மாம்பழ புளிசேரி

தேதி: May 30, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாம்பழம் - 1
தயிர் - 2 கப்
மிளகாய் தூள் - 1/2 தே.க
மஞ்சள் தூள் - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப

தாளிக்க
-------

எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க
வற்றல் மிளகாய் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்

அரைக்க
--------

தேங்காய் - 1 கப்
சீரகம் - 1/2 தே.க
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2


 

மாம்பத்தை தோல் சீவி நல்ல பெரிய துண்டுகளாக்கவும்.
கொஞ்சம் தண்ணிர் விட்டு மாம்பழ துண்டுகளை
போட்டு வேகவிடவும்.
வெந்த மாம்பழ துண்டுகளை கொஞ்சமாக மசிக்கவும்.(கொஞ்சம் துண்டுகளாக
இருக்கவும்).

அரைக்கயுள்ளதை பாதி தயிரோடு அரைக்கவும். கடைசியில் அரைத்து எடுக்கும்போது
கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு அரைத்தெடுக்கவும்.
வெந்துள்ள மாமபழத்தில் அரைத்த விழுது மீதி தயிர் ( ஸ்பூனால
நன்றாக கலந்து போடவும்)உப்பு சேர்க்கவும்.
நுரைத்து வரும் போது அடுப்பிலிருந்து எடுக்கவும்.
ஒரு பானில் தாளிக்கயுள்ளதை தாளித்து குழம்பில்
போடவும்.


தயிரை நிறய்ய நேரம் கொதிக்கவிட கூடாது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இது என்னங்க குழம்பா சைட் டிஷ் ஆ டெஸர்ட் ஆ என்னது இது அப்படியே சாப்புடுரதா ஒன்னும் புரியலை விளக்கவும்