பொங்கல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
மிளகு - 1/2 தேக்கரண்டி
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 2" துண்டு
கருவேப்பில்லை - 1 கொத்து
முந்திரி - 25 g
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
நெய் - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. பாசிப்பருப்பை கழுவி வாசம் வரும் வரை வருத்துகொள்ள வேண்டும்.
2. அரிசியை கழுவி வருது வெய்த பாசிப்பருப்புடன் குக்கரில் பெருங்காயம் சேர்த்து ஒன்றுக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
3. பிறகு நெய் சூடாக்கி அதில் கருவேப்பில்லை, மிளகு, ஜீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்.
4. பொரிந்ததும் நறுகின பச்சைமிளகாய் மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதாக வேண்டும்.
5. கடைசியாக முந்திரி சேர்த்து தீயை அணைத்து விட வேண்டும்.
6. தாளித்தவைகளை வேகவைததுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

உளுத்தம் வடை மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட அமர்களமாக இருக்கும். மிகவும் குழயவேண்டாம் என்றால் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி செய்யலாம்.

Ms. Moorthy
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி. இது போல பல குறிப்புகள் இருந்தால் அனுப்பவும்
vazhaga vazhamudan

vazhaga vazhamudan

உங்களுக்கு என்ன விருப்பம் அல்லது என்ன குறிப்பு தெரிய வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

மேலும் அறுசுவையில் இல்லாத குறிப்பே இல்லை......

பொங்கல் செய்து பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று பின்னூட்டம் கொடுக்கவும்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பொங்கல் சுவையாக இருந்தது.
என் 3 வயது குழந்தைக்கு காளான் மிகவும் பிடிக்கும். அதை பற்றிய குறிப்புகள் அளிக்கவும். நாங்கள் பட்டை கிராம்பு அதிகம் சேர்க்க மாட்டோம். எனவே அதில் சில குறிப்புகள் அளிக்கவும்.
vazhaga vazhamudan

vazhaga vazhamudan

லாவண்யா எப்படி இருக்கீங்க,உங்க குழந்தை எப்படி இருக்கு? குழந்தை பேரு என்ன?
லாவண்யா மேலே தேடுக,னு இருக்கு பாருங்க அதில் உங்களுக்கு வேண்டுமென்கிற ரெசிப்பியோ இல்லை,வார்த்தைகளோ அல்லது பொருட்களின் பேரையோ போட்டு தேடுகவை கிளிக் செய்தீங்கனா அது சம்மந்தப்பட்டது நீங்கள் கிடைக்க பெறுவீர்கள். இங்க அறுசுவைல ஏராளமான சமையல் குறிப்புகள் இருக்கு,உங்க குழந்தைக்கு பிடித்ததை செய்து கொடுத்து அசத்துங்க.:)

ஹலோ கவிதா நான் நல்லா இருக்கேன். என் குழந்தை பெயர் ஹர்ஷவர்த்தினி. அவ பயங்கர குறும்பு. அந்த தேடுக பகுதியில் நான் பார்த்துவிட்டேன். நாங்கள் சைவம். அதில் அதிகமாக பட்டை, கிராம்பு உள்ளது. அது இல்லாமல் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். நான் Highways Dept, Rasipuram Work பண்ணுகிறேன். நீங்க என்ன பண்ணுறீங்க?நான் அறுசுவைக்கு புதிது. நீங்க எந்த ஊர்?
vazhaga vazhamudan

vazhaga vazhamudan

ரொம்ப சந்தோஷம் நீங்கள் பொங்கல் பற்றிய பின்னூட்டம் அளித்ததற்கு. காளானில் நிறைய ப்ரோடேஇன் உள்ளது. நீங்கள் அதை கொண்டு சூப், போரியல், வறுவல், பிரியாணி, கொழம்பு, குர்மா என்று எது வேண்டுமாணலாம் செய்யலாம். காளான் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் அறுசுவையில் உள்ளன. நீங்க கூறியது போல் பட்டை சோம்பு இல்லாமல் அதை செய்யலாம்.....அதற்கும் நிறைய குறிப்பு உள்ளது. பட்டை சோம்பு ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.

கவி சொல்லியது போல் தேடி பாருங்கள்.....அப்படியும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் கேளுங்கள் நான் உங்களுக்கு லிங்க் அல்லது குறிப்பை அனுப்புகிறேன்.

ஒரு சில குறிப்பின் லிங்க் உங்கள் வசதிக்காக.....

http://www.arusuvai.com/tamil/node/12400
http://www.arusuvai.com/tamil/node/12258
http://www.arusuvai.com/tamil/node/12257
http://www.arusuvai.com/tamil/node/12155
http://www.arusuvai.com/tamil/node/11703
http://www.arusuvai.com/tamil/node/11392
http://www.arusuvai.com/tamil/65_11

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி மேடம். நான் இதையெல்லாம் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்
vazhaga vazhamudan

vazhaga vazhamudan

Hai pongal supper.

ungal pathivai (pongal) indru seytthu parkiren

மேலும் சில பதிவுகள்