உதவ வாங்கோ...

தினமும் காலைல என்ன டிபன் பண்ணனு ஒரே குழப்பமா இருக்கு எனக்கு...என் ஹஸ் எப்பவும் காலைல 7.45 கு ஆபிஸ்க்கு கிளம்பனும்.அதுக்குள்ள பண்ற மாறி எதாவது காலைல சாப்டற மாறி ஐடம்ஸ் சொல்லுங்கோ...பிரட்,இட்லி,தோசை ஐடம்ஸ் வேணாம்...வேற எதாவது தெரிந்தால் சொல்லுங்கோ...

அன்பு தோழி,
அம்மு.

ஹலோ அம்மு,

இங்கேயும் எல்லாரும் என்ன சமைக்கிறதுன்னுதான் தினமும் குழம்பி நிக்கிறோம். இதில, அப்பாக்கு ஒண்ணு, புள்ளைக்கு ஒண்ணுன்னு தனித்தனியா வேற சமைக்கணும்!! ரெண்டுல எது மிஞ்சிச்சோ அது நமக்கு..

அதிலயும் ஈஸியா செய்யக்கூடிய பிரட்,இட்லி,தோசை ஐடம்ஸ் வேணாம்னு வேற சொல்லிட்டீங்க.. ரொம்ப நக்கல்தான் போங்க!!

வேணும்னா, இந்த இடியாப்பம் குருமா, பரோட்டா சால்னா, ஸ்டஃப்ட் சப்பாத்தி, சேமியா பிரியாணி, பட்டர் நாண்-பட்டர் பனீர், புட்டு-கடலைக்கறி... இப்படி டிரை பண்ணீப் பாருங்களேன். காலையில டிஃபனுக்கு ஏத்த ஐடம்ஸ் இதெல்லாம்!! ;-D ;-D

பாவம் அம்மு பொண்ணு, என் பதிலால ஷாக்காகிப் போயி நிக்குது!! யாராவது வாங்க, வந்து டிப்ஸ் கொடுங்க!! (ஹோட்டல் டிப்ஸ் இல்லை, சமையல் டிப்ஸ்!!) ;-D ;-D

ஹலோ அம்மு,

மிஸஸ் ஹுச்சேய்ன் நிறைய ஐடம்ஸ் சூப்பரா புட்டு புட்டு வச்சுட்டாங்க.... நான் எங்க வீட்ல செய்றத சொல்றேன்...

காலைல, ஓட்ஸ், சேமியா ப்ரைடு, குளி பண்ணியாரம், பூரி, சப்பாத்தி, பால் சேமியா, பர்கல் உப்புமா, பொங்கல், அவல் சாதம், இட்லி உப்புமா, நூடுல்ஸ். இதுல ஏதாவது செய்யலாம்.

சில சமயம், கம்பங் கூழ் செய்வோம்... நம்ம ஊர் ஸ்டைலில்...

இதெல்லாம் காலையில் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். எங்கள் வீட்டிலும் அவர் 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விடுவார்... அதான் அனுபவம் பேசுது

ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லி விட்டேன். இன்னும் அனுபவம் மிக்க தோழிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்... வந்து சொல்லுவார்கள்... கவலை வேண்டாம்

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

என்னங்க மேடம் இது!!!உங்க பதிலை பார்த்து அதிர்ந்து விட்டேன்:-)சரி விடுங்க......நான் நக்கலுக்காக பிரட் ஐடம்ஸ் வேணாம்னு சொல்லல...என் ஹஸ்பண்டு க்கு புடிக்காது காலை உணவாக பிரட் சாப்பிட..ஏதோ அறுசுவை தோழிகள்
யாராவது உதவுவீங்கனு பாத்தா வறுத்து எடுத்துட்டீங்களே!!!நியாயமா?:-)

அன்புடன்,
அம்மு.

ரொம்ப நன்றி...ஓட்ஸ் எப்டி இருக்கும்?

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

1)பிட்ஸா செய்யும் பொழுது 475degree f 20 மினிட்ஸ் ப்ரீ ஹீட் பண்ணினால் போதுமா?
2) மோசரில்லா சீஸ் சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?
3)கிரீம் சீஸ் உடம்புக்கு நல்லது என்று சொல்கிறார்களே அது உண்மையா?
4)எனக்கு பால் பிடிக்காது அதற்க்கு சமமான சத்து எதில் உள்ளது?(பி.கு.)நான் வெஜிடேரியன்.
5)தினமும் மதியம் வெஜ் பிரியாணி சாப்பிடலாமா?அப்படி சாப்பிட்டால் உடம்பு கெடுமா?
6)பட்டை,கிராம்பு வாரத்திற்கு இரண்டு முறை சாப்பாட்டில் சேர்ப்பதால் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படுமா?(example..briyani,fried rice)
7) சமையல் செய்யும் அடுப்பு வெள்ளை கலர் எங்கள் வீட்டில் அதில் மஞ்சள் கொட்டிவிடுகிறது எவ்ளவு பத்திரமாக சமைத்தாலும் அதை துடித்தாலும் மஞ்சள் கலர் அப்டியே தங்கிடுத்து அதை போக வைக்க என செய்ய வேண்டும்?
தளிகா அக்கா .mrs.ஹுசைன்,லக்ஷ்மி,கீதா அக்கா,அதிரா அக்கா,ஜலீலா அக்கா,செல்வி மேடம் மற்றும் அறுசுவையில் உள்ள அனைவரும் யாருக்கு பதில் தெரிந்தாலும் கூறுங்கள்...
அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

அம்மு,

பயந்துட்டீங்களா என் பதிலைப் பாத்து?? எல்லாருக்குமே இந்தக் குழப்பம்தான் என்ன செயவதுன்னு.

