கொட்டையில் இருக்கும் வெள்ளை நிற பருப்பு தனியாகவும் பிரித்தெடுக்க வேண்டும்.
வெங்காயத்தை நான்காகவும், தக்காளி பொடியாகவும் நறுக்கி வைத்து கொள்ளவும்.
சிறிது அளவு எண்ணெயில் சுண்டு வற்றலையும், அந்த வெள்ளை பருப்பையும் வறுத்து எடுக்க வேண்டும்.
ஆறிய பின்பு இதனை பொடியாக இடித்து வைக்க வேண்டும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயம் கறிவேப்பில்லை சேர்த்து பொரிய விடவும்.
பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்கு குழையும்வரை வதக்கவும்.
இதனுடன் புளி தண்ணீர் சேர்க்கவும். பின்பு மிளகாய் தூள், தனியா தூள், மாங்காய் சதை, ஊறவைத்த கொண்டைக்கடலை மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொண்டைக்கடலை வெந்தவுடன் அரைத்துவைத்துள்ள பொடியை சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்கவிடவும். சுவையான சுண்டு வற்றல் குழம்பு ரெடி.


இதனுடன் விருப்பட்டால் மணத்தக்காளி வற்றலையும் சேர்த்து கொள்ளலாம். இந்த குழம்பில் சுண்டு வற்றல் மற்றும் மாங்கொட்டை சேர்ப்பதால் வயிற்றில் உள்ள பூச்சியை கொல்லும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி. மூர்த்தி அவர்களுக்கு,
தனியே மணத்தக்காளி வற்றலில் மட்டும் சமைத்துப் பார்க்க நினைத்தேன். மாங்கொட்டை வற்றல் போடாது விட்டால் பரவாயில்லைதானே?
கரண்டி அளவுகளிலும் ஒரு சந்தேகம், இங்கு நீங்கள் கொடுத்திருப்பவை மேசைக்கரண்டி அளவுகள்தானே?
குறை எண்ணாமல் ஒருமுறை குறிப்பினைச் சரி பார்த்து விடுங்கள், நெல்லிக்காய் அளவு?? :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா அம்மா நலமா??
tbsp- டேபிள் ஸ்பூன்
tsp - டீஸ்பூன்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் லக்ஷ்மி,
நான் நலம். நீங்களும் நலம்தானே?
நான் இப்படி எதையாவது கோட்டை விடுவேன் என்று தெரியும். :) சட்டென்று உதவிக்கு வந்து விட்டீர்கள்.
மிக்க நன்றி. :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா தவறை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி. அளவில் ஒரு குழப்பமும் இல்லை. மாங்கொட்டை இல்லை என்றாலும் பரவில்லை. தேவைஎனில் புளியின் அளவை கூட்டி கொள்ள வேண்டு. மேலும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

லக்ஷ்மிஷங்கர் உங்களின் துரிதமான பதிலுக்கு நன்றி.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மாங்கொட்டை வடகம் என்பது மாம்பழம் சாப்பிட்டு கொட்டையே காய வைக்கவேண்டுமா//மிளகாய் தூள், தனியா தூள், மாங்காய் சதை, ஊறவைத்த கொண்டகடலை மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.//இதில் சதை காய்ந்தததை போட வேண்டுமா?
அன்புடன்,சுபத்ரா.

with love

மாங்காவின் இரு பக்க சதை பகுதியை வெட்டி எடுத்துவிட்டு மீதமுள்ள கொட்டை பகுதியை காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த காயவைத்த கொட்டையின் உள்ளே வெள்ளை நிறத்தில் ஒரு பருப்பு இருக்கும். அதை எண்ணையில் வறுத்தரைக்க வேண்டும். காயவைத்த மாங்கொட்டையில் பருப்பை நீக்கிவிட்டு மீதமுள்ள (கொஞ்சம் தான்) சதை பகுதியை வழித்து குழம்பில் சேர்த்து கொள்ள வேண்டும்.

லாவண்யா

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் லாவண்யா,
ரொம்ப நன்றி உங்களுக்கு.நாளை செய்து பார்க்க போகிறேன்.நாளை சந்திப்போம்.
அன்புடன்,
சுபத்ரா.

with love