ப்ரோக்கோலி கீறீம் சூப் (குழந்தைகளுக்கு)

தேதி: May 31, 2009

பரிமாறும் அளவு: 3 - 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரோக்கோலி - 1 பெரிய பூ
கரட் - 1
உருளை கிழங்கு - 1
சிக்கென் குயூப் - 1 சிறியது
உப்பு - சுவைக்கேற்ப
பால் - 1 கப்
நீர் - 1 கப்
க்றீம் மில்க் 35% - 2 தே. கரண்டி


 

கொடுக்கப்பட்டுள்ள எல்லா மரக்கறிகளையும் சிறிதாக வெட்டவும்.
ஒரு பாத்திரத்தில் பால் , நீர்,சிக்கன் குயூப் மற்றும் வெட்டி வைத்த மரக்கறிகளையும் போட்டு அவிய விடவும்.
மரக்கறி நன்றாக வெந்ததும் ப்ளென்டரில் (blender) போட்டு மை போல அரைக்கவும்.
அரைத்ததை மறுபடியும் பாத்திரத்தில் ஊற்றி க்றீம் மில்க் கலந்து ஒரு கொதி வந்தததும் இறக்கவும்.
உப்பு தேவையென்றால் போடவும்.


சூப் தண்ணி போல் தேவை என்றால் சிறிது நீர் சேர்க்கலாம்.
சூப் தடிப்பாக தேவை என்றால் 3 தே. கரண்டி எண்ணை, 3 தே. மைதா கலந்து சூப் இறக்கு முன் விடலாம்.
இந்த கலவை விடும் போது கவனம் தேவை ஒரு கையால் கிளறிக்கொண்டே விடவும். இல்லா விட்டால் சூப் கட்டி பட்டுவிடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அனுஷா இது இங்குள்ள TIM ல் கிடைக்கும் சூப் போல வருமா ? ஏனெண்டா நிறையத்தடவை அதை செய்து பாத்து ஏமாந்து போனேன். அதுதான் எண்டா சொல்லுங்கோ நான் உடனே செய்து பாக்கிறன்.

சுரேஜினி

ஆமாம் சுரேஜினி இது Tim Hortons soup போல வரும். எனது கணவர் Resturantil வேலை செய்வதால் எங்கள் வீட்டில் இது அடிக்கடி செய்வோம். செய்து பார்க்கவும்.

அனுஷா சூப் செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.குறிப்புக்கு மிகவும் நன்றி.இவ்வளவு நல்ல குறிப்பாக இருக்கிறது ஆனால் உங்கள் குறிப்புக்களை அதிகம் காணவில்லையே.தெரிந்த எல்லாவற்றையும் கிடைக்கும் நேரத்திற்கேற்ப எங்களுக்கும் சொல்லி உதவலாமே?
எனக்கு இந்த ரெஸ்ரோரண்ட் சாப்பாடுகளை அப்பிடியே செய்து பழகுவதென்றால் மிகவும் விருப்பம்.முடிந்தால் இன்னும் நிறைய ரெஸ்ரோரண்ட் உணவுகள் கொடுக்கவும் பிளீஸ்.