பொட்டுக்கடலை கொதிக்கவைச்சது

தேதி: May 28, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொட்டுக்கடலை - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலைப் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

பொட்டுக்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை பொடியாக திரித்து வைத்து கொள்ளவும். அதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்பு பருப்பு வகைகளை சேர்த்து வதக்கவும்.
பருப்பு நன்கு சிவந்ததும் கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
எண்ணெய் மேல வந்ததும் இறக்கவும். இந்த சட்னி இட்லி தோசைக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.


இந்த வகை சட்னி காரமாக தான் இருக்க வேண்டும். வேண்டுமானால் உங்கள் காரத்திற்கு தக்க மிளகாயை கூட்டி அல்லது குறைத்து கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்