வெஜிடேரியன் மட்டன்(காளான்) குழம்பு

தேதி: May 31, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பட்டன் மஷ்ரும் (காளான்) - 10
சோம்பு - 1 டீஸ்பூன்
பெரியவெங்காயம் - 2
தக்காளி - 2
பட்டை, இலவங்கம், அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 3 டீஸ்பூன்
கறிமசால் பொடி - 1 டீஸ்பூன்
கரம்மசால்பொடி - 1 சிட்டிகை
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் காளான் துண்டுகளை வெட்டி கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை, இலவங்கம், அன்னாசிப்பூ, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். பச்சைமிளகாய் போட்டு வதக்கிய பின் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும். பின் மஸ்ரும் துண்டுகளை போட்டு வதக்கி அதனுடனே கரம் மசால் தவிர மற்ற பொடிகளை போட்டு எண்ணெயிலேயே வதக்கி, பின் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்கவிடவும். குழம்பில் எண்ணெய் மிதக்கும்வரை கொதிக்கவிட்டு கெட்டியானவுடன், கரம் மசால் பொடி தூவி, தேங்காய் பால் பவுடரை 1/2கப் வெந்நீரில் கட்டியில்லாமல் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


இது எல்லாருக்கும் முக்கியமாக அசைவம் சாப்பிடாத ஆனால் மசாலா சுவை விரும்புபவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்.
இந்த குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பிரெட் எல்லாவற்றுடன் ஒத்துப்போகும். வேறுமுறை: காளான் சுவை பிடிக்காதவர்கள் காலிஃப்ளவர் போட்டு இதேபோல் செய்யலாம் அல்லது சோயா உருண்டைகள் கிடைத்தால், அதையும் வதக்கிபோட்டு இதேபோல் செய்யலாம். தேங்காய் பால் பவுடர் வேண்டாமென நினைத்தால், ஃப்ரெஷான தேங்காய் துருவலுடன், சில முந்திரித்துண்டுகள் சேர்த்து மைப் போல் அரைத்து சேர்க்கலாம். இதேபோல் செய்யலாம். மேலும் காளான் மிகவும் சத்து வாய்ந்த காய்.(பொட்டசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், செலெனியம் மற்றும் நார்சத்து கொண்டது. ஆனால் இது வாங்கும்போது நல்லதாக(தரமுள்ளதாக) பார்த்து ஃப்ரஷ்ஷாக வாங்கி, வாங்கியவுடன் ஓரிரு தினங்களில் பயன்படுத்த வேண்டும்.)

மேலும் சில குறிப்புகள்


Comments

முஷ்ரூம் குழம்பு சூப்பரா இருந்தது .

ராஜி மகேஷ்
Live & Let Live

குழம்பு பிடித்ததில் மகிழ்ச்சி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

Everyone will get a period of success or satisfaction during his life time

hi Ilavarasi,

ungal mushroom kulambu migavum nanraga irunthathu. en husbandkku mushromna pidikkathu, nan fry than pannuven, unga receipe senchu koduthen,avarukku romba pidichu irunthathu,muttonkulambu mathiri irukkunnu sonnar neenga entha uru? thanks,

sumi

Everyone will get a period of success or satisfaction during his life time

I am very glad to know that u and ur hubby enjoyed the dish.
thanks for ur feedback.
u pls go thro the "arimugam seyyalaam vaanga" izai in manram..there i posted my biodata..u can see other people biodata also and post urs also if u wish..
-with regards
elavarasi
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வீட்டீல் ட்ரையாக செய்வோம். நேற்று மதியம் மட்டன் காளான் குழம்பு செய்தேன், சுவை அருமை இரவுக்கும் அதேதான். மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126