பீர்க்கங்காய் பால் கூட்டு

image

வழங்கியவர் : Vr Scorp

தேதி : திங்கள், 01/06/2009 - 09:10

ஆயத்த நேரம் : 10 நிமிடம்

சமைக்கும் நேரம் : 20 நிமிடம்

பரிமாறும் அளவு : 4

2
1 vote
Your rating: None
 

 

  • பீர்க்கங்காய் - 250 கிராம்
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • பச்சை மிளகாய் - 5
  • இஞ்சி பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
  • சோம்பு - 1/8 மேசைக்கரண்டி
  • பட்டை - சிறிய துண்டு
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • பால் - அரை கப்
  • உப்பு - தேவையான அளவு

 

  • பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாகவும், வெங்காயத்தை நீளமாகவும் தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் நறுக்கவும்.
  • எண்ணெய் சூடானதும் பட்டை சோம்பு கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.
  • வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை அடங்கும் வரை வதக்க வேண்டும்.
  • தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கியபின் பீர்க்கங்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • காய் நன்கு வெந்ததும் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.






பால் என்றால் தேங்காய் பால் தானே மேடம்

I recently bought one gold chain 22k... its not a 916 . What is the differnce between that

மேடம் எல்லாம் வேண்டாம். தாமதமாக பதில் தருவதற்காக மன்னிக்கவும். தேங்காய் பால் அல்ல காய்ச்சிய பசும் பால்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

916 என்பது தங்கத்தின் தரத்தை குறிக்கிறது. எப்பொழுது ஹால்மார்க் என்று ஒன்றுவந்துள்ளது. நம்ப அக்மார்க் மாதிரி.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!