கேரட் மசாலா ரைஸ்

தேதி: May 30, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 1 கப்
கேரட் - 3
வெங்காயம் - 1
வறுத்த வேர்க்கடலை - 2 தே.க
பட்டை - 1 சின்ன துண்டு
க்ராம்பு - 1
கடுகு - 1 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 1 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
நெய் - 1 தே.க

மசாலா
---------
கொத்தமல்லி - 1/2 தே.க
சீரகம் - 1/4 தே.க
வர மிளகாய் - 3
கொப்பரை தேங்காய் - 1தே.க


 

கடாயில் எண்ணெய் விட்டு மசாலா சாமன்களை
போட்டு நல்ல ப்ரவுன் கலர் வரும் வரை வறுத்து
பொடி செய்யவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
கொதிக்கும் தண்ணிரில் கேரட்டை தோல் சீவி முழுதாக
போட்டு 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சூடு ஆறியபின் கேரட்டை துறுவியில் துறுவவும்.
அரிசியை நன்றாக உதிரியாக வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, கறிவேப்பிலை
பட்டை, க்ராம்பு, கறிவேப்பிலை எல்லாம் போட்டு
துறுவிய கேரட் போட்டு நன்றாக கலந்து பச்சை வாசனை
போனதும் இறக்கி விடவும்.
சாதத்தை போட்டு உப்பு, கொஞ்சம் நெய், மாசலா தூள்
வறுத்த வேர்க்கடலை தூள் எல்லாம் போட்டு நன்றாக கலந்து
கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
இதில் பச்சை பட்டாணி,பூண்டும் சேர்க்கலாம்.


பாஸ்மதி அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

விஜி, இந்த ரைஸ் நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு குடுக்க நல்ல சத்தான ரைஸ். நன்றி உங்களுக்கு.