ப்ரெட் சாண்ட்விச்

தேதி: June 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

1. ப்ரெட் - 12
2. கேரட் - 1
3. பீன்ஸ் - 5
4. கோஸ் - 1 கப்
5. குடை மிளகாய் - 1
6. ஸ்வீட் கார்ன் - சிறிது
7. உப்பு - தேவைக்கு
8. மிளகு தூள் - தேவைக்கு
9. மைதா - 2 தேக்கரண்டி
10. பால் - 1/4 கப்
11. வெண்ணெய் - தேவைக்கு


 

காய் அனைத்தையும் சிறிதாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் காய் சேர்த்து உப்பு, மிளகு சேர்த்து 1 நிமிடம் மூடி வேக விடவும்.
இதில் மைதா சேர்த்து 1/2 நிமிடம் கிளரவும்.
பின் பால் சேர்த்து மீண்டும் 1/2 நிமிடம் சமைக்கவும்.
பிரெட் துண்டுகளில் உள் பக்கம் வெண்ணெய் தடவி இந்த கலவை வைத்து இன்னொரு துண்டால் மூடவும்.
ப்ரெட்டின் மேல் பக்கமும் வெண்ணெய் தடவி, டோஸ்டரில் (சாண்ட்விச் மேக்கர்) வைத்து டோஸ்ட் செய்யவும்.
சூடாக சாப்பிட சத்தான சுவையான சாண்ட்விச்.


மேலும் சில குறிப்புகள்