சிக்கன் தில்ருபா

வழங்கியவர் : asiya omar
தேதி : Sat, 30/05/2009 - 08:03
ஆயத்த நேரம் : 30 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடம்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு
- கோழிக்கறி - அரைக்கிலோ
- பால் - 1 கப்
- எண்ணெய் அல்லது பட்டர் - 3-4 டேபிள்ஸ்பூன்
- வெங்காயம் - 2
- இஞ்சி நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
- சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- சாஃப்ரான் - பின்ச்
- தயிர் - அரை கப்
- பாதாம்பருப்பு,வால்நட் கலவை - தலா கால் கப்
- பூசணி - சிறு துண்டு
- பச்சை மிளகாய் -2
- பாதாம், முந்திரி அலங்கரிக்க - விரும்பினால்
- கோழிக்கறியை சுத்தம் செய்து கழுவி நீர் வடிகட்டவும். பின்பு மஞ்சள் பொடி, தயிர், உப்பு போட்டு கலந்து வைக்கவும்.
- வெங்காயம் இஞ்சி அரைத்து எடுக்கவும். பாதாம், வால்நட் வகையை பால் விட்டு அரைத்து எடுக்கவும்.
- வாணலியில் எண்ணெய் அல்லது பட்டர் போட்டு காய்ந்ததும் அரைத்த வெங்காயம் இஞ்சி கலவையை போட்டு வதக்கவும். பின்பு சிக்கன் சேர்த்து நன்கு பிரட்டி வேக வைக்கவும். நல்ல ப்ரவுன் கலர் வர வேண்டும்.
- அதனுடன் சில்லி பவுடர், கரம் மசாலா, பச்சை மிளகாய் மற்றும் பூசணியை நறுக்கி போட்டு சேர்க்கவும். அதில் அரைத்த பாதாம், வால்நட் கலவையை சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைத்து மூடி பிறகு திறக்கவும்.
- பின்பு பின்ச் சாஃப்ரான் பாலில் கரைத்து விரும்பினால் விடவும். இன்னும் விரும்பினால் பாதாம், முந்திரி வறுத்து சேர்க்கவும்.
- சுவையான ரிச் டேஸ்ட் உள்ள சிக்கன் தில்ருபா ரெடி.
- இதனை பஞ்சாபி ரொட்டி, நாண், சப்பாத்தி உடன் பரிமாறலாம்.
Note:
பாதாம் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து வால்னட்டுடன் சேர்த்து அரைக்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
20 நிமிடங்கள் 21 sec முன்பு
35 நிமிடங்கள் முன்பு
41 நிமிடங்கள் முன்பு
49 நிமிடங்கள் 11 sec முன்பு
59 நிமிடங்கள் 8 sec முன்பு
ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் முன்பு