எளியமுறை கேபேஜ்(முட்டைகோசு துவையல்)

தேதி: May 31, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

முட்டைக்கோஸ் - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 3 (உங்களின் காரத்திற்கேற்ப)
தக்காளி - பாதி
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


 

முதலில் முட்டைக்கோஸை சன்னமாக(மெல்லியதாக) நறுக்கி கொள்ளவும்.
பின் பச்சைமிளகாய், பூண்டு, தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், பச்சைமிளகாய், பூண்டு, புளி, தக்காளி, முட்டைகோஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
முட்டைகோஸ் நிறம் மாறி பழுப்பு நிறமாகும் வரை மிதமான தீயில் வதக்கவும். (கருகிவிடாமல் பார்த்து கொள்ளவும்)
பின் அனைத்தையும் மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைத்தால், சுவையான முட்டைகோஸ் துவையல் தயார். கடைசியாக எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.


முட்டைகோஸ் கொலஸ்ட்ராலை குறைக்கும். வைட்டமின் சி அதிகமுள்ளது. ஆனால் சிலருக்கு அதன் வாசனை பிடிக்காது. மேலும் சிலர் பெரிய முட்டைகோஸாக வாங்கி விட்டு எப்படி சீக்கிரம் தீர்ப்பது .என யோசிப்பார்கள். எவ்வளவு பெரிய முட்டைகோஸும் இந்த துவையல் செய்தால் உடனே காலியாகிவிடும்.
இது சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். தயிர் சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம். இட்லி, தோசை, ப்ரெட் என எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும். மிதமான தீயில்தான் வதக்கவேண்டும். பக்கத்திலிருந்தே. அதிகம் தீ கூட்டினால் கருகிவிடும்.வைத்துவிட்டு வறுவலை செய்தாலும் ஒரு சில பகுதி கருகிவிடும் அதனால் சிரமம் பார்க்காமல் தொடர்ந்து வதக்கவும். தொண்டையில் பிரச்னை இருந்தால்(அதாவது இருமல், ஜலதோஷம், காய்ச்சல் இருக்கும்போது மட்டும் முட்டைகோஸை கண்டிப்பாக தவிர்க்கவும்)

மேலும் சில குறிப்புகள்


Comments

சகோதரி இளவரசி!
இன்று இந்த துவையல் செய்தேன். நன்றாக இருந்தது. நான் சேர்த்த பச்சைமிளகாய் அரைக்கும் போதே அதிக கார நெடியாக இருந்ததால் 2மேசைகரண்டி உலர்தேங்காய்பூவும் சேர்த்தரைத்தேன்.

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

Sow.MohanaRavi
supper!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...