உங்களின் முதல் 3 கேள்விகளுக்கு எனக்குச் சரியான‌ விடை தெரியவில்லை. எந்த சீஸானாலும் அளவோடு சேர்ப்பது நல்லது.

4. பால் பிடிக்கவில்லை என்றால் தயிர், மோர், சீஸ், வெண்ணெய் சேர்க்கலாம். கீரைகளில் கால்சியம் உண்டு.

5. தினமும் வெஜ் பிரியாணி சாப்பிடுவதால், என்ன நீங்கள் கொஞ்சம் கொழு கொழு என்று ஆகிவிடுவீர்கள், அதில் சேர்க்கப்படும் நெய்யால். அவ்வளவுதான். வேறொன்றுமில்லை. போரடிக்காதா தினமும் சாப்பிட?

பச்சரிசியும் உடல் எடையை அதிகரிக்கும். நெய், தேங்காய், முந்திரி முதலியவை இல்லாமல் சாப்பிடுவதென்றால் ஓ.கே.

6. ஏலம், பட்டை, கிராம்பு நான் தினமும் சேர்ப்பேன். ஜீரணத்திற்கு உதவுபவை அவை.

7. அடுப்பில் ஃபாயில் பேப்பர் போட்டு வையுங்கள். துடைக்க எளிதாக இருக்கும்.

ஆமாம் பயந்துட்டேன்...பிரியாணிக்கு ஒரு தேக்கரண்டி நெய் மட்டும் தான் சேர்ப்பேன்...ஐயோ எனக்கு போர் அடிக்கவே அடிக்காது...மூன்று வேளை பிரியாணினாலு சாப்டுண்டே இருப்பேன் .அலுமினியம் பாயிலில் நெருப்பு புடித்து விடாதா?
அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

என்ன அம்மூ..,

உங்கள் பெயர் அம்மூva... சோ ச்வீட்...!!! உங்கள் முழு பெயர் என்ன?
ok.. ஓட்ஸ் வெள்ளையா தூள் மாதிரி இருக்கும்... பவ்டர் கிடையாது. அதை பாலில் அல்லது மோரில் கலந்து குடிக்கலாம். உடம்புக்கும் ரொம்ப நல்லது.. சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுங்க

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

அப்புறம் அம்மு,

ஒரு பெரிய டவுட் லிஸ்டே குடுத்து இருக்கீங்க...
எனக்கு தெரிந்த வரை சொல்லுகிறேன்.,

1) நான் அவனில் பிஜ்ஜா செய்ததில்லை.. உங்கள் அவனில் உள்ள யூசர் மேனுவளை பாருங்கள்... அதில் இருக்கலாம்

2) & 3) எனக்கு தெரிந்து எல்லா சீசுமே கொளுப்பு தான். கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்.. அதனால் முடிந்த அளவுக்கு சீசை தவிர்க்க பாருங்கள்..

மீதி கேள்விகளுக்கு மிஸஸ் ஹுஸ்ஸேன் கரக்ட்டாக விளக்கம் தந்து விட்டார்...

மேலும் பட்டை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.. அதில் ஜீரணசக்தி மட்டும் இல்லாமல், உடம்பில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

பிட்ஸா Conventional Oven செய்யும் போது 450 டிகிரி பேக் மோடில் வைக்க வேண்டும். அதுவே தானாக சூடு ஆனதும் cutoff ஆகிடும். பிறகு பிட்ஸாவை 10-15 நிமிடம் அதன் crust தங்குந்தாற்போல் பேக் பண்ண வேண்டும்.

மோசரில்லா சீசில் carbohydrate அதிகம் இல்லை. 30g சீசில் 55g fat calories உள்ளது. அதனால் உடல் எடை கூடுமா என்று நீங்களே........

கிரீம் சீசில் saturated fat அதிகம் உள்ளது. அது bad cholestrol அதிகரிக்கும்.

உங்களிடம் துணி துவைக்கும் சோப்பு வில்லை இருந்தால் அது கொண்டு தேய்த்தால் மஞ்சள் கரை போய் விடும். அல்லது உங்கள் ஊரில் ப்ளீசிங் பவுடர் கிடைத்தால் அதை உபயோக படுத்தவும்.

பர்னரில் அந்த சில்வர் பிளட் இருக்கும் இடத்தில் சில்வர் பாயில் சுற்றி வைக்கவும். சில்வர் பாயிலில் ஆன ரெடிமேட் பிளட் போன்றது கடைகளில் கிடைக்கிறது. சில்வர் பாயிலில் தீ பிடிக்காது.

Ms. Moorthy
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்