பாஸ்தா(சுலப முறை) சமையல் குறிப்பு - 12955 | அறுசுவை


பாஸ்தா(சுலப முறை)

food image
வழங்கியவர் : gandhiseetha
தேதி : திங்கள், 01/06/2009 - 13:50
ஆயத்த நேரம் : 20 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு

 

 • பாஸ்தா - 2 கப்
 • ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு (அல்லது சமையல் எண்ணெய்)
 • பூண்டு - 6 பல்
 • வெங்காயம் - 2 பெரியது
 • செலரி தண்டு - 1/2 துண்டு
 • தக்காளி - 5 (வேக வைத்து தோலுரித்து அரைத்து கொள்ளவும்)
 • தக்காளி சாஸ் - தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு
 • பார்ஸ்லே இலை - சிறிது
 • வர மிளகாய் - 5 (ஊற வைத்து அரைத்துக்கொள்ளவும்)
 • அஜினமோட்டோ - தேவைப்பட்டால்
 • சீஸ் துருவியது - சிறிது

 

 • ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவிற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் ஆலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டி, உப்பு சிறிது சேர்க்கவும்.
 • பின் பாஸ்தாவை சேர்த்து வேக வைக்கவும்( நூடுல்ஸ் போல்).
 • பிறகு உதிரி உதிரியாக இருக்கும் பாஸ்தாவை தனியாக எடுத்து வைக்கவும்.
 • கடாயை அடுப்பில் வைத்து ஆலிவ் எண்ணெய், பூண்டு, வெங்காயம், செலரி தண்டு, பார்ஸ்லே இலை, வரமிளகாய் விழுது சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
 • அதில் உப்பு, தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கியவுடன் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.
 • பிறகு வேக வைத்த பாஸ்தாவையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
 • பரிமாறும் போது பாஸ்தா, சீஸ் துருவியது, பார்ஸ்லே இலை, தேவைப்பட்டால் க்ரீம் சிறிது சேர்த்து கொடுக்கலாம்.
 • கெட்சப்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
பார்ஸ்லே இலை இல்லை என்றால் கொத்தமல்லித்தழை சேர்க்கலாம்.


சுலபமான

சுலபமான முறையாக உள்ளது.என்னிடம் leftover salsa store bought உள்ளது.அதனை tomato pureee ku பதில் உபயோகிக்கலாமா?
Anbe Sivam

Anbe Sivam

நன்றி.

நன்றி. சல்சாவும் உபயோக படுத்தலாம். ஆனால் காரம் பார்த்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு செய்வதாக இருந்தால் (tomato purie) நீங்களே தயார் செய்து விடுங்கள்.
Be Happy

Be Happy

பாஸ்தா

காந்திசீதா...

நலமா? உங்களின் இந்த குறிப்பு மிக எளிமையாகயும் சுவையாவும் இருந்தது. என்னவருக்கு சீஸ் பிடிக்காததால் சேர்த்து கொள்ள வில்லை.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

செய்து

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி....
Be Happy

Be Happy