பச்சை பட்டாணி உருளை குருமா

தேதி: May 30, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (7 votes)

 

1. பச்சை பட்டாணி - 1/2 கப்
2. உருளை கிழங்கு - 1 (அ) 2
3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
5. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
6. பச்சை மிளகாய் - 1
7. பச்சரிசி - 1 தேக்கரண்டி
8. துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
9. உப்பு - தேவைக்கு
10. வெங்காயம் - 1
11. தக்காளி - 1
12. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, எண்ணெய் - தாளிக்க
13. கறிவேப்பிலை, கொத்தமல்லி


 

பட்டாணி ஊர வைத்து வேக வைக்கவும்.
உருளை மிதமான அளவு துண்டுகளாக வெட்டி வேக வைக்கவும்.
பச்சரிசி, துவரம் பருப்பு கழுவி ஊர வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இத்துடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த மசாலா சேர்த்து லேசாக வதக்கவும்.
இதில் வேக வைத்த பட்டாணி, உருளை, தேவையான நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு எடுக்கவும்.


சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, இடியாப்பம் அனைத்துக்கும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா,
உங்க பச்சை பட்டாணி உருளை குருமா செய்து சாப்பிட்டுட்டு நேரா வந்து இந்த கருத்து பதிவு செய்றேன்.. ரொம்ப நல்லா இருந்தது :D

எங்க அம்மாவும் கிட்டத்தட்ட இதே போல் செய்வாங்க... அவங்க கிட்ட வாங்கின ரெசிபிய எல்லாம் சமத்தா எங்க வீட்டிலேயே வச்சுட்டு வந்துட்டேன்... நேத்து நைட் திடீர்னு இந்த குருமா சாப்பிடனும்னு ஆசை... அம்மா ஆவுட் ஆப் ஸ்டேஷன்... சரி இங்கே தேடி பார்த்தால் வழக்கம் போல் சமய சஞ்சீவியா எனக்காக 2009லேயே இந்த குறிப்பை சேர்த்து வச்சிருக்கீங்க :)

ரொம்ப நன்றி...

பி.கு: இது அரட்டை இழை இல்லை என்பதால் உங்களிடம் நேராக மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன் மற்றபடி இன்னும் கிர்ர்ரர்ர்ர்... தான் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கொஞ்சம் கேப் விட்டு பதிவுகளை பார்த்தா புரியவே மாட்டங்குது ;)

//இது அரட்டை இழை இல்லை என்பதால் உங்களிடம் நேராக மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன் மற்றபடி இன்னும் கிர்ர்ரர்ர்ர்... தான் :)// - சுத்தம்!!! சுத்தமா புரியலயாக்கும்... :(

மொத்தத்தில் செய்தீங்க... பிடிச்சுது... இது மட்டும் புரியுது ;) ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு பிந்து அக்கா. இன்னைக்கு தான் நினைச்சேன்... பிந்து அக்கா சமைக்காம நமக்கு ஃபீட் பேக் குறைஞ்சு போச்சேன்னு ;) ஹிஹிஹீ. இனி சமைச்சு போடுங்கோ... நன்றி பிந்து.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கு என்ன, எனக்கே புரியலை :-)

வழக்கம் போல அப்போ ஏதாவது சின்ன விஷயம் ஏதாவது இருந்திருக்கும் :) நான் பிளாஷ்பேக் ஓட்டிட்டு வரேன் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கண்டுபிடிச்சிட்டேன்...
http://www.arusuvai.com/tamil/node/23150?page=31 & http://www.arusuvai.com/tamil/node/23150?page=33

ஒரே செல்லம் கொஞ்சல்ஸ் தான் :) இப்போ படிச்சா நான் தானா அதுன்னு ஆச்சர்யமா இருக்கு :) ஆனால் படிக்க நல்லா தான் இருக்கு ;-)

கிட்டத்தட்ட மூணு மாசத்திற்கு முன் நான் பதிவு செய்த மெசெஜிர்க்கு ரிப்ளை செய்து பிளாஷ்பேக் எல்லாம் ஓட்ட வைத்ததற்கு நன்றி :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நன்றி... இழை தந்ததுக்கு... படிச்சு நானும் சிரிச்சேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா