சைனீஸ் ப்ரைட் ரைஸ்

தேதி: June 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

பாசுமதி அரிசி - 500 கிராம்
சுத்தம் செய்த இறால் - 300 கிராம்
புரோசின் பீஸ் (green peas) - 100 கிராம்
முட்டை - 2
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 3 பற்கள்
அஜினோமோட்டோ - 1/2 தேக்கரண்டியிலும் குறைந்தளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள்
கிராம்பு - 4
கறுவா - 2
ஏலக்காய் - 4


 

மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியை கழுவி அதனுடன் ஏலக்காய், கறுவா, கிராம்பு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை சேர்த்து விரும்பினால் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது மாஜரினும் சேர்த்து 700 மி.லி தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். அப்போது தான் சாதம் உதிர் பதமாக இருக்கும்.
இறாலை சிறுத் துண்டுகளாக நறுக்கி கால் தேக்கரண்டி உப்பு மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூளும் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி அதில் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து அடித்து அப்பமாகப் பொரித்து எடுத்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டை தட்டிப் போட்டு பிரட்டி வைத்திருக்கும் இறாலையும் போட்டு நன்கு வதக்கவும்.
இறால் நன்கு வதங்கியதும் அதனுடன் பீஸை போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் கறிவேப்பிலை, மீதமுள்ள உப்பு, மிளகுதூள், அஜினோமோட்டோ போட்டு பிரட்டி விடவும். அஜினோமோட்டோ சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும் சிறிதளவேனும் அதிகமானாலும் புளிப்பு தன்மை அதிகமாகிவிடும்.
இந்த கலவையில் வேக வைத்து ஆற வைத்த சாதத்தையும், துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முட்டையையும் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு பிரட்டி விட்டு சூடாகியதும் இறக்கவும். சமைத்து முடியும் வரை குறைந்த தீயிலேயே வைத்திருக்கவும்.
சுவையான சைனீஸ் ப்ரைட் ரைஸ் ரெடி. இதனை மட்டன் அல்லது சிக்கன் பிரட்டல், அவித்த முட்டை சேர்த்துப் பரிமாறவும். இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள் திருமதி. ரஸியா அவர்களின் குறிப்புகளிலிருந்து பார்த்து சில மாற்றங்களுடன் செய்த ப்ரைட் ரைஸ் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அசத்தலா இருக்கு உங்க குறிப்பு..விரைவில் செய்துட்டு பதில் தாரேன்..அதெப்படி நான் வந்தது தெரிஞ்ச பின் பதில் மெயிலா உங்களை.......

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியாங்கோ!!!!ஊருக்குப் போய், குட்டித்தம்பியை எல்லோருக்கும் காட்டியாச்சோ?, பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன், செய்ததும் வந்து சொல்லுங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா மேடம்
சைனீஸ் ப்ரைட் ரைஸ் நல்ல அழாகாக படம் எடுத்து இருக்கிரிர்கள்.
குறிப்புக்கு நன்றி.அஜினோமோட்டோ இல்லாமல் செய்தல் சுவை மாறுபடுமா?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

சுகா மிக்க நன்றி. அஜினோமோட்டோக்குப் பதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம்புளி சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் இப்பொழுதுதான் இந்த குறிப்பை பார்த்தேன்.சில மாற்றங்களுடன் சைனீஸ் ஃப்ரைட் ரைஸ்!!பார்க்கும் போதே நல்லா இருக்கு!மிக்க நன்றி!

அன்பு ரஸியா!!
நீங்கள் இதைக் காணவில்லை, கூட்டாஞ்சோறில் வந்து பதில் போடுவோம் என நினைத்திருந்தேன். பார்த்திட்டீங்கள் மிக்க சந்தோஷம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வணக்கம் அதிரா,
நான் உங்களுடைய இந்தக் குறிப்பைப் பார்த்து போன புதன்கிழமை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையும் அருமையாக இருந்தது. அடுத்து உங்கள் மீன் சொதி செய்து பார்த்து விட்டுச் சொல்கின்றேன். எனக்கு மீன் சொதி வைக்கத் தெரியாததால் இவ்வளவு நாளும் தேடிக் கொண்டிருந்தேன். இப்போ கிடைத்து விட்டது. நன்றி. இன்டைக்கும் நாளைக்கும் சைவம், அதன்பின் செய்து பார்த்து விட்டுச் சொல்கின்றேன்.

அன்புடன் பிருந்தா

பிறிந்தா நன்றி. இந்த மீன் சொதி, இங்கு சென்னையைச் சேர்ந்த ஒருவர் உடல் சுகமில்லாமல் இருக்கும்போது, இடியப்பமும் அவித்து, இந்த மீன்சொதியும் கொண்டுபோய்க் கொடுத்தேன், வீட்டுக்கு வந்ததும் போன் பண்ணினார், உடனே ரெசிப்பி தேவை தாங்கோ என்று.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா,நேற்று உங்கள் சைனீஸ் ப்ரைட் ரைஸ் செய்தேன்.ஓரளவு நன்றாக வந்தது.ஆனால் நினைத்த மாதிரி வரவில்லை.நான் செய்ததில் தவறு ஏதாவது இருக்கா தெரியவில்லை.இன்னுமொரு முறை செய்து பார்க்கின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

hi adhira,
i hav one doubt, how can v add mustard powder and curry leaves in chinese item...